Header Ads



பள்ளிவாசலுக்கு காணி வழங்குகிறார் சம்பிக்க

-ARA.Fareel-

சவால்­க­ளுக்­குள்­ளா­கி­யி­ருக்கும் தம்­புள்ளை ஹைரியா ஜும்ஆப் பள்­ளி­வா­சலை இடம்­மாற்­று­வ­தற்கு தேவை­யான காணியை தம்­புள்­ளையில் வழங்­கு­வ­தற்கு மேல் மாகாண மாந­கர அபி­வி­ருத்தி மற்றும் பாரிய நகர திட்­ட­மிடல் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க இணக்கம் தெரி­வித்­துள்ளார்.

தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வரும் முன்னாள் மத்­திய மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மான அசாத்­சாலி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்­க­வுடன் நேற்று முன்­தினம் நடத்­திய பேச்­சு­வார்த்­தை­யி­னை­ய­டுத்தே இவ் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்­ளது.

தம்­புள்ளை பள்­ளி­வா­ச­லுக்கு 23.6 பேர்ச் உரி­மைக்­கான காணி உறு­தி­யி­ருப்­பினும் பள்­ளி­வா­ச­லுக்கு 41 பேர்ச் காணி வக்பு செய்­யப்­பட்­டுள்­ளது. எனவே பள்­ளி­வா­ச­லுக்­கு­ரிய 41 பேர்ச் காணி­யி­னதும் ஆவ­ணங்­களை அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க கோரி­யுள்­ள­தாக அசாத்­சாலி தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் இவ்­வி­வ­காரம் தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில்,

“தம்­புள்ளை பள்­ளி­வா­ச­லுக்­கென நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை தற்­போது ஒதுக்­கி­யுள்ள காணி மது­பா­ன­சா­லைக்கு எதிரே அமைந்­துள்­ளதால் அதைத் தவிர்த்து மது­பா­ன­சா­லை­யி­லி­ருந்தும் சுமார் 30 மீற்றர் தூரத்தில் காணி­யொன்­றினை ஒதுக்கித் தரு­மாறு பள்­ளி­வாசல் நிர்­வாகம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

அமைச்சர் சம்­பிக்க ரண­வக்­க­வு­ட­னான கலந்­து­ரை­யா­டலில் இவ்­வி­ட­யமும் ஆரா­யப்­பட்­டது.

தற்­போது பள்­ளி­வா­சலைச் சூழ வாழ்ந்து வரும் சுமார் 20 தமிழ், முஸ்லிம், சிங்­கள குடும்­பங்­க­ளுக்கும் பள்­ளி­வா­ச­லுக்­கென ஒதுக்­கப்­படும் காணிக்­க­ருகில் காணிகள் வழங்­கப்­பட வேண்­டு­மெ­னவும் அமைச்­ச­ரிடம் வேண்­டப்­பட்­டுள்­ளது.

சுமார் ஒன்­றரை மணி­நேரம் நடை­பெற்ற இக்­க­லந்­து­ரை­யா­டலின் பின்பு அமைச்சர் சம்­பிக்க தம்­புள்ளை பள்­ளி­வாசல் விவ­கா­ரத்­துக்கு விரைவில் தீர்வு பெற்றுத் தரு­வ­தாக உறு­தி­ய­ளித்­த­தா­கவும் அசாத்­சாலி தெரி­வித்தார்.

தம்­புள்ளை பள்­ளி­வாசல் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி தம்­புள்ளை ரங்­கிரி ரஜ­ம­கா­வி­காரை அதி­பதி இனா­ம­லுவே தேரரின் தலைமையிலான குழுவின ரால் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தம்புள்ளை புனித பூமியில் பள்ளிவாசல் இருக்கக்கூடாது அப்புறப்படுத்தப் படவேண்டுமென அன்று முதல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். 

2 comments:

  1. vade venavanam agai,balamu,balamu

    ReplyDelete
  2. 2012 முன்னர் தேரர் ஒளிந்திருந்துவிட்டு எதிர்க்க ஆளில்லையென்றதும் தேங்காப்பு சண்டியனாகிட்டார்

    ReplyDelete

Powered by Blogger.