முஸ்லிம்களின் ஜுப்பா + அபாயா அரேபியாவின் கலாச்சாரமல்ல...!
இன்று முஸ்லிம்கள் பலர் ஜுப்பா அணிவது, முஸ்லிம் பெண்கள் அபாயா அணிவது என்பதெல்லாம் சுமார் 20 அல்லது 30 வருடங்களுக்கு முன்பு இல்லையே இப்போது மட்டும் இதற்கு என்ன அவசியம் வந்து விட்டது என சில சிங்கள பௌத்த இனவாதிகள் கேட்கின்றனர். அதனை அறிவற்ற சில முஸ்லிம்களும் ஆமா அதுதானே என ஆமா சாமி போடுவதையும் நாம் பார்க்கிறோம்.
மனிதர்களின் கலாச்சாரம், ஆடை பழக்க வழக்கங்கள் என்பன ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுப்படுத்த முடியாது. மனித பண்பாட்டு வளர்ச்சிக்கேற்ப ஆடை கலாச்சாரமும் மாறி மாறி வந்துள்ளது. ஆரம்ப கால மனிதர்கள் இலை குலைகளையே தமது ஆடைகளாக பாவித்தனர். பின்னர் ஆடு மாடுகளின் தோல்களை ஆடைகளாக நீண்ட காலங்களுக்கு பயன் படுத்தினர். அதனால் மனிதர்களின் பாரம்பரிய ஆடை என்பது இலைகுலைகளும், ஆடு, மாடுகளின் தோல்களும் என்பதால் அதுதான் இன்றைய நமது தேவை என எவனாவது சொன்னால் அவனை முழு முட்டாள் என்றுதான் கூறப்படும்.
இலங்கை மக்களை பொறுத்த வரை பருத்தி ஆடைகள் கண்டு பிடிக்கப்பட்ட பின்பு இலங்கை மக்களின் கலாச்சார ஆடை பின் வருமாறு இருந்தது.
சிங்களவர்கள்: ஆண்கள்: கீழே தைக்கப்படாத சாரன்துண்டு. தோளில் ஒரு துண்டு சால்வை. பெண்கள்: கீழே ஒரு பாவாடை மேலே ஒன்றும் இல்லை. இதற்கு ஆதாராமாக சீகிரிய ஓவியங்களை பார்க்கலாம்.
தமிழர்கள்: ஆண்கள் வேஷ்டி மற்றும் தலையில் அல்லது தோளில் ஒரு துண்டு. கீழ் சாதியினர் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொள்வர். பெண்கள்: ஒரு சேலை. அதன் நுணியால் மார்பை மறைத்துக் கொள்வர். ரவிக்கையோ ஒரு மண்ணாங்கட்டியோ இருக்காது. இதனை கோயில் சிற்பங்களை வைத்து கண்டு கொள்கிறோம்.
முஸ்லிம்கள்.: கீழே சாரம், மேலே கை வெணியன். தலையில் தொப்பி. சிலர் ஒரு துண்டு சால்வையை மேலே போட்டுக்கொள்வர். பெண்கள்: கீழே பாவாடை மேலே ஒரு சட்டை. தலையில் ஒரு துண்டு முக்காடு. சிலர் ரவிக்கை இல்லாத சாரியால் முக்காடு வரை போட்டுக்கொள்வர். இதனை மியுசியத்தில் பார்த்து புரிந்து கொள்ளலாம்.
இதுதான் அண்மையில் சுமார் 150 அல்லது 200 வருடங்களுக்கு முற்பட்ட இலங்கை மக்களின் கலாச்சார ஆடை. சிங்களவர்களும், தமிழர்களும், முஸ்லிம்களும் தமது பாரம்பரிய ஆடையை அணிய வேண்டும் என்ற கோரிக்கை சரியென்றால் மேலே உள்ளது போன்று உடை அணிந்தால் எப்படி இருக்கும்? அவற்றை கல்லூரிகளின் சீருடைகளாக்கினால் எப்படி இருக்கும்? நன்றாகவா இருக்கும்? இதனை எந்த இலங்கையனாவது ஏற்றுக்கொள்வானா?
