Header Ads



பௌத்தம் அழிகிறது, முக்கிய இனவாதிகளை உதவிக்கு அழைக்கும் ஞானசாரா..!


பௌத்த மதத்தை அழிப்பதற்கு நான்கு புறத்திலும் சூழ்ச்சி செய்யப்படுவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், 

நாட்டையும், இனத்தையும், பௌத்த மதத்தையும் அழிப்பதற்கு நான்கு திசைகளிலிருந்தும் சூழ்ச்சி செய்யப்படுகின்றது.

சிறு சிறு பேதங்களை களைந்து அனைவரும் ஒரு குடும்பமாக இணைந்து எழுந்து நிற்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. தேசியத்துவத்திற்குள் உள்ள தலைவர்களை இணக்கப்பாட்டுக்குள் கொண்டு வந்து நாட்டு மக்களுக்கு இது பற்றி கூறி பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் சொல்ல முடியாத பாவ காரியமொன்றின் பங்குதாரர்களாகிவிடுவோம்.

இந்த தேசிய பிரச்சினையின் போது அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள பொதுபல சேனா விரும்புகின்றது. அதுரலிய ரதன தேரரின் குரலும் தற்போது தேவைப்படுகின்றது.

சம்பிக்க ரணவக்க, அதுரலிய ரதன தேரர் ஆகியோர் இல்லாமல் இருந்திருந்தால் போரை வெற்றிகொண்டிருக்க முடியாது.

மஹிந்த, கோதபாய ஆகியோர் போரை வென்றெடுக்க வழங்கிய பங்களிப்பினை பாராட்டுவது போலவே சம்பிக்க, ரதன தேரர் போன்றவர்களின் பங்களிப்பும் வரவேற்கப்பட வேண்டியது.

தேசியத்துவத்தை எழுப்பி போருக்கான உந்துதலை சம்பிக்க , ரதன தேரர் போன்றவர்கள் வழங்கினார்கள்.

மஹிந்த ராஜபக்ச, கோதபாய ராஜபக்ச, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, தினேஸ் குணவர்தன போன்றே சம்பிக்க ரணவக்க, அதுரலிய ரதன தேரர் ஆகிய தேசியத்துவத்தை பிரதிநிதித்துவம் செய்யும் தலைவர்கள் பல்வேறு அரசியல் பிரவாகங்களை பிரதிநிதித்துவம் செய்தாலும் தற்போதைய சூழ்நிலையில் இணைந்து செயற்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

சிங்களவர்களை பிளவடைச் செய்து எமது சிங்களத் தலைவர்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தி தங்களுக்கு தேவையானவற்றை செய்து கொள்ள சில சக்திகள் சூழ்ச்சி செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. Major General Hon. Sarath Fonseka is not in your list. You have forgotten him. Eh. Eh.

    ReplyDelete
  2. சகோதரர் அரூஸ் அவர்களே இங்கு சரத் போன்செகவோ அல்லது வேறு யாரும் விடுபட்டது அல்ல.
    நாங்கள் ஆழமாக யோசிக்க வேண்டிய நிறைய விடயங்கள் நிறைய உள்ளது தற்போது காய் நகர்த்தல்கள் ஆரம்பமாகி உள்ளது. இந்த மத குருவின் நோக்கம் எப்படி தற்போது மியன்மாரில் என்ன நடக்கின்றதோ அதே பாணியில் இலங்கையிலும் அரங்கேற்ற இவர்கள் முனைகின்றனர் . எனக்கு பார்க்க கிடைத்த BBC வெளியிட்ட கானொளியில் மியன்மாரில் உள்ள சிறு வயது இளையோரிடம் முஸ்லிம்கள் பற்றி கேட்கப்பட்ட பொது அவர்களின் பதில் கண்ட இடத்தில அவர்களை கொலை செய்ய வேண்டும் என்பதே அவர்களின் பதிலாக இருந்து. நாம் இங்கு நோக்க வேண்டியது அந்த பிஞ்சு உள்ளத்தில் எப்படி முஸ்லிம்களை பற்றி பிழையான எண்ணம்கள் எப்படி வந்தது முஸ்லிம்களோடு வாழ்ந்தான ? அல்லது அவர்களை பற்றி எதாவது புத்தகங்களில் படித்து விபரங்களை பெற்றான இல்லை மாறாக அவன் பின்பற்றும் மத போதகர் சொல்வதை அமுத வாக்காக எடுத்து அதை நடைமுறை படுத்த பார்க்கின்றான். என்ன மியன்மாரில் முஸ்லிம் அரசியல் வாதிகள் இல்லையா , படித்தவர்கள் இல்லையா , ஆலிம்கள் இல்லையா இலங்கை போல் அங்கும் எல்லோரும் உள்ளனர் ஒரு காலம் இலங்கை போல முஸ்லிம்கள் கோடி கட்டி பறந்தவர்கள் தான் பின் சிறுக சிறுக அடிபணிய நிலைமை ஏற்பட்டது. இதைதான் இவர்கள் இலங்கையிலும் சிறுக் சிறுக செய்ய பார்கின்றனர் என் அறிவுக்கு எட்டிய வகையில் இந்த தேரர் இப்பதான் 1% வீத பலத்தை பெற்று உள்ளன் தற்போது வளரும் இளம் சிறார்களிடம் முஸ்லிம்கள் பற்றியும் தமிழர் பற்றியும் இல்லாத கதைகளை அவர்களின் உள்ளத்தில் புகுத்துகின்றனர் அது வளர்ந்து ஆலமரமாகும்( இவர்கள் விதைப்பது இன்றே அறுவடை செய்ய அல்ல ) பொது முஸ்லிம்களின் நிலைமை என்னவாகும் என்று ஒரு கணம் யோசிக்க தோன்றகின்றது.
    நாங்கள் என்னதான் சொன்னாலும் இலங்கை அரசியல் வாதிகள் அவர்களின் வருமானத்துக்கும் அவர்களின் இருப்புக்கும் எப்படி யாரிடம் இருந்து வாக்கு பெறமுடியுமோ அதத்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள். இந்த அரசியல் வாதிகள் நிமிடத்துக்கு நிமிடம் வாக்கு மாறுபவர்கள். இப்படியான ஒரு சூழலில் தான் சிறுபான்மையான எமது சமுதாயம் இந்த இலங்கையில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.
    எனவே இப்படியான செய்திகளை வாசிக்க நேரும் பொது எதாவது சொல்ல அல்லது எழுத வேண்டும் என்று தோன்றினால் சமூகத்துக்கு பிரயோசனமான பின்னூட்டங்களை இடுங்கள். அல்லது ஒதுங்கி இருங்கள் அல்லாமல் பகிடியாக எழுதுவதும் அல்லது பிரயோசனம் இல்லாத பின்னூட்டங்களை இடுவதில் இருந்து தவிர்த்து கொள்ளுமாறு பணிவாய் வேண்டுகின்றேன்.

