மாதவிடாய் காலத்தில், ஒருநாள் விடுமுறை..?
கோரிக்கைகள் முன்வைக்கப்படும் பட்சத்தில், மாதவிடாய் ஏற்படும் காலத்தில், பெண்களுக்கு ஒரு நாள் விடுமுறை வழங்குவற்கான யோசனை அடங்கிய அமைச்சரவைப் பத்திரத்தை, அமைச்சரவையில் சமர்ப்பிக்கத் தான் தயாராக உள்ளதாக, மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்துள்ளார்.
இதுபோன்றதொரு நடைமுறை, சீனாவிலும் அமுலில் உள்ளதாகத் தெரியவந்துள்ளதை அடுத்து, அந்த முறைமையை இலங்கைக்கும் கொண்டுவருவதற்கு யோசனைகளை முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
“வேலைகளுக்குச் செல்லும் பெண்கள், இதுபோன்ற காலத்தில் வலியைத் தாங்கிக்கொள்ள முடியாத நிலையில், பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது நலன் கருதியே, இவ்வாறான யோசனையொன்று முன்வைக்கப்படவுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுபோன்றதொரு யோசனை, இதுவரைக்கும் எவராலும் முன்வைக்கப்படவில்லை என்றும், இந்த யோசனை முன்வைக்கப்பட்ட பின்னர், நடைமுறையில் ஏற்படும் சிக்கல்கள் தொடர்பில் விவாதிக்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Stupid this kind of law intraduce.Ladies if become sickness they should take sick holidays but not this way.
ReplyDeleteமாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: “அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்; அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்; பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.”
ReplyDelete(அல்குர்ஆன் : 2:222)