அதே நேரம் மத்திய கிழக்கில் அறபு முஸ்லிம்கள் மத்தியில் பல்லாயிரம் வருடங்களாக ஜுப்பாவும் அபாயாவும் இருந்து வந்துள்ளது. இதற்கு ஆதாரமாக இயேசு நபியின் இறுதி இரவு பற்றி வரும் ஓவியம், புனிதாள் மரியம்மின் ஆடை போன்றவற்றை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
நமது நாட்டை வெள்ளையர்கள் கைப்பற்றியதன் பின்னர்தான் ஆடை அணிவதில் முன்னேற்றம் கண்டது. சிங்களவர்களும், முஸ்லிம்களும் மேலதிகமாக வெள்ளையனை பார்த்து கோட் அணிய பழகினார்கள். பின்னர் அது மாறி ஆங்கிலேயனை போல் சேட், லோங்ஸ், டை, கோட் என அணிந்தார்கள், பெண்கள் வெள்ளைக்காரி போல் மினி ஸ்கேட், குட்டை பாவாடை என்று தற்போது ஜீன்ஸ் வரை வந்து காவாசி உடையாகி விட்டது. இவ்வாறு அநாகரிகமும் ஆங்கிலேய கலாச்சார மோகமும் பரவியதால் எற்பட்ட விழிப்புணர்வு முஸ்லிம்களின் மத்தியில் நல்லதொரு ஆடை கலாச்சாரத்தை தோற்றுவித்துள்ளது. அதுதான் ஆண்கள் வெள்ளை ஜுப்பா, பெண்கள் அபாயா என்பதாகும். இந்த ஆடை சிலருக்கு பிடிக்காது என்பது வேறு. ஆனாலும் அதில் பல சௌகரியம் உள்ளன. வெள்ளை ஜுப்பா அணிவதால் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசத்தை தராது. ஒரு ஜுப்பாவை வருடம் முழுவதும் கழுவி அணிந்தாலும் அது வித்தியாசத்தை காட்டாது. கலர் ஆடை என்பது ஒரு வாரத்துக்கு தொடர்ந்து அணிந்தால் இது என்னடா இவன் பழையதையே போட்டுக்கொண்டு வருகிறான். என்பார்கள். பெண்களுக்கு கறுப்பு அபாயாவும் அது போன்றதுதான். அத்துடன் அது அவர்களுக்கு கௌரவமாகவும் இருக்கிறது.
ஆகவே, ஆடை அணிவது என்பது அவரவர் விருப்பத்தை பொறுத்த விடயமாகும். இதில் யாரும் மற்றவரை பார்த்து இதைத்தான் அணிய வேண்டும் என்றோ வேண்டாம் என்றோ வலியுறுத்த முடியாது. ஆனாலும் முஸ்லிம்களின் ஜுப்பா, அபாயா என்பன அரேபியாவின் கலாச்சாரமல்ல மாறாக ஹீப்று மொழி பேசிய இயேசு, மோசஸ் போன்ற மு}ஸ்லிம் தீர்க்கதரிசிகளின் ஆடையாகும் என்பதை சகலரும் புரிந்து கொள்ள வேண்டும்.
-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி
தலைவர், முஸ்லிம் உலமா கட்சி
காலத்துக்கு ஏற்ற மாற்று கருத்து சொல்லமுடியாத கருத்து குருத்தில் படும்படியான உண்மைகள்.
ReplyDeleteமிக நீண்ட காலத்துக்கு பிறகு மக்களுக்கு அதாவது முஸ்லிம்களுக்கும் மற்றும் மாற்று மத சகோதரர்களுக்கும் விளங்கும் மொழியில் ஒரு செய்தி சொல்லி உள்ளீர் .
மாஷா அல்லாஹ்
ReplyDeleteஅல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.
ReplyDelete(அல்குர்ஆன் : 33:21)