ஹிஸ்புல்லாஹ் வேதனை
நல்ல நோக்கத்துடன் பாராளுமன்றத்தில் தான் ஆற்றிய உரையை சிலர் திரிவுபடுத்தி மக்களை குழப்ப முயற்சிப்பதாக தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், சமகாலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் - பிரச்சினைகளை எதிர்கொள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமைப்பட வேண்டும் எனவும், தொடர்ச்சியாக விமர்சனங்கள் மாத்திரம் முன்வைக்கப்பட்டால் முஸ்லிம்களது பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதற்கு முஸ்லிம் எம்.பிக்கள் தயங்கி பின்வாங்குவார்கள் என்றார்.
அவர் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
அண்மையில் பாராளுமன்றத்தில் நான் ஆற்றிய உரை தொடர்பாக ஏராளமானவரகள் அதனை வரவேற்று பாராட்டுக்களையும் - நன்றிகளையும் தெரிவித்திருந்தனர். அதேபோன்று, இன்னும் சிலர் எனது உரைக்கு எதிரான விமர்சனங்களையும் - ஆலோசனைகளையும் வழங்கியிருந்தனர். எல்லோருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
பொதுபலசேன உள்ளிட்ட சிங்கள தேசிய வாத அமைப்புக்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்ற முஸ்லிம்களுக்கும் - இஸ்லாத்துக்கும் எதிரான பிரசாரங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் நாங்கள் எம்மாலான முயற்சிகளை செய்து வருகின்றோம். இவ்வாறான நிலையில் அண்மையில், நீதியமைச்சர் சிங்கள தேசியவாத அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து பேசியிருந்தார். இதன்பின்னர், ‘இனிமேல் முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்கள் நிறுத்தப்படும்’ என்ற வாக்குறுதி எமக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜனாதிபதியும் சகல தரப்பினருடனும் பேசியிருந்தார். இதன்போதும் ‘கலந்துரையாடல்கள் மூலமே பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்’ என்ற உறுதிமொழி எமக்கு வழங்கப்பட்டது.
எனினும், இந்த வாக்குறுதிகளை மீறி சிறுபான்மை மக்களுக்கு எதிரான பிரசாரங்களை மீண்டும் சிங்கள தேசிய வாதிகள் ஆரம்பித்துள்ளனர். இச்சந்தர்பத்தில் அல்லாஹ்வையும் - புனித அல்குர்ஆனையும் கடுமையாக அவர்கள் விமர்சித்திருந்தனர். இது தொடர்பில் அரசமட்ட தலைவர்கள், சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நாங்கள் கலந்துரையாடியபோது அவர்களது நிலைப்பாடு எமக்கு திருப்தியளிக்கவில்லை. இதனால் இந்த விவகாரத்தை நாங்கள் மேலும் முக்கியத்துவம் கொடுத்து ஆராயும்போது மாத்திரமே நாங்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வொன்றினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை நாம் உணர்ந்துகொண்டோம். அதன் அடிப்படையிலேயே முஸ்லிம் அலுவல்கள் அமைச்சு மீதான விவாதத்தில் இந்த விடயத்தை கடுமையாக பேசுவது என நாங்கள் தீர்மானித்தோம்.
குறித்த தினம் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் பாராளுமன்றத்தில் இருப்பதை சந்தர்ப்பமாக கருதி எமது சமூகத்தின் பிரச்சினையை அவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற நல்லநோக்கத்துடன் இரண்டு ரக்ஆத் சுன்னத்தொழுகையை நிறைவேற்றிவிட்டே நான் அன்றைய தினம் எனது உரையை ஆற்றியிருந்தேன். நான் மட்டுமல்ல அமைச்சர் ரிஷாட் பதியூதீன், இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி ஆகியோரும் அன்றைய தினம் ஆவேசமாக பேசியிருந்தனர்.
அல்லாஹ்வுடைய நாட்டம் எனது உரை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இதன் பின்னர் ஜனாதிபதி, பிரதமர், நீதியமைச்சர் ஆகியோர் தனிப்பட்ட முறையில் என்னுடன் கலந்துரையாடி முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தருவதாக வாக்குறுதி வழங்கியிருந்தனர்.
