Header Ads



கலகத்தை உருவாக்க உடந்தையாக இருந்த, சுமணரத்ன பிணையில் விடுதலை


மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாராதிபதியும் கிழக்கு மாகாண பிரதி சங்கநாயக்கருமான அம்பிட்டிய சுமணரத்ன தேரரை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவரை 50 ஆயிரம் ரூபா இரு சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறும், மீண்டும் ஜனாவரி 25ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கு விசாரணை இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொது பல சேனவின் வருகை தொடர்பாக மட்டக்களப்பு நகரில் கடந்த 3ஆம் திகதி பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

பொது பல சேனவின் வருகை தடுக்கப்பட்டதை அடுத்து, நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட தடை உத்தரவை மீறி மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரால் மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தேரரின் ஆர்ப்பாட்டத்துக்கு மட்டக்களப்பு நகரில் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், பொதுமக்களை பிரதான வீதியில் ஒன்று திரட்டி கலகத்தை உருவாக்குவதற்கு உடந்தையாக இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர் மீது மட்டக்களப்பு பொலிஸார் வழக்குப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. இவரிடமிருந்து இந்த மஞ்சல் புடவையை எடுத்துவிட்டால் இவர் யார் இவரின் நிலைமை என்ன எந்த மாபியா அமைப்பில் இவரை சேர்பது?பான்பராக் ரவியுடனா அல்லது பட்டாஸுபாலுடனா அல்லது சனியம் சங்கடவுடனா?

    ReplyDelete

Powered by Blogger.