இலங்கை முஸ்லிம்களுக்கு, ஒரு முன்னெச்சரிக்கை
அன்மையில் ஞானசேர தேரர் அவர்கள் அல்லாஹ்வை இஸ்லாத்தையும் மிகவும் கீழ்த்தரமாக அவமதித்து பேசி இருப்பதானது முஸ்லிம்களின் மனதை மிகவும் புண்படுத்தியுள்ளது. முஸ்லிம்கள் எதையும் தாங்குவார்கள.; ஆனால் அல்லாஹ்வுக்கோ நபியவ்ரகளுக்கோ தனது மாரக்கத்திற்கோ மாசு கற்பிப்பதை சகிக்கமாட்டார்கள். அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் அவனுடைய மார்க்கத்தையும் அவமதித்தவர்களை அவன் கடுமையாகப் பிடித்திருக்கிறான் என்பதை சரித்திரத்திலே நாம் பார்த்திருக்கிறோம். அத்துடன் மறுமை நாளில் அவ்ரகளுக்கு கடுமையான தண்டனையுண்டு. முழு உலகத்தையும் கிரயமாகக் கொடுத்தும் அதிலிருந்து அவர்கள் தப்ப முடியாது. அல்லாஹ் மிகவும் பொறுமையோடு அடாவடித்தனங்களை பார்த்துக் கொண்டிருபான் ஒரு நாள் திடீர் என்று பிடிப்பான் அதிலிருந்து அவரகள் தப்பவே முடியாது.
நபியவர்களை பைத்தியக்காரர,; சூனியகாரர் எனறெல்லாம் எதிரிகள் தூற்றிய போது நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு பதிலளிக்கவில்லை. தீன் அல்லாஹ்வுடையது. அல்லாஹ்வையோ அவனது தீனையோ தூற்றுபவர்களை அல்லாஹ் பிடிப்பான். அனைவரையும் அடக்குவதற்கு அல்லாஹ் சக்தியுடையவன். முழு பிரபஞ்சமும் அவனது பிடியிலிருக்கிறது. அவன் காற்றை நிறுத்தி விட்டால், நீரை பூமியினுள் உறிஞ்சிக் கொண்டால், மழையை நிறுத்தி விட்டால், சூரியனை உதிக்கச் செய்யாவிட்டால,; கண்ணின் ஒளியைப் போக்;கிவிட்டால். மூளையை செயலலிலளக்கச் செய்து விட்டால், உள்ளங்களுக்கிடையே அன்பை நீக்கி விட்டால,; பயிர்களை கரித்து விட்டால், கடலை கொந்தளிக்கச் செய்தால,; பூமியை அதிரச் செய்தால,; யாராலும் எதுவும் செய்ய முடியுயாது. இன்று இலங்கையில் இனக்கலவர காரிருள் மேகங்கள் சூழ்ந்திருக்கும் இக்கட்டான பதட்டமான இந்த நிலைமையில் முஸ்லிம்கள் சில முக்கியமாக பின் வரும் ஒழுங்குகளைக் கடை பிடிப்பது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும்.
§ பேரினவாத இறை மறுப்பாளர்களுடைய இந்த நடவடிக்கைகளுக்கு யாரும் உணர்ச்சி வசப்பட்டு செயல்படாதீர்கள். அதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அப்படி முன் யோசனையில்லாமல் செயற்பட்டால் அவர்களுடைய நோக்கத்தில் அவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள்.
§ இவர்களுடைய நடவடிக்கைகளுக்கு எதிராக எடுக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கை கள் மார்க்க சட்டத்த்துக்கும் நாட்டின் சட்டத்துக்கும் உற்பட்டதாக அமைய வேண்டும்.
§ பொதுபல சேன இயக்கமோ, ஞானசார தேரர் அவர்களோ சுயமாக இயங்கவில்லை. அவர்களின் பின்ணியில் இஸ்லாத்தினதும் முஸ்லிம்களதும்; சர்வ தேச எதிர்ப்பு சக்திகள் செயல்பட்டு வருகின்றன என்பதை முஸ்லிம்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்களது ஆலோசனைப்படியே இவர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கிறார்கள் என்பதை புரிந்து விவேகமாக முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டும்.
§ ஆட்சி மாற்றத்தை விரும்பும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் சிங்கள முஸ்லிம் கலவரத்தை ஒரு துரும்பாக பாவிக்க தந்திரம் செய்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
§ ஞானசார தேரர் மட்டும் எதிர்ப்;பு நடைவடிக்கைகளில் ஈடுபடுவதாக இருந்தால் நாம் பெரிதாக சிந்திகக் வேண்டிய அவசியமில்லை ஆனால் நிதி அமைச்சரின் பேச்சும் அன்மையில் நடந்த பொது பல சேன எதிர்ப்பு ஊர்வலங்களில் ஓய்வு பெற்ற இரானுணுவ வீரர்களும் பல்கலைக் கழக மாணவர்களும் கலந்து கொண்டதும் சிந்திக்க வேண்டிய விடயங்களாகும.; அடுத்து பிக்குகளை களமிறக்கி அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதே இவர்களின் அடுத்த கட்ட சதித் திட்டமாகும்.
§ அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா உற்பட அனைத்து இலங்கையிலுள்ள முஸ்லிம் இயக்கங்களும் முஸ்லிம் தலைவர்களும் நாட்டின் அமைதி விரும்பும் பெரும்பான்மை சகோதரர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். நம்மில் எவரும் தனித் தனியாக செயல்படாமல் அனைவரும் கூட்டாக செயல்பட வேண்டும.; ஒரு தனி மனிதர் அவசரப்பட்டு ஒரு தவரை செய்து விட்டால் முழு முஸ்லிம் சமுதாயமும் அதற்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
§ அவர்கள் செய்வது தவறு என்பதை தெளிவாகவும் இராஜ தந்திரமாகவும் அவர்களுக்கு உணர்த்த வேண்டும.; எந்தக் காரணம் கொண்டும் தர்க்கித்து அவரகளுடன் முரண்பட்டு பிரச்சனைகளுக்கு வழி வகுக்கக் கூடாது. ஆனால் அதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
§ அரசாங்கமும,;; பொலீஸாரும், நீதி மன்றமும் முஸ்லிம்கள் செய்யும் முறைப்பாடுகளுக்கு நடவடிக்கை எடுத்து சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டுவதற்கு முயற்சி செய்வதை அவதாணிக்க கூடியதாக இருக்கிறது.
§ பிரச்சினையான நேரங்களில் முஸ்லிம்கள் சமூக வலைத்தளங்கள் முலம் வதந்திகளைப் பரப்பாது சிந்தனையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
§ இன்று உலகில் முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகள் முஸ்லிம்களை அழிப்பதற்கு சதி செய்து கொண்டிருக்கும் போது நம் இஸ்லாமியர்கள் சில்லறைப் பிரச்சினைகளை வைத்துக் கொண்டு சண்டையிட்டுக் கொண்டிருப்பது மிகவும் வருந்தத்தக்க விடயமாகும். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதற்காக ஒருவருக்கொருவர் முரண்பட்டுக் கொள்ளக் கூடாது.
§ மேலும் இந்த நேரத்தில் முஸ்லிம் தலைவர்கனினதும் முஸ்லிம் இயக்கங்ளினதும் குறைகளை தேடிக் கொண்டு திரியாமல் கலிமா சொன்ன அனைத்து முஸ்லிம்களும் ஒற்றுமையாக நடந்து கொள்ள வேண்டும்.
§ இறுதியாக இது முஸ்லிம்களுக்கு ஒரு சோதனைக் காலம் என்பதை உணர்ந்து அமைதியாகவும் பொறுமையாகவும் பதட்டமடையாமலும் தடுமாற்றமடையாமலும் அல்லாஹ்விடம் நிலைமை சீராக துஆ கேற்க வேண்டும். இஸ்லாம் எமக்கு கற்றுத் தரும் நற்குணங்களை பிற மதத்தவர்களுக்கு காட்டி முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும்.
§ அல்லாஹ்வுடைய கட்டளைகளுக்கு பரிபூரணமாக அடி பணிந்து அலாஹ்விடம் எமது கவலைகளையும் பிரச்சனைகளையும் ஒப்படைத்து அல்லாஹ் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாப்பான் என்ற உறுதியான நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.
நபியுடைய உம்மத்தைப் பார் யா அல்லாஹ!;. அகதிகளாக இருக்கிறார்கள். அநாதைகளாக இருக்கிறார்கள். கேற்க பாரக்க யாருமில்லை யா அல்லாஹ!;. நாங்கள் செய்த பாவத்தின்காரணமாக கல்லையும் மண்ணையும் வணங்குபவர்கள் முன்னிலையில் எம்மை கேவலமாக்கி விடாதே!. சிரியாவிலும் யமனிலும் கஸ்மீரிலும் பாலஸ்தீனத்திலும் ஆப்கானிலும் ஈராக்கிலும் இலங்கையிலும் பாகிஸ்தானிலும் பர்மாவிலும்; உலகம் பூராவும் நபியுடைய உம்மத் அநியாயமாக கொலை செய்யப்படுகிறார்கள் யா அல்லாஹ!;. காபிர்கள் முஸ்லிம்கள் மீது அடர்;ந்தேறுகிறார்கள். நீ சக்தியுள்ளவன் யா அல்லாஹ!.; உனது சக்தியை நீ பத்ரிN;ல காட்டினாய். ஆத் தமூத் கூட்டத்தை அழித்துக் காட்டினாய். பிர்அவ்னை நீரில் மூழ்கடித்துக் காட்டினாய். காரூனை அழித்துக் காட்டினாய். நூஹ் நபியுடைய மக்களை வெள்ளத்தில் அழித்துக் காட்டினாய். எந்த சக்;தியோட நீ அன்றிருந்தாயோ அதே சக்தியோடு இன்னுமிருக்கிறாய்.
