"வாயில் கிழங்கு நடாமல்.."
நாட்டையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் ஒரே விதமாக நேசிப்பவர்களாக இருந்தால், உள்ளூராட்சி சபைத் தேர்தல் அறிவிக்கப்படும் முன்னர் கலப்பு அரசாங்கத்தில் இருந்து விலகிக் காட்டுமாறு கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க சவால் விடுத்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கம் ஒன்றை அமைக்க போவதாக வாயில் கிழங்கு நடாமல், அதனை செயலில் ஒப்புவித்து காட்ட அவர்கள் இன்னும் சந்தர்ப்பம் இருக்கின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையை தெளிவுப்படுத்தும் நோக்கில் மினுவாங்கொடை பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி வெளியேறுங்கள் எனக் கூறாமல் கூறிக்கொண்டிருக்கும் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் எந்த வெட்கமும் இன்றி அவர்களுடன் இருக்கின்றனர்.
இப்படியான நிலைமையில் எதிர்காலத்தில் நடத்தப்படும் எந்த தேர்தலாக இருந்தாலும் கூட்டு எதிர்க்கட்சி தனித்து போட்டியிட நேரிடும்.
கூட்டு எதிர்க்கட்சி எதிர்வரும் தேர்தல்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் போட்டியிட்டு அரசாங்கத்தை நிச்சயமாக தோற்கடிக்கும்.
அரசாங்கத்தில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் அடுத்த தேர்தலில் மகிந்த தரப்பும் மைத்திரி தரப்பும் அடுத்த தேர்தலில் மீண்டும் இணைந்து போட்டியிடுவார்கள் என மக்கள் மத்தியில் பொய்யான கருத்தை பரப்பி வருகின்றனர்.
யார் என்ன கூறினாலும் அவர்கள் இந்த கலப்பு அரசாங்கத்தில் இருக்கும் வரை நாங்கள் அவர்களுடன் இணைய மாட்டோம்.
தமது அரசியல் வங்குரோத்து நிலைமையை மறைக்கவே அரசாங்கத்தில் இருக்கும் சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மக்கள் மத்தியில் இப்படியான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
தலையில் மூளை இருக்கும் எவரும் இந்த அரசாங்கத்தில் இணையவும் மாட்டார்கள், உதவி செய்யவும் மாட்டார்கள்.
இது மக்களுக்கான அரசாங்கம் இல்லை மக்களை வினையை செய்யும் அரசாங்கம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளை பாதுகாப்பதாக கூறுவோர் எப்படி ஆடை அணிந்து கொண்டு இந்த அரசாங்கத்திற்குள் இருக்க முடியும் எனவும் பிரசன்ன ரணதுங்க கேள்வி எழுப்பி எழுப்பியுள்ளார்.
Post a Comment