ஆண்களைப் போன்று பெண்களுக்கு, சமஉரிமை வழங்க முடியாது - இஸ்லாமிய அமைப்பு
நைஜீரியா நாட்டில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு சம உரிமை அளிக்க வலியுறுத்தி கொண்டு வரப்பட்ட சட்ட மசோதாவை அந்நாட்டு தலைமை இஸ்லாமிய அமைப்பு நிராகரித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்துவர்கள் சம அளவில் உள்ளனர்.
மதக் கொள்கைகளுக்கு அதிகளவில் முக்கியத்துவம் அளிக்கும் அந்நாட்டில் இஸ்லாமிய பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக, இஸ்லாமிய மதத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு பரம்பரை சொத்தில் சரி பாதி பங்கு அளிப்பதில்லை என்பது சமூக ஆர்வலர்களின் முக்கிய குற்றச்சாட்டாகும்.
இது தொடர்பாக இஸ்லாமிய பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்படும் வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று முன் தினம் பாலின சட்ட மசோதா(gender equality bill) கொண்டு வரப்பட்டது.
கிறித்துவ மதத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்படுவதால் கிறித்துவர்கள் இந்த சட்ட மசோதாவை வரவேற்றனர்.
ஆனால், நைஜீரியா நாட்டின் தலைமை இஸ்லாமிய அமைப்பு இந்த சட்ட மசோதாவை அதிரடியாக நிராகரித்துள்ளது.
இது குறித்து இஸ்லாமிய அமைப்பின் தலைவரான Mohamed Sa'ad Abubakar பேசியபோது, ‘ஆண்களுக்கு அதிகளவில் சொத்தில் பங்களிக்கும் இஸ்லாமிய கொள்கைகளை நாங்கள் மீற முடியாது.
இஸ்லாமிய கடவுளான அல்லா வகுத்த கொள்கைகளில் ஆண்களுக்கு தான் அதிகளவில் சொத்தில் பங்கு உள்ளது. எனவே, இந்த வரையறையை மீறி சட்ட மசோதாவை ஆதரிக்க முடியாது’ என கருத்து தெரிவித்துள்ளார்.
What a good decision
ReplyDelete(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.
ReplyDelete(அல்குர்ஆன் : 4:34)
www.tamililquran.com
Dear Writer, If you are from Muslims... The article what you have posted, without explaining the Rule of Inheritance in Islam is completely wrong. If you are not a Muslim.. Please learn the Inheritance law in Islam.
ReplyDeleteJUST for your start and information.
If a Father had a Son and Daughter died and left the wealth, Then 2/3 will go to Son and 1/3 will go to the daughter as per the law of GOD. Same time people do not follow the next.. YES
After the death of the father, The Son has the responsibility to take care the FOOD, SHELTER and CLOTHING of his sister from His own 2/3 that he received from father. While the daughter who received 1/3 from her father is not need to spend from her inherited wealth and the brother can not ask her to spend from the 1/3. Rather It is the duty of the Son to take care his sister till she marry to another man and all the expenses is from the 2/3 that he (son) inherited.
THIS IS ISLAM.
NOW LET THE HUMAN and WOMEN rights organization to see the WHERE is the mistake in this LAW.
Dear writer.. There is not different GOD for MUslim and NOn Muslims. IT is only ONE GOD who created them and us has stipulated this well suited law..which human can not even think of is superiority.
GOD Almighty is perfect BUT it is we human are with weakness.
May Allah (TRUE ONE GOD) guide his creation to his will.
Eenda ippadi 😢
ReplyDeleteமுடிவு சரயானதே, ஆனால் உரிய தெளிவு அளிக்கப்படல்வேண்டும்.
ReplyDeleteஆண்களுக்கு சொத்துப்பங்கு பெண்களை விட அதிகமாக காறணம் ஆண்கள் பொறுப்பாளர்களாக இருப்பதனாலேயாகும்.
வீடுகட்டுதல், மகர் கொடுத்தல், திருமணமானபின் அப்பெண்ணின் அனைத்து தேவைகளையும் குறையிண்றி நிவர்த்தித்தல் போண்ற அனைத்துப்பொறுப்பும் ஆணையே சாரும்.
அப்போது பொருளாதாரத்தின் தேவை பெண்ணைவிட ஆணிற்கே அதிக தேவையுடையது.
ஆனால் கண்டிப்பாக பெண்களுக்கும் ஒரு பகுதி சொத்தில் சேரும் என்பது மறுக்கமுடியாத உன்மை.