யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறியுள்ள, முஸ்லிம் சகோதரியின் கண்ணீர் கதை
-யாழ்ப்பாணத்திலிருந்து பாறுக் ஷிஹான்
காலை 7 மணி இருக்கும் எனது தொலைபேசிக்கு புதிய இலக்கம் ஒன்றில் இருந்து அழைப்பு ஒன்று வந்தது.
அந்த தொலைபேசி அழைப்பை தொடர்பு கொண்டபோது அழும் குரலுடன் ஒரு பெண் தனது கதையினை என்னிடத்தில் கூறுகின்றார்.
தான் யாழ்ப்பாணத்திற்கு மீளக்குடியமர வந்து 8 வருடங்களுக்கு மேலாகின்றது.தற்போது தான் ஒரு சிறிய வீடு ஒன்றை கட்டி முடித்திருக்கின்றேன்.
.எனக்கு ஒரு பாரிய குறை மலசலகூடம் இல்லை.இதன் காரணமாக அண்டைய வீடு உறவினர்களின் வீட்டுக்கு சென்று வருகின்றேன்.
எனக்கு ஏதாவது வழிவகை செய்து மலசல கூடம் கட்டுவதற்கு உதவி செய்ய முடியுமா?இதனை உங்களிடம் கேட்ட எனக்கு வெட்கமாக உள்ளது.என தெரிவித்தார்.
அத்துடன் அப்பெண் இங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் அமைப்புகள் கூட இந்தா அந்தா கட்டி தருகின்றோம் என ஏமாற்றுகின்றார்கள் என கண்ணீர் மல்க குறிப்பிட்டார்.
இதனை சற்றும் எதிர்பார்ககாத நானும் அவருக்கு ஆறுதல் கூறி எனக்கு தெரிந்தவர்களுடன் கதைத்து இதனை செய்து தர முயற்சிப்பதாக கூறி தொலைபெசி அழைப்பினை துண்டித்து விட்டேன்.
இந்த விடயத்தை நான் எவர் மனதையும் நோகடிக்கும் வகையில் எழுதவில்லை.சற்று நாம் சிந்திக்க வேண்டும்.
இவ்வாறான பல விடயங்கள் ஒவ்வொரு மீள் குடியேறிய முஸ்லீம் மக்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது என்பதை நான் அறிவேன்.
இந்த குறைகளை சிலர் நிறைவு செய்ய சிலர் வெட்கத்தை விட்டு கேட்டு விடுவார்கள்.பலர் இவ்வாறாக கேட்டு விட்டு ஏமாற்றப்பட்டு ஏமாறி மீளவும் அகதி யாக வேறேங்கும் செல்கின்றார்கள்.இது தான் யாழ்ப்பாண முஸ்லீம் சமூகத்தில் நடப்பவை.
பல தரப்பட்ட அமைப்புக்கள் உள்ள இந்த சமூகத்தில் ஒற்றுமை என்ற விடயத்திற்கு இடமில்லை.என்றே கூறமுடியும்.
வீணான அதிக செலவுகளும் ஒன்று கூடல்களும் பொன்னாடை போர்த்தி அதனை செய்தியாக வெளியிடவுமே தற்போது மீள்குயேற்றத்தை அவர்களால் திருப்திப்படுத்த முடிகின்றது.
இதனை நான் ஏன் இங்கு குறிப்பிடுகின்றேன் என்றால் அப்பாவி முஸ்லீம் மக்களை ஏமாற்றி தங்கள் வயிறுகளை நிறப்பும் சிலர் இன்னும் அம்மக்களை ஏமாற்றவே முயல்கின்றனர். அந்த பாமர மக்கள் இருக்கும் வரை அவர்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டு தான் இருப்பார்கள்.
எனவே தான் மேற்குறிப்பிட்ட முஸ்லீம் பெண்மணி போன்று எனது ஊடக வாழ்வில் பல பேரை சந்தித்துள்ளேன். இவர்களின் வாழ்க்கை இன்று கூட அப்படியே தான் உள்ளது என்பதை நான் உரக்க சொல்வேன்.
இதனை இங்குள்ள வீணாக செலவுகளை மேற்கொள்ளும் பொது அமைப்புக்கள், தனவந்தர்கள், அரசி யல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
எமது சமூகத்தில் இவ்வாறாக இருக்கின்ற மக்களை இனங்கண்டு இனியாவது பாரபட்சம் பாராது உதவ வேண்டும்.அவ்வாறு உதவி செய்து அதிகளவான முஸ்லீம் மக்களை மீண்டும் யாழ் மாவட்டத்திற்கு மீள்குடியேற்ற நடவடிக்கை எற்படுத்த வேண்டும்.
அகில இலங்கை உலமா சபை கூட்டு ஜக்காத் முறையை தமது நிறுவனத்தின் கீழ் கொண்டு வந்து அதனை தேசிய ரீதியில் நிர்வகிக்க வேண்டும்.
ReplyDeleteஇந்நாட்டு முஸ்லிம்கள் அனைவரினதும் தரவுகள் அங்கு திரட்டப்பட்டு, ஜக்காத் பெறத் தகுதியானோரிடம் இருந்து அது சேகரிக்கப்பட்டு இவ்வாறான அதனைப் பெறத் தகுதியானோருக்கு மத்தியில் அது பங்கிட்டுக் கொடுக்கப்பட வேண்டும்.
பிராந்திய ரீதியிலான ஓர் இஸ்லாமிய ஆட்சியாக (கிலாபத்தாக) அது செயல்பட வேண்டிய அவசியம் இருக்கிறது.