Header Ads



ட்ரம்ப் ஆதரவாளர்களால், முஸ்லீம் சகோதரிக்கு கொடுமை

அமெரிக்காவில் முஸ்லீம் கல்லூரி மாணவி ஒருவர் 3 நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Yasmin Seweid (18) என்பவர் நியூயார்க்கில் உள்ள ஒரு முஸ்லீம் கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2ம் திகதியில் இருந்து அவர் கல்லூரிக்கு வரவில்லை.

பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் அவரது தந்தை பொலிசில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பொலிசார் காணாமல் போன யாஸ்மினை பல இடங்களில் தேடி வந்தனர்.

இந்நிலையில் யாஸ்மின் அவரது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள தகவல் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

கடந்த 1ம் திகதி யாஸ்மின் பேஷன் ஷோவில் கலந்து கொண்டுவிட்டு நியூயார்க்கில் உள்ள ஒரு சுரங்கப்பாதையில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது 3 நபர்கள் மது குடித்துவிட்டு யாஸ்மினிடம் தகராறு செய்துள்ளனர். இனவெறி வார்த்தைகளை பயன்படுத்திய அவர்கள் பின்னர் யாஸ்மினை தாக்க தொடங்கியுள்ளனர்.

நீ தீவிரவாதி தானே.. உடனே எங்கள் நாட்டை விட்டு உடனே வெளியேறு என்று தாக்க தொடங்கியதாக யாஸ்மின் தெரிவித்துள்ளார். அவர்கள் அடிக்கடி ட்ரம்ப்பின் பெயரை பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.

மேலும், அந்த நபர்கள் தன்னுடைய கைப்பையை பறித்து உள்ளே என்ன இருக்கிறது என பார்க்க முயன்றதாகவும், தலையில் அணிந்திருந்த முக்காடை அவிழ்க்க முயன்றதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக்கில் இது தொடர்பாக யாஸ்மின் எழுதியுள்ள பதிவு வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


8 comments:

  1. Fashion Show வில் கலந்துவிட்டு போனால் கூட மலக்குமார்கள் வருவார்களா? அதுவும் இரவில்.?
    நகைப்புக்காக மட்டும் இந்த செய்தியை வாசிக்கலாம்.

    ReplyDelete
  2. Dear brother and Sisters in Islam.., please don't take this as a serious issue as the said lady has come alone through a tunnel by attending to a ' fashion show'. So, it's clear that she is not practicing Islam, in which is the way Islam teaches us to be.

    ReplyDelete
  3. Dear brother and sisters.., don't take this matter as serious issue as the said lady has come alone on a tunnel path by attending to a 'fashion' show. So, it's clear that she is not practicing Islam the way Islam teaches us.

    ReplyDelete
  4. பெயர் யாஸ்மின் , மார்க்கம் இஸ்லாம் , போன இடம் பெசன் ஷோ , வந்தது தனியாக ................

    ReplyDelete
  5. Fashion Show ? Muslim participating ?

    May Allah protect our sisters.

    ReplyDelete
  6. முதலில் இந்த சகோதரிக்காக துஆ செய்வோம். அடுத்து இச்சகோதரி கடத்தப்பட்டாரா அல்லது ஒளிந்துகொண்டாரா என்பது தெளிவில்லாதுள்ளது. இவரது முகஙால் இயஙயக்கப்பாட்டில் உள்ளதால் கடத்தப்பட்டிருக்க நியாயமில்லை.
    எனவே முதலில் வீடுசென்று தந்தையின் உதவியுடன் பொலிஸில் முறைப்பாடு செய்திருக்கவேண்டும். இத்தகைய நிலை எமது நாட்டிலும் எதிர்காலத்தில் ஏற்படலாம். அள்ளாஹ் பாதுகாப்பானாக!
    இச்சந்தர்ப்பங்களில் பின்வரும் நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது நலவைத்தரும்.
    1.குறித்த இடத்திலிருந்து தந்திரோபாய அடிப்படையில் தப்பித்தல்.
    2.தந்தை/கணவன்/பாதுகாவலரக்கு உரிய இடம் மற்றும் சம்பவத்தை விபரித்தல்.
    3.தான் தற்போது ஒதுங்கியிருக்கும் இடத்தை அறிவதுடன் அங்குள்ள பாதுகாப்பை உறுதிசெய்தல்.
    4.பொலிஸாருக்கு தகவலளித்தல்.
    5.முடியுமாயின் முகஙால்/வட்ஸ்அப்பில் தகவலளித்தல்(அவசியத்தன்மையைப் பொறுத்து பின்னர் வில்லங்கமாவதுமுண்டு)

    ReplyDelete
  7. முதலில் இவர் பெண்ணுக்குரிய இஸ்லாமிய சட்டத்தை பேணி இருக்கிறாவா?ஒருவர் செய்யும் தப்புகளால் பல முஸ்லிம்கள் பாதிக்கப்படுகின்றார்கள்.உலகம் நாறிப்போய் கிடக்கிறது,இதில் இவர்களுக்கு தனிப்பிரயானம் எந்த வகையில் சரிப்பட்டு வரும்.

    ReplyDelete
  8. யாழ் முஸ்லீமுக்கு பணிவான வேண்டுகோள். மக்களை விழிப்பூட்டும் செய்திகளை வெளியிட்டால். நன்றாக இருக்கும் என்பது எனது பணிவான வேண்டுகோள்.

    ReplyDelete

Powered by Blogger.