நல்ல நோக்கத்துடன் அல்லாஹ்வுக்காகவே இவ்வாறானதொரு உரையை பாராளுமன்றத்தில் ஆற்றியிருந்தேன். மாறாக அரசியல் நோக்கத்துக்காவோ, மக்கள் என்னை பாராட்ட வேண்டும் - புகழ வேண்டும் என்ற ஆசையிலோ அல்லது விமர்சனங்களை பெறவேண்டும் என்பதற்காகவோ இந்த உரையை நான் ஆற்றவில்லை என்பதை தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இந்த உரையை புகழ்பவர்கள் - விமர்சிப்பவர்கள் அனைவரும் அதனை நிறுத்தி விட்டு எமது சமூகத்தின் எதிர்கால பிரச்சினைகள் தொடர்பில் ஆராயுமாறும் -சிந்திக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.
நாங்கள் ஏராளமான பிரச்சினைகளை அரசியல் ரீதியாகவும் - சமூக ரீதியாகவும் எதிர்நோக்கியுள்ளோம் என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் உணர வேண்டும். இவற்றை எதிர்ப்பதற்கு நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எமது நிலைப்பாட்டை தெளிவாக அரசுக்கு கூறுவதற்கு ஒவ்வொரு முஸ்லிம் தலைமைகளும் தயாராக வேண்டும். கட்சி பேதங்களை மறந்து நாங்கள் ஒற்றுமைப்படும் பட்சத்திலேயே அது சாத்தியமாகும்.
“முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளின் போது நீங்கள் பேசினீர்களா? இப்போது ஏன் பேசுகிறீர்கள்?” என பல விமர்சனங்கள் என்மீது முன்வைக்கப்படுகின்றன. நாங்கள் அன்றும் இவ்வாறே பேசினோம். யதார்த்தமான நிலையை தெளிவாக பேசினோம். ஆனால், அப்போது எம்மால் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் மீண்டும் பேசுகின்றோம். எனவே, “பேசினோமா – பேசவில்லையா” என்ற கடந்த கால சம்பவங்களை வைத்து ஒருவரை விமர்சித்து பல சந்தேகங்களை கிளப்பிவிடுவதால் இனிமேல் இவ்வாறு எந்த அரசியல் தலைமையும் பேசுவதற்கு முன்வரமாட்டார்கள் - அவர்கள் தயங்குவார்கள் என்பதை கருத்திற்கொள்ள வேண்டும்.
பேசப்பட வேண்டிய ஒரு முக்கியமான விடயம் பேசப்பட்டால் அதனை வரவேற்று ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களையும் அவ்வாறு பேசுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொடுங்கள்.
நாங்கள் ஒரு சோதனைக் காலத்தில் உள்ளோம் என்பதை அனைவரும் உணர வேண்டும். பொதுபல சேன போன்ற அமைப்புக்கள் மாத்திரமல்ல இப்போதுள்ள பிரச்சினை. அரசியலமைப்பு திருத்தம் - தேர்தல் முறையில் திருத்தம் போன்ற பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பல யோசனைகள் முஸ்லிம்களுக்கு பாதிப்பாக அமைந்துள்ளன. இது தொடர்பில் நாங்கள் தொடர்ச்சியாக பேசிவருகின்றோம். இந்த விடயங்கள் தொடர்பில் முஸ்லிம் எம்.பிக்கள் அனைவரும் இணைந்து பேசவேண்டிய தேவையுள்ளது. எனவே, தொடர்ச்சியாக விமர்சனங்கள் மாத்திரம் முன்வைக்கபடும் போது இது தொடர்பில் பேசுவதற்கு யாரும் முன்வரமாட்டார்கள் என்பதை உணரவேண்டும்.
நாங்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை கலீமா சொன்ன முஸ்லிம்கள் என்ற ரீதியில் அனைவரும் ஒன்றினைந்து எதிர்க்க வேண்டும். இது தேர்தல் காலம் அல்ல. ஒரு கட்சி இன்னொரு கட்சியை விமர்சிப்பதும், ஒருவர் இன்னொருவரை விமர்சிப்பதுமாக இருப்போமானால் எமது உரிமைகளை வென்றெடுக்க எம்மால் முடியாது போய்விடும் என்பதையும் முஸ்லிம் சமூகம் உணரவேண்டும் - என்றார்.
