Header Ads



ஜெனீவாவில் இலங்கை முஸ்லிம் சகோதரர் ஆற்றிய உரை

ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபையின் உலகளவில் சிறுபான்மையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான அமர்வு அண்மையில் நடைபெற்றது. இதன்போது இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் சகோதரர் பஸ்லீம் சுஹூத் ஆற்றிய உரையின் தொகுப்பு 

“உலகளவில் இடம்பெறும் இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் அதனால் உலக நாடுகளில் சிறுபான்மையாக வாழும் முஸ்லீம்கள் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக எடுத்துரைத்தார்.

அதில் இஸ்லாம் என்பது சமாதான மார்க்கம் என்பதை வலியுறுத்தியதுடன் இஸ்லாம் தோன்றிய காலத்திலிருந்து மனிதகுல வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் செய்த பங்களிப்பு குறித்து குறிப்பிட்டதுடன் இஸ்லாத்தின் பெயரில் தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபடும் ஒரு சில குழுக்கள் எந்த வகையிலும் இஸ்லாமிய விழுமியங்களயோ போதனைகளோ பிரிதிநிதித்துவம் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டார்.

முஸ்லிம் விரோத குற்றங்கள், முஸ்லீம்கள் மீதான திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் மற்றும் பாரபட்சங்கள் இந்தியா, இலங்கை மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளில் அதிகரித்து வருவதையும் சுட்டிக்காட்டியதுடன, இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக நாடுகளின் விரிவான அணுகுமுறை மற்றும் உயிரோட்டமான பொறிமுறைகளின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இறுதியாக புனித குர்ஆனின் 49:10 இலக்க வசனத்துடன் நிறைவுசெய்தார்.”      


-JAWAMIL-
       
ஜெனீவாவில் உள்ள ஜக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற சிறுபான்மை மக்களின் மனித உரிமை மகா நாட்டில் யாழ்பாணத்தை பிறப்பிடமாகவும் தற்போது கனடாவில் வசித்து வரும்  MOHAMED FASLIN suhood  கலந்து கொண்டு உரையாற்றியிருந்ததுடன் அதன் பின்னரான நேர அவகாசத்தில் சிறுபான்மையின மக்களுக்கான விஷேட உயர்பீட பிரதிநிதிகளுடனும் குறிப்பாக RITA IZAC ஆகியோருடன் தனிப்பட்ட சந்திப்பையும் ஏற்படுத்தி எமது மக்கள் மற்றும் மியன்மார் மக்கள் சார்பாக பூரண விளக்கத்தையும் வழங்கியிருந்தார் அல்ஹம்துலில்லாஹ் !எமது அமைப்பின் அபிலாஷையை செவ்வனே செய்து முடித்தமைக்கு நாம் மனதார வாழ்த்தி நன்றி யையும் தெரிவித்துக் கொள்கிறோம் ஜஸாக்ஹல்லாஹ்ஹைர்.இவர் JAFFNA MUSLIM COMMUNITY INTERNATIONAL ன் இஸ்தாபக உறுப்பினறும் மனித உரிமை தொடர்பான குழுவின் பொறுப்புதாரியாக கடமையாற்றுவதும் குறிப்பிடத்தக்கது.இந்த நிகழ்வின் பின் பிரான்சில் இரண்டு நாள் தங்கியிருந்து அமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் இலங்கை இனவாத பிரச்சினை ,வடமாகண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம்  மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் உறவுகளுக்கு எம்மாலான உதவி ஒத்துழைப்புகளை ஏற்படுத்தி கொடுத்தல் ,அத்துடன் சகல இன சமூகங்களுடனும் சக வாழ்வை மேம்படுத்துவதற்கான பொறிமுறைகள் சம்பந்தமாக மிக நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது குறிப்பிட்டதக்கது 

5 comments:

  1. இலங்கை வாழ் முஸ்லிம்களின் பிரச்சனைகலை சரவதேசமயப்படுத்தவேனும் என்ற நோக்குடனும் உருவாக்கப்பட்ட அமைப்பானது இந்த அமைப்பானது இலங்கை
    சிறுபான்மை மக்களுக்காகவும் குரல் கொடுக்கும் அந்தவகையில் எம்மாலான எல்லோருடைய பங்களிப்பையும் வேன்டிய வன்னம் உள்ளன.
    இந்த வகையில் ஜப்னா முஸ்லிம் இனையத்திற்கும் வாழ்த்துக்களை தெறிவித்துக்கொள்கின்றனர்.

    ReplyDelete
  2. Masha Allah. Your contribution fully effective Insha Allah

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ் உங்களினதும் உங்கள் அமைப்பு உறுப்பினர்களினதும் பாவங்களை அல்லாஹ் மன்னிப்பானாக.உங்கள் அனைவருக்கும் சிறந்த பாதுகாப்பை தருவானாக.ஆமீன்.

    ReplyDelete
  4. UNO TOTALLY ISREAL AMERICA AGENT.MAY ALLAH ALLAH HELP US

    ReplyDelete
  5. Masah Allah. Excellent Effort. Go ahead. Allah will help you

    ReplyDelete

Powered by Blogger.