    ReplyDelete
  3. பெளத்தம் அழிவதற்கு முஸ்லிம்களோ அல்லது தமிழர்களோ காரணம் அல்ல . சிங்களவர்களே பெளத்தத்தை அழித்துக்கொண்டு இருக்கிறார்கள் . அவர்களுடைய அனைத்து போதனைகளும் வெறும் சொல்லளவில் பன்சால்களிற்குள் வரையறுக்கப்பட்டுவிட்டன. பன்சலைகள் வயோதிபர்களுக்கு மட்டும் என்றாகி விட்டது. அவர்களின் சமூகத்தில் மது அருந்தாத ஆணகளை காணபதே கடினம் . மாலை நேரங்களில் மதுக்கடைகளை சுற்றி அவரகளின் கூட்டமே. விபச்சாரமும் விபச்சாரிகளும் சரவசாதாரணமாகி விட்டன. spa என்ற பெயரில் விபச்சாரம் ஓஹோ என்று நடக்கிறது. சிங்கள யுவதிகள சரவசாதாரணமாக இதில் ஈடுபடுகின்றனர். பெளத்தத்தை காப்பாற்ற வேண்டிய சிங்கள அரசியல்வாதிகளும் பெரும்புள்ளிகளுமே பார்களையும் spa களையும் எடுத்து நடத்துகின்றனர் .
    காதல் என்ற பெயரில் இளைஞர் சமுதாயம் தெருக்களிலும் , பஸ்களிலும், பார்க்கிலும் சீரழிகின்றனர். ஒரு இளைஞன் காதலிக்கவில்லை என்றால் அதை கேவலமாக கருதுகின்றனர் .( எமது சமுதாயத்தில் இல்லை என்று சொல்லவில்லை , ஆனால் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு ) அவர்களுடைய யுவதிகளின் ஆடைகளை கேடகவே தேவையில்லை . ஆணகளின் பாலியில் உணர்ச்சிகளை தூண்டி விபச்சாரத்தை நோக்கி அழைக்கின்றனர் . கடைசியில் யுவதி கற்பழித்து கொலை என்ற செய்தியை அன்றாடம் பார்க்கிறோம். "ரத்தரங் அம்மா" என்ற வாசகத்திற்கு எங்கும் குறைவில்லை ஆனால் முதியோர் இல்லங்கள் சிங்கள பெற்றோர்களாலே நிரம்பி வழிகின்றன.
    இவ்வாறாக எத்தனையோ சமூக சீர்கேடுகள் அவர்களின் மதக்கோட்பாடுகளை அழித்துக்கொண்டிருக்கும் போது இவர்கள் எங்கள் மீது பாய்வது அவர்களின் மதத்தை காப்பாற்றவல்ல மாறாக எங்கள் மதத்தை கொச்சைபடுத்தவும் எங்கள் பொருளாதாரத்தை அளிக்கவுமே .

    ReplyDelete

Powered by Blogger.