மதிப்பிட்குரிய அமைச்சர் அவர்களே
ReplyDeleteஉங்கள் உரைக்கு நன்றி , அல்லாஹ் அதனை பொருந்திக்கொல்வானாக,
திருபுபடுத்த முடியாதவாறு இந்த சமூகத்தின் சார்பாக நீஙகள் உரை நிகழ்த்த வேண்டும். இது ஒன்றும் அரசியல் மேடை இல்லையே ..நீங்கள் ஆற்றிய உரை ஹன்சர்டில் பதியப்பட்டுள்ளது வரலாறு நெடுகிலும் அது திரிபுபடுத்தப்பட்டு பாவிக்கப்படலாமே..
இதன் பிறகாவது எமது அமைச்சர்மார் பொருத்தமான ஆலோசகர்களை நியமித்துக்கொல்வார்களா ?
Well said Sir.
ReplyDeleteBrother your fearless adress so amazing fantastic .don't worry about cowardice reactionay elements .
ReplyDeleteKeep it up . U raised your voice well in time . Mashallah.
அமைச்சர் கொள.ஹிஸ்புல்லாஹ் அவர்களே! நீங்கள் கவலைப்பட. வேண்டாம். நீங்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதில் தராமல் பிழையைச்செய்தவரை அவர் மறைமுகமாக நியாயப்படுத்தி நாம் அப்படித்தான் இருப்போம் என்பதை மாத்தறை அல்லது காலி மாவட்டத்தில் பிறந்த அவர் விளங்கப்படுத்தினார். இங்கு சிறுபான்மைக்கட்சிகளுக்கு ஒரு செய்தியுண்டு. அடுத்துவரும் உள்ளூராட்சித்தேர்தலில் ஒற்றுமையாக நின்று நாங்கள் இலங்கையைப்பிளவுபட விமாட்டோம். காசு பணத்துக்குக் காட்டிக்கொடுப்பவர்கள் அல்ல என்பதை உணர்த்த. வேண்டும். இந்த Risk ஐ எடுக்கவே வேண்டும்.
ReplyDeleteDear minister Hisbullah,
ReplyDeleteour muslim community is just blind and behind the hypocrisies muslim politicians who cheat them (like speak to muslim community one thing and when they meet others speak another to satisfy their bosses.... our community believe only the people act always same and no change in their life. but, you have realized at least now and have bravely spoken at the parliament which is a legal speech as it is in the hanzard. But, bloody haleem (minister) has criticized you because of only heartburning! and it means... he is another Hakeem or asath saly!
please do not bother of those permanent agents of anti-muslims, who are also against Risath minister (the one who always speaks and fights for muslims while facing lot of challenges from hypocrisy muslims and anti-muslims groups.)
We muslims who realize the seriousness of anti-muslim campaign always for you and pray Allah to protect all of us.
@ Niyas ur right our Muslim community is blind.
DeleteAfter one speech they already forgot who this Hisbullah was.
Apart from praising him on this occasion, can he be trusted ? Will he change his colour according to his position ? It's likely to happen.
May be after the defeat in the election if he has realized that only way stay is to serve the community then Alhamdulillah. That's we want as well. No one is perfect. If he has changed himself we all should welcome him.
நீங்கள் இதற்கு முன்பு எதையும் முஸலிம்களின் பிரச்சினைகளை கதைக்க்காமல் தற்போது உணர்ந்து பேசியதற்கு நன்றிகள் ஆனால் தமிழில் பேசியது சந்தேகம் அளிக்கின்றது நீங்கள் வைத்த கோரிக்கைகள் ஜனாதிபதி,பிரதமர்,பாதுகாப்பு அமைச்சர்,நீதி அமைச்சர்,ஏனைய பெரும்பான்மை புத்திஜீவிகளுக்கு இவர்கள் தமிழ் பாஷை தெரியாதவர்கள் உங்களுக்கு நன்றாக சிங்கள பாஷை தெரிந்தும் முஸ்லிம்களின் பிரச்சினைகள மிக முக்கியஸ்தர்கள் பொறுப்பானவர்கள் நன்றாக விளங்கி கொள்வதற்கு சிங்கள பாஷயில் கதைக்கவில்லை இவ்விடயம் அதிமானவர்களுக்கிடையில் சந்தேகங்களை உண்டாக்கியுள்ளது! நீங்கள் சிங்களத்தில் பேசியிருக்க வேண்டும் பின்பு தமிழ் மொழிபெயர்பு செய்து மக்களுக்கு மீடியாக்கள் பரப்பும்
ReplyDelete@ Riyal Abdullah correctly said.
