இலங்கைக்கு முழு ஒத்துழைப்பு - மலேசிய பிரதமர் அப்துல் ரசாக் உறுதி
மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, மலேசியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட இலங்கை உயர்மட்டக் குழுவுக்கும் மலேசிய அரசாங்கத்துக்கும் இடையில், இன்று வெள்ளிக்கிழமை (16), ஐந்து ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அந்நாட்டுப் பிரதமர் நஜீப் துன் அப்துல் ரசாக் ஆகியோருக்கிடையில், இன்று காலை, இருதரப்பு பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது.
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி செய்தல் ஆகியனவே, இலங்கை அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பாக உள்ளதென, ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். இந்நடவடிக்கைகளுக்கான முழு ஒத்துழைப்பையும் மலேசியா அரசாங்கம் வழங்கும் என்று, அந்நாட்டுப் பிரதமர், உறுதியளித்தார்.
Conditions apply!
ReplyDelete