மட்டக்களப்பில் பச்சையாக இனவாதம், பேசிய நீதியமைச்சர்
பௌத்த பிக்குமார்கள் இனவாத மற்றும் மதவாத ரீதியில் செயற்படுவதால் தான் பிரச்சினைகள் ஏற்படுவதாக நாட்டில் ஒரு வித தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என நீதி மற்றும் பௌத்த விவகார அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்புக்கு இன்று (21) விஜயம் மேற்கொண்டிருந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இது போன்ற கருத்துக்களை முன் வைத்து விமர்சனம் செய்வோர் அதற்கான காரணங்களை கண்டறிந்து அதற்கான தீர்வை காண வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.
மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை போருக்கு முன்பு 1982ஆம் ஆண்டு 28 ஆயிரம் சிங்கள மக்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். அந்த எண்ணிக்கை தற்போது மிகவும் குறைந்துள்ளது.
அம்மக்களின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்த அவர்களுக்கு பாராளுமன்ற பிரதிநிதி இல்லை. மாகாண சபையிலும் பிரதிநிதித்துவம் இல்லை. அதன் காரணமாகவே அவர்களின் அடிப்படை பிரச்சினைகளை அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பேசுகிறார்.
அவர் சிங்கள மக்களின் பிரச்சினைகளை மட்டும் முன் வைக்கவில்லை. இம்மாவட்டத்திலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளையும் இந்த சந்திப்பின் போது எமது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
சிங்கள மக்களை பொறுத்தவரை அவர்கள் தங்கள் பாரம்பரிய காணி உரிமையை கூட இழந்துள்ளனர். சிறுபான்மை இனங்களாகவுள்ள கிராமத்தில் கிராம சேவை அதிகாரியிடம் சான்றிதழை கூட பெற முடியாதவர்களாக இருக்கின்றனர்.
வாக்காளர் இடாப்பில் வாக்காளராக பதிவு செய்ய மறுக்கப்படுகின்றது . பிரதேச செயலகங்களில் அதிகாரிகள் வேண்டா வெறுப்பாக நடந்து கொள்கின்றார்கள். சிங்கள மொழியில் ஒப்படைக்கும் கடிதங்கள் குப்பை கூடைகளில் வீசப்படுகின்றன. இதற்கு தீர்வு காணப்பட வேண்டும்.
இந் நாட்டில் சிறுபான்மை தமிழர் , சிறுபான்மை முஸ்லிம் என்ற வரை விலக்கணம் தவறானது. நகர் , மாவட்டம் மாகாணம் இன விகிதாசாரத்தில் தான் வேறுபாடு காணப்படுகின்றது
குறிப்பாக கொழும்பு மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக இருக்கின்றார்கள். ஆனால் கொழும்பு நகரில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள் இது தான் யாதர்த்தம்'' என மேலும் தெரிவித்தார்.
OKKAMA HONTHADAI BOMA SANTHOSHAI..
ReplyDeleteநீதிஅமைச்சரை அரசாங்கம் பயன்படுத்துகிறது என்பது தெளிவு
ReplyDelete