Deleteநல்ல நோக்கத்துடன் அல்லாஹ்வுக்காகவே இவ்வாறானதொரு உரையை பாராளுமன்றத்தில் ஆற்றியிருந்தேன்.////நோக்கம் உண்மையாக இருந்திருந்தால் நிச்சயம் சிறந்த பெறுபேரை பெறுவீர்கள் மக்களும் பெறுவார்கள் தங்களின் கடந்த கால அரசியல் நகர்வுகளின் சந்தேகமே விமர்சிக்க காரணம் ஆயுதபோராட்டம் என்ற வாரத்தை பிரயோகம் ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்று அல்ல இளைஞர்களை உசுப்பேத்தும் வார்த்தை என்பதையும் தாங்கள் அறியாததல்ல....
ReplyDeleteRegardless of the Minister's changing political loyalty, the sentiments and frustrations, expressed by the Minister are very real and reflects the community
ReplyDeleteYour good intention with you and Allah ...Allah knows it and Allah reward for it ...
ReplyDeleteBut we should be careful when we talk about arming Muslim youths in public...youth may take your word out of context ...
But it is a good speech overall ..
To BBS to know this..
But make sure we work with all minorities ...to do this sort of warning..
Hope MR is watching everything..
Your loyaltiy with with MR or Ms
செரியான பதில்,அவர் என்ன நோக்கத்தில் பேசினார் என்பது நமக்கு தேவை இல்லை.அல்லாஹ் அறிந்தவன் ஆனால் பொருத்தமான நேரத்தில் மிகப் பொருத்தமான கருத்தை ஆணித்தரமாக அடித்துச் சொன்னார்.நல்லதோர் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது,வேற்றுமையிலும் ஒற்றுமை காணவேண்டிய நாம் ஒற்றுமையில் வேற்றுமைக்கு வழி தேடுகீறோம்.அவர் சொல்வது போன்று இது தேர்தல் காலம் இல்லை.என்பதை எல்லோரும் புரிந்தால் மிக நல்லது.அவரின் பேச்சைப் பார்த்தால் ஒரு சுய நலத்துக்காக அரசியல் ஆதாயத்துக்காக பேசிய தொணி இல்லை தற்போதைய பிரச்சினையை மனதில் வைத்து பேசியது நன்றாக புரிகீன்றது,(இவ்வாறு எழுதும் எனக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை நான் கிழக்கு மாகாணமும் இல்லை)
ReplyDeleteமுஸ்லீம் உம்மாவுக்காக பேசுகிறேன்
ReplyDeleteஎன்ற நிய்யத் இறுதி வரை இருக்க
வேண்டும் ,( சுய அரசியல் இலாபம் ,
பிரதேச வாதம் இனி தவிர்க்க பட
வேண்டும்.) இதற்காக புறப்பட்ட
பின்னால், உங்கள் இதயத்தில்
மன்னிப்பு என்னும் வாசல் திறந்திருக்க
வேண்டும். கூடவே அனைத்து
பாராளுமன்ற முஸ்லிம்களும்
உறுப்பினர்களும் உள்வாங்கப்பட
வேண்டும். இதில் இருந்து நழுவல்
போக்கை கடை பிடிக்கும் உறுப்பினர்
யாராக இருந்தாலும் அவரை
உடனடியாக சமூகத்திற்கு காட்டி
கொடுங்கள் . எல்லாவற்றிக்கும்
மேலாக ஜாமியாவுடைய பங்களிப்பு
இதற்கு முக்கியம் என்பதை மறந்து
விடாதீர்கள் . ஜஸாக்கல்லாஹ் .
