Header Ads



அகதிகளை வழிமறித்து, கொலைசெய்த ஈரானிய கும்பல்கள்

(Abusheik Muhammed)

இன்று -17- காலை மனித நேயப் பணியில் எலப்போவில் இருந்து புறப்பட்ட இருபது பஸ்களையும் ஈரானிய கும்பல்கள் இடையில் தடுத்து நிறுத்தினர்.

மக்கள் அனைவரையும் இறக்கி கடும் சோதனைக்கு உட்படுத்தினர். அனைவரையும் பயங்கரவாதிகள் போல் நடத்தினர் . அனைவரின் உடைமைகள் (மொபைல் அலைபேசிகள் அனைத்தும்) பறிமுதல் செய்யப்பட்டன.

படத்தில் உள்ளவாறு படுக்க வைத்து பலரது தலையில் கால்களால் மிதித்து திட்டித் தீர்த்தனர். 3 சிவிலியன்களை சுட்டுக் கொன்றனர். மேலும் 7 பேரை கைது செய்தனர். கொல்லப்பட்டவர்களுள் ஒருவரது மனைவி கர்ப்பிணியாக இருந்தார். அவரது கண் முன்னே கணவரைச் சுட்டுக் கொன்றதால் ஏற்பட்ட அசம்பாவிதத்தில் அப்பெண்ணின் கருவும் கலைந்தது.

இந்த இழுபறியில் அந்த பயணிகள் அனைவரும் புறப்பட்ட இடத்துக்கே மீண்டு வர நேர்ந்தது.

சிரியப் படைகள் அலப்போவை வெற்றி கொண்டதாக கொக்கரித்தாலும் ஈரானிய மற்றும் லெபனானிய கூலிப் படைகளே பாதையில் நிற்கின்றனர்.

மக்கள் எல்லாம் அஸதை வாழ்த்துவதாக படம் காட்டும் ப்ரெஸ் டீவி உள்ளிட்ட ஈரானிய ஊது குழல் ஊடகங்கள் இந்த மக்களிடம் ரிப்போர்ட் எடுத்தால் உண்மை நிலவரம் என்னவென்று தெரியும் .


3 comments:

  1. எத்தனை அட்டகாசங்களைச் செய்து கொண்டு நாங்களும் முஸ்லிம்கள் என்று முனாபீக் நயவஞ்சர்கள் தான் இவர்கள்,இவர்களையும் நம்மவர்கள் நம்பி நாசமாகி விட்டார்கள்,இதுவெல்லாம் தெரிந்தும் எத்தனை பேர்கள் மெளனியாக உள்ளார்கள்

    ReplyDelete
  2. ஏன் ஈரானின் கும்பல் என்று எழுதியிருக்கின்றீர்கள்?வெளிப்படையாக ஷீயாக்கள் என்று எழுதியிருந்தாள் அவர்களைக் பற்றி தெரிந்துயிருக்கும் தானே.

    ReplyDelete
  3. ஞானசார தேரரும்் அவன் கூலியாட்களும் இவன்களைவிட நல்லவர்கள்!

    ReplyDelete

Powered by Blogger.