மௌலவி ஆசிரியர் விவகாரம், ஜனாதிபதியிடம் செல்கிறது
அரசாங்கப் பாடசாலைகளில் நிலவும் மௌலவி ஆசிரியர் வெற்றிடங்களை அடுத்த வருட (2017) இறுதிக்குள் நிரப்புவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்திருந்தாலும் அதற்கு முன்னர் காலம் தாழ்த்தாது அந்நியமனங்களை வழங்குமாறு கல்வி அமைச்சரையும் ஜனாதிபதியையும் கோரவுள்ளதாக முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால்துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
மௌலவி ஆசிரியர் நியமனம் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
அரசாங்கப் பாடசாலைகளில் நிலவும் 1000 க்கும் மேற்பட்ட மௌலவி ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பில் பல தரப்பினரால் என்னிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு 635 மௌலவி ஆசிரியர் வெற்றிடங்கள் இருந்த போதும் 150 நியமனங்கள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளன. மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்கு சமயம் போதிக்கப்பட வேண்டியது அவசியமாகும். இஸ்லாமும் அரபும் அதில் தேர்ச்சி பெற்றுள்ள மௌலவிகளினாலே போதிக்கப்பட வேண்டும்.
இந்நிலையில் அடுத்த வாரம் இடம்பெறவுள்ள ஜனாதிபதியுடனான சந்திப்பில் இந்நியமனம் தொடர்பில் தெளிவுபடுத்தவுள்ளேன். கல்வி அமைச்சரூடாக இந்நியமனங்களைத் துரிதப்படுதுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-ARA.Fareel-
Post a Comment