விமான நிலையத்துக்குள் தடை
விமான நிலையத்துக்குள் அனுமதியினை பெறாமல் சட்டவிரோதமாக போக்குவரத்து வசதிகளை வழங்கும் செயற்பாட்டினை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் வாடிக்கையாளர்களை தேடிக் கொடுப்பதன் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத செயற்பாடுகளை தடை செய்வதற்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளால் விமான நிலையம் மற்றும் விமானசேவை நிறுவங்கள் பாரிய அளவில் நெருக்கடிகளை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலைமையை கட்டுப்படுத்த தற்போதைய சட்டத்தில் போதியளவு விதிமுறைகள் காணப்படாத நிலையில், விமான நிலையத்தில் பல்வேறு நபர்களினால் மேற்கொள்ளப்படும் வாடிக்கையாளர்களைத் தேடி கொடுப்பதை தடுப்பதற்காக 2010 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க சிவில் விமான சேவை சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பில் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment