Header Ads



சிங்­கள மக்­களின் குர­லாக, மங்­க­ளா­ரா­மய தேரர் - நீதியமைச்சர் புகழாரம்


-விடிவெள்ளி-

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் சிறு­பான்மை சமூ­க­மான சிங்­கள சமூ­கத்தின் பிரச்­சி­னைகள் தொடர்பில் நாம் கவனம் செலுத்­துவோம். மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் சிங்­கள மக்­களின் குர­லா­கவே மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ரா­தி­பதி அம்­பிட்­டிய சும­ரண ரத்ன தேரர் செயற்­ப­டு­கின்றார் என்று  நீதி­ய­மைச்­சரும் புத்­த­சா­சன அமைச்­ச­ரு­மான விஜே­­தாச ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ரைக்கு விஜயம் செய்த அமைச்சர் விஜே­­தாச ராஜ­பக்ஷ அங்கு பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞான­சார தேரர் மற்றும் மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ரா­தி­பதி அம்­பிட்­டிய சும­ண ரத்ன தேரர் ஆகி­யோ­ருடன் கலந்­து­ரை­யா­டலில் ஈடு­பட்ட பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு  குறிப்­பிட்டார்.   இங்கு தொடர்ந்து அமைச்சர் குறிப்­பி­டு­கையில்,  

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் சிறு­பான்மை சமூ­க­மாக வாழு­கின்ற சிங்­கள சமூ­கத்தின் பிரச்­சி­னைகள் மற்றும் கோரிக்­கைகள் தொடர்பில் நாம் கலந்­து­ரை­யா­டினோம்.

அவர்­களின் பிரச்­சி­னை­க­ளையும் கோரிக்­கை­க­ளையும் எனது கவ­னத்­திற்கு  பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞான­சார தேரர் மற்றும் மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ரா­தி­பதி அம்­பிட்­டிய சும­ரண ரத்­ன தேரர் ஆகியோர் கொண்டு வந்­தனர்.

 அவர்­களின் பிரச்­சி­னை­களை தீர்த்து வைப்­பது தொடர்­பாக நட­வ­டிக்கை எடுப்போம். மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் சிங்­கள மக்­களின் குர­லா­கவே மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ரா­தி­பதி அம்­பிட்­டிய சும­ரண ரத்­தின தேரர் செயற்­ப­டு­கின்றார்.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் சிங்­கள மக்­களின் பிரச்­சி­னை­களை பேசு­வ­தற்கு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் இல்லை. அந்த வகை­யிலே அவர்­களின் பிரச்­சி­னை­களை வெளியில் கொண்டு வரு­வ­தற்­காக மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ரா­தி­பதி அம்­பிட்­டிய சும­ரண ரத்ன தேரர் குரல் கொடுக்­கின்றார்.

சிறு­பான்மை மக்­களின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­ட­வில்லை என கூறு­கின்­றனர். ஆனால் வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் பௌத்த மக்கள் சிறு­பான்­மை­யினர்.  அவர்­களின் பிரச்­சி­னை­களும் தீர்க்­கப்­படல் வேண்டும். இந்த நாட்­டி­லுள்ள பல கட்­சி­களின் ஆத­ர­வுடன் இந்த நல்­லாட்சி அர­சாங்கம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.  

இந்த நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வரும் போது பொருட்­க­ளுக்கு விலை குறைப்போம் என்று கூறி ஆட்­சிக்கு வர­வில்லை. அனைத்து சமூ­கங்­க­ளையும் இன, மத வேறு­பா­டின்றி வாழ வைப்போம் என்று கூறியே ஆட்­சிக்கு வந்­தது. அதனை இந்த அர­சாங்கம் நிறை­வேற்றி வரு­கின்­றது.

இன மத பேதமின்றி அனைத்து சமூகங்களையும் ஒரே நோக்கோடு எமது நல்லாட்சி அரசாங்கம் பார்க்கின்றது. இன மத பேதமின்றி அனைத்து சமூகங்களையும் அரவணைத்து இந்த நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகின்றது.

நான் பாராளுமன்றத்தில் இது தொடர்பாக இரண்டு முறை உரையாற்றினேன். அப்போது பல விமர்சனங்களும் என் மீது முன் வைக்கப்பட்டன என்றார். 

4 comments:

  1. ராஜபக்ச என்ற பெயர் இணைந்திருப்பதாலோ என்னவோ ராஜபக்ச களின் கடமையை செவ்வனே செய்து வரும் நீதி?அமைச்சரை சிங்கள சமூகம் அடுத்த தேர்தலில் தேர்ந்தெடுக்கிறதா பார்க்கலாம்...

    ReplyDelete
  2. pre planning to contest next president election. good luck to another rajapaksa . but too late as gotabaya already represent

    ReplyDelete
  3. NO Question...

    All communities in the country has problem and the government should look into the matter of all the communities SINHALEASE, HINDUS, MUSLIMS, CHRISTIANS and others too. BUT Minister should do this job with Government. His joining hand with RACIST Monk.. who already burnt the Aluthgama, seems not a good MOVE.

    DO and MUST save Sinhalease in all part of this land. they have their rights as any others.. So it is the duty of government to work for it. BUT JOINING You hand with proven racist.. is dirty.

    ReplyDelete
  4. BBS என்பது இனவாதிகள் இவர்களோடு கூட்டு சோர்ந்து நற்சான்றிதல் வழங்கும் இவரும் ஒரு இன வாதியோ,

    ReplyDelete

Powered by Blogger.