விரைவில் மௌலவி ஆசிரியர் நியமனம், பிரதமர் வாக்குறுதி.
(கரீம் ஏ.மிஸ்காத்)
இராஐhங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அளித்த வாக்குறுதிக்கமைய எஞ்சியுள்ள 276 மௌலவி ஆசிரியர் நியமனங்களும் 2017ஆம் ஆண்டில் வழங்கப்படவுள்ளன. 2017 பாதீட்டில் 10 இலட்சம் வேலை வாய்ப்புக்கள், இதில் 48 ஆயிரம் ஆசிரியர் நியமனங்கள், அதில் 5 ஆயிரம் பட்டதாரி நியமனங்கள் என்ற கொள்கைப் பிரகடனத்தின் அடிப்படையிலேயே இந்த மௌலவி ஆசிரியர் நியமனங்களும் வழங்கப்பட உள்ளன.
மிக நீண்டகாலமாக வழங்கப்படாதிருந்து வரும் மௌலவி ஆசிரியர் நியமனம் பற்றி இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் தொடர்ச்சியாக அமைச்சர்கள், இராஐhங்க அமைச்சர்கள், மற்றும் பிரதி அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கும் கொண்டு வந்து கொண்டிருந்தது.
இவ்விடயம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்;தான் சபையின் கவனத்திற்குக் கொண்டு வந்து, வரவு செலவுத் திட்டத்தின் கல்வி அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தில் பிரஸ்தாபித்திருந்த அதேவேளை, இராஐhங்க அமைச்சர் எம்.எல்.எ.எம். ஹிஸ்புல்லாஹ் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டு வந்து பேச்சுவார்த்தையும் நடாத்தியிருந்தார்.
2008.07.29இல் கோரப்பட்ட விண்ணப்பத்திற்கமைய, 2008.11.22இல் போட்டிப் பரீட்சையும், 2009.11.27இல் நேர்முகப் பரீட்சையும் நடாத்தப்பட்டு, 9 மாகாணங்களின் 23 மாவட்டங்களிலும் 2008 மற்றும் 2009களில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கென பிரகடனப்படுத்தப்பட்ட 424 நியமனங்களில் 2008க்கான 148 நியமனங்கள் மாத்திரமே 2010இல் வழங்கப்பட்டுள்ளது. 2008க்கான 64 நியமனங்களும், 2009க்கான 212 நியமனங்களும் எஞ்சியுள்ளன. இந்நியமனங்களை வழங்வகுது தொடர்பிலேயே பேச்சுவார்த்தையின்போது வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நியமனங்களுக்காக போட்டிப்பரீட்சையில் உளச்சார்பு மற்றும் பொது அறிவு ஆகிய இரு பாடங்களிலும் 80புள்ளிகளுக்குமேல் பெற்று, தெரிவுப்பட்டியலில் இடம்பெற்று நியமனம் பெறாத அனைத்து மௌலவிமார்களும் 0772399156 உடன் தொடர்பு கொண்டு தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தேசியத் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Post a Comment