அலெப்போவில் பாரிய இனப்படுகொலை - கட்டார் குற்றச்சாட்டு, தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா
சிரியா அரசு படைப்பிரிவுகள் அலெப்போ நகரில் முன்னேறி செல்கையில், சிரியா அரசும், அதனுடைய கூட்டாளியான ரஷ்யாவும் தங்களின் தாராளகுணத்தை வெளிகாட்ட வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு செயலர் ஜான் கெர்ரி வலியுறுத்தியிருக்கிறார்.
சிரியாவின் எதிரணியை ஆதரிக்கும் அரசுகளுக்கு இடையில் பாரிஸில் நடைபெற்ற ஒரு கூட்டத்திற்கு பின்னர் பேசுகையில், அதிபர் அசாத் மற்றும் ரஷ்யாவின் கை ஓங்கி இருப்பதை கெர்ரி ஒப்புக்கொண்டார்.
அதிகாரம் இருப்போர் பேச்சுவார்த்தைகளை தொடங்குகின்ற நாகரீகத்தை கொண்டிருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
அமெரிக்க ராணுவ வல்லுநர்களை ஜெனீவாவில் சந்திக்கின்ற ரஷ்ய ராணுவ நிபுணர்கள், அலெப்போவை விட்டு வெளியேறுவோர் படுகொலை களம் நோக்கி செல்வதாக அமையாமல் இருப்பதற்கு உத்திரவாதம் அளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிரியா ஆட்சி, அலெப்போவில் இனப்படுகொலையை நடத்தி வருவதாக கத்தார் வெளியுறவு அமைச்சர் முகமது அல் தானி பாரிஸ் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார்.
Post a Comment