Header Ads



நானென்ன செய்தேன்..?


நானென்ன செய்தேன்
அலெப்போவின்
அலறல் கேட்டும்

பச்சிளம்
பாலகர்களை
பாவிகள்
பலியெடுத்த போதும்

கலிமாச்சொன்ன எம்
சகோதரிகள்
கற்பழிக்கடும்போதும்
நான் என்ன செய்தேன்

ப்ரொபைல்
பிக்சரை சேஞ்ச்
பண்ணி
எத்தனை லைக்குகள் என
எண்ணிக்கொண்டிருந்தேனா?

அடுத்தவன்
ஊர் பலாய்
கழுவிக்கொண்டிருந்தேனா?

விடிய விடிய
ஒன்லைனில்
சாட் பண்ணி
விடிந்தபின்
சுபகையும் மிஸ் பண்ணி
எழுந்தவுடன் போனை
தேடினேனா ?

விடுமுறை நாள்தானே
பண்ணுக்காக படம்
பார்ப்போம் என 
சினிமாவில்
சீர்கெட்டுப்போனேனா ?

நான் மட்டும்
சீரழிவது போதாதென்று
போதாக்குறைக்கு
நான் இந்த சினிமா பார்க்கிறேன்
அந்த சினிமா பார்க்கிறேன் என
அடுத்தவனையும் தூண்டினேனா ?

அல்லது

அழுது புலம்பி
இறைவனிடம்
மண்டியிட்டேனா?

நடு நிசியில்
விழித்தெழுந்து
எம் ஈமானிய
உறவுகளுக்காய்
சுஜுதில்
விழுந்திருப்பேனா?

மிகப்பெரிய ஆயுதமான
துஆவை ஏந்தியிருப்பேனா ?

ஆம்
அலெப்போவுக்கவாக
நானும் ஆயுதம்
ஏந்தப்போகிறேன்

எல்லாவற்றையும் விட
வலிமையான ஆயுதம்
அனைவரும் கையில்
எடுப்போம்
அல்லாஹ்விடம்
இருகரம் ஏந்துவோம்
நடு நிசியில்
தஹஜ்ஜத்தில்
சுஜுதில் ஏந்தி நிற்போம்

-தன்ஸீம் செய்யது முகம்மது

1 comment:

Powered by Blogger.