சமூக நோக்கம் உள்ள அதிகமான சகோதரர்கள் உங்கள் உரையை வரவேற்றுள்ளார் ஒரு சில அரசியல் நோக்கம் உள்ள சகோதரர்கள் உங்கள் உரையை விமர்சித்து உள்ளார்கள் .நீங்கள் இறைவனுக்காக மட்டும் உங்கள் பணியை செய்து வந்தால் அதில் இடம்பெறும் சிறு சிறு தவறுகளை இறைவன் மறைத்து விடுவான் .எல்லா மனிதர்களின் கடிவாளங்களும் இறைவனிடமே உள்ளது .உங்கள் பணிகள் தொடரட்டும் .அல்ஹம்துலில்லாஹ்
ReplyDeleteAlhamdulillah good speech
ReplyDeleteOnly Allah knows What is in the heart. So it is not for us to dig into the matter. Rather It is time for UNITY to strengthen our force against the evil.
ReplyDeleteIf we have the habit of finding blames on each other.. there will no end to this and it will keep disunite our force.
JOIN Hand and Do not Blame or Do not advertise one. Rather Work for the PEACE of this nation together.
May Allah Unit us in correct path;
எமது சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியை அன்று இவர் இப்படியான வார்த்தையை பயன்படுத்தி பாராளுமன்றத்தில் பேசியிருந்தால்
Deleteஎமது சமூகத்திற்கு இப்படியான ஓர்
இக்கட்டான நிலமை உருவாகி இருக்குமா?
எப்போது அனுராதாதபுரத்தில் 400
வருடங்கள் பழமை வாய்ந்த ஓரு ஸிஹாரம் உடைக்கப்பட்ட போது
(இஃது சரி?தவறா இல்லை இங்கே 400 வருடங்கள் முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள் .)
அப்போது யார் பேசியது? அதன் பிறகு தம்புல்லையில் பள்ளிவாசல்
தாக்குதலுக்கு உள்ளானது இதன்
போது யார் யார்?
எமது சமூகத்திற்கு குரல் கொடுத்தது
இஃது இவர்களுக்கு தேறியது.
அன்று வாய்மூடி மவுனமாக
இருந்ததால் முஸ்லிம்களின் உயிர்,
உடமைகள் எரித்தது! அப்போது இவர் என்ன பேசியது பாராளுமன்றத்தில்? நீங்கள் மனசாட்சி உள்ள மனிதர்களாக
இருந்ததால்? சொல்லமுடியுமா?
இன்று நீங்கள் பேசினால் என்ன?
பேசாமல் இருந்ததால் என்ன?
வெள்ளம் தலைக்கு மேலே
போய் விட்டது இந்த சுயநல அரசியல் தலைவர்களை நம்ப எமது
எமது சமூகம் தயாராக இல்லை!
It's indeed a good speech. Most of the people welcome your speech. Those who find fault with othets, will do so.Don't worry about anything. The majority ate with you.
ReplyDeleteஎமது சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியை அன்று இவர் இப்படியான வார்த்தையை பயன்படுத்தி பாராளுமன்றத்தில் பேசியிருந்தால்
ReplyDeleteஎமது சமூகத்திற்கு இப்படியான ஓர்
இக்கட்டான நிலமை உருவாகி இருக்குமா?
எப்போது அனுராதாதபுரத்தில் 400
வருடங்கள் பழமை வாய்ந்த ஓரு ஸிஹாரம் உடைக்கப்பட்ட போது
(இஃது சரி?தவறா இல்லை இங்கே 400 வருடங்கள் முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள் .)
அப்போது யார் பேசியது? அதன் பிறகு தம்புல்லையில் பள்ளிவாசல்
தாக்குதலுக்கு உள்ளானது இதன்
போது யார் யார்?
எமது சமூகத்திற்கு குரல் கொடுத்தது
இஃது இவர்களுக்கு தேறியது.
அன்று வாய்மூடி மவுனமாக
இருந்ததால் முஸ்லிம்களின் உயிர்,
உடமைகள் எரித்தது! அப்போது இவர் என்ன பேசியது பாராளுமன்றத்தில்? நீங்கள் மனசாட்சி உள்ள மனிதர்களாக
இருந்ததால்? சொல்லமுடியுமா?
இன்று நீங்கள் பேசினால் என்ன?
பேசாமல் இருந்ததால் என்ன?
வெள்ளம் தலைக்கு மேலே
போய் விட்டது இந்த சுயநல அரசியல் தலைவர்களை நம்ப எமது
எமது சமூகம் தயாராக இல்லை!