யா அல்லாஹ!; உன்னையும் இஸ்லாதத்தையும் முஸ்லிம்களையும் எதிர்க்கும் விரோதிகளுக்கு ஹிதாயத்தை கொடுப்பாயாக! அவரகளுக்கு ஹிதாயத் இல்லை எள்றால் அவரகளுக்கு எதிராக எங்களுக்கு உதவி செய்வாயாக! அனியாயம் செய்யும்; இறைமறுப்பாளரகளை நீ சபிப்பாயாக! அவர்களிடையே கருத்து வேறுபாட்டையும் குழப்பத்தையும் உண்டாக்குவாயாக! அவர்களுக்கு பஞ்சத்தையும் கொடுத்து சோதிப்பாயாக! அவர்களது பாதங்களை நடுங்கச் செய்வாயாக! மற்றவர்கள் படிப்பினை பெருவதற்குறிய உன்னுடைய தண்டனையை அவர்கள மீது இறக்குவாயாக! அவர்கள் மீது உன் பிடியை இறுக்குவாயாக! படைப்புகள் அனைத்தும் உன்னுடையதே. அவையனைத்தையும் எமக்கு சாதகமாகி ஆக்கித் தருவாயாக! உன்னை மறுக்கும் இறைமறுப்பாளரகளை;களின் உள்ளத்தில் நீ திடுக்கத்தைப் போடுவாயாக! அவர்களின் வார்த்தைகளிளே குழப்பத்தை உண்டாக்குவாயாக! உன்னுடைய விரோதிகளுக்கு எதிராக முஸ்லிம்களுக்கு உதவி செய்வாயாக! (ஆமீன்!)
Masha Allah. Perfect
ReplyDeleteMay Allah Bless All of Us with peace and Stick to ISLAM way and protect us from EMOTIONAL approach.
ReplyDeleteEnlightening information to all Brothers and Sisters.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,
ReplyDeleteஆட்சியாளர்களிடம் நீங்கள் வெறுக்கக் கூடிய விஷயத்தைக் கண்டால் பொறுமையுடன் இருங்கள், எவரேனும் ஒரு சாண் அளவேனும் ஆட்சியாளனுக்கு மாறு செய்வாராயின் அவர் அஞ்ஞான காலத்து மரணத்தையே தழுவ நேரிடும். (புகாரி)
பிற்காலத்தில் முஸ்லிம் ஆட்சியாளர்கள் தவறான போக்கைக் கையாண்டாலும் அவர்களுக் கெதிராக கலகத்தில் ஈடுபடுதல் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
அவரவர்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டால் ஒரு நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து அக்கிரமமும் அநீதியுமே மிஞ்சி நிற்கும். இதனாலேயே இஸ்லாம் இது விஷயத்தில் சரியான வழிகாட்டுதலை வழங்கியுள்ளது.
திருக்குர்ஆனும் நபி வழியும் நமக்கு வழிகாட்டுவது,
அநியாயமாக வீடுகளை விட்டு வெளியேற்றப்படாதவரை, மதச் சுதந்திரம் பறிக்கப்படாதவரை யுத்தம் செய்யக்கூடாது.
மேற்கண்ட கொடுமைகளை ஓர் அரசு செய்யாத வரை அரசாங்கத்தை எதிர்த்து கலகம் செய்யும் வகையில் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ளும் உரிமை கிடையாது.
4:75. பலஹீனமான ஆண்களையும் பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது? (அவர்களோ) “எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக; எங்களுக்காக உன்னிடமிருந்து தக்க ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக; இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக” என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.
மாஷாஅல்லாஹ், மிக ஆக்பூர்வமான கட்டுரை, இன்ஷாஅல்லாஹ் ஒருவிடயம் எமக்கு அரசின்மேல் நம்பிக்கை தருகிறது .
ReplyDeleteமொக்குசாரவை என் தூக்கி உள்ளே போடவில்ல? இது பலரது கேழ்வி.
ஆனால் அவன்போல் பேசிய பிரஸாத்தை உள்ளேபோட்டு ஒரு முறை பிணையையும் நிராகரித்து தற்போது கடும் நிபந்தனையின்கீளேயே விடுவித்துள்ளனர்.
செய்தது ஒரேசெயெலெண்றாலும் சாதாறண ஒருவரை தண்டிப்பதும் பிக்கு எனும் போர்வயிலிருப்பதை தண்டிப்பதும் இந்நாட்டில் சற்று சவாலான ஒண்றாகும்.
இருப்பினம் அரசு இக்கடும்போக்கிற்கு ஆதரவளிப்பதாக இல்லை...
மாஷா அல்லாஹ் மிகச்சிறந்த ஆக்கம்.சமூகம்சார் சமய நடவடிக்கைகளின் போது ஈமானிய உணர்வுகள் எம்மில் பலரிடம் துாரமாகிவிடுகின்றன.அதனால் இவ்வாறான ஞாபகமூட்டல்கள் கட்டாயம் தேவை. அடுத்து உரிமைக்காகப் போராடுவது எத்தகைய நிலையில் கட்டாயமாகிறது என்பதை சிஹாப் அலியின் கருத்துரை குர்ஆன் ஹதீஸ் மூலம் அழகாகத் தெளிவுபடுத்துகிறது.
ReplyDelete