Header Ads



இலங்கை இராஜதந்திரிகளின் பாதுகாப்பு - அரசாங்கம் தீவிர கவனம்

இலங்கையின் சார்பில் வெளிநாடுகளில் கடமையாற்றும் இராஜதந்திரிகளின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் ரஷ்யாவின் இராஜதந்திரி துருக்கியில் வைத்து ஆயுததாரி ஒருவரினால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

அத்துடன் சில மாதங்களுக்கு முன்னர் மலேசியாவில் வைத்து இலங்கை உயர்ஸ்தானிகர் அன்சார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

மேலும் அண்மைக்காலமாக பல்வேறு நாடுகளிலும் தூதுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தீவிரமடைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

இந்நிலையில் அரசாங்கம் இலங்கையின் இராஜதந்திரிகளின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் தீவிர கவனம் செலுத்தியுள்ளது.

மலேசியாவில் தாக்குதலுக்குள்ளான உயர்ஸ்தானிகர் அன்சாருக்கு இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின் பிரகாரம் தற்போது மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைக்கு இலங்கையின் இராஜதந்திரிகள் 54 பேர் பல்வேறு நாடுகளில் செயற்படும் தூதரகங்களின் தலைமைப் பொறுப்பில் உள்ளனர் .

No comments

Powered by Blogger.