எமது சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியை அன்று இவர் இப்படியான வார்த்தையை பயன்படுத்தி பாராளுமன்றத்தில் பேசியிருந்தால்
ReplyDeleteஎமது சமூகத்திற்கு இப்படியான ஓர்
இக்கட்டான நிலமை உருவாகி இருக்குமா?
எப்போது அனுராதாதபுரத்தில் 400
வருடங்கள் பழமை வாய்ந்த ஓரு ஸிஹாரம் உடைக்கப்பட்ட போது
(இஃது சரி?தவறா இல்லை இங்கே 400 வருடங்கள் முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள் .)
அப்போது யார் பேசியது? அதன் பிறகு தம்புல்லையில் பள்ளிவாசல்
தாக்குதலுக்கு உள்ளானது இதன்
போது யார் யார்?
எமது சமூகத்திற்கு குரல் கொடுத்தது
இஃது இவர்களுக்கு தேறியது.
அன்று வாய்மூடி மவுனமாக
இருந்ததால் முஸ்லிம்களின் உயிர்,
உடமைகள் எரித்தது! அப்போது இவர் என்ன பேசியது பாராளுமன்றத்தில்? நீங்கள் மனசாட்சி உள்ள மனிதர்களாக
இருந்ததால்? சொல்லமுடியுமா?
இன்று நீங்கள் பேசினால் என்ன?
பேசாமல் இருந்ததால் என்ன?
வெள்ளம் தலைக்கு மேலே
போய் விட்டது இந்த சுயநல அரசியல் தலைவர்களை நம்ப எமது
எமது சமூகம் தயாராக இல்லை!
Mp Hisbullah revield the true fact about ISS, which some intelligent can't even have a the knowledge to understand.
ReplyDeleteYou spotk at the time we need the voice in Parliament. We say excellent.
எவ்வளவோ பிரட்சினைகளுக்கு முகம் கொடுத்த நீங்கள் வாய்ச்சொலகளுக்கு ஏன் பயப்படுகிரீர்கள். உண்மையிலேயே நீங்கள் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்திருந்தால் அல்லாஹ்வின் உதவுவான்.
ReplyDeleteஉன்மயிலேயே சந்தர்ப்பத்திற்குரிய பேச்சு, ஆயுதமேந்தும் கதையை பிடிப்பவர்கள் அதற்குமுன் பேசியதை மறந்துவிட்டார்கள்போலும்.
ReplyDelete'ஆயுதமேந்தினால்' என்ன நடக்குமென 30 வருடம் நடந்தவற்றை சுட்டிக்காட்டினீரே தவிர ஆயுதமேந்துவோமென கூறவில்லை என விழங்கிக்கொள்வோம்விழங்கிக்கொள்வோம்...
அமைச்சர் ஹிஸ்புல்லா அவர்களே!தாங்கள் எப்படிப்பட்ட அரசியல்வாதியாக இருந்தாலும் சரி தங்களைப் பற்றி வேறு எப்படிப்பட்ட அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் விமர்சனம் செய்தாலும் சரி அன்மையில் நீங்கள் பாரளுமன்றத்தில் ஆற்றிய உரையானது இலங்கை வாழ் முஸ்லிம் சமூதாயத்தின் ஒரு வரலாற்றுத் தேவையை நிறைவேற்றிய உரையாக அமைந்துள்ளது. மேலும் அது தங்களது தனிப்பட்ட உரையாக இல்லாது முஸ்லிம் சமூதாயத்தின் உரையாக பார்க்கப்படவேண்டிய ஒன்றாக ஆகியுள்ளது. உங்களது பேச்சில் கூறப்பட்டுள்ள அதிகமான விடயங்கள், முஸ்லிம் சமூகத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்படும் வரம்பு மீறிய அநீதிகளுக்கு எதிராக ஒரு உண்மையான முஸ்லிமின் நியாயமானதும் யதார்த்தமானதுமான பிரதிபலிப்பு எவ்வாறு இருக்கும் என்ற உண்மை யதார்த்தத்தை படம் பிடித்து காட்டுவதாகவே உள்ளது.அல்லாஹ் அல்லாத வேறெந்த சக்திக்கும் அஞ்சாத உங்களது குரல் தொடர்ந்தும் ஒலிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றேன்.
ReplyDelete