மஹிந்தவின் கனவு மைதானம், திருமண மைதானமாகிறது..!
கடந்த அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானம் திருமண வைபவங்களுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.
மஹிந்த அரசாங்கத்தில் 4200 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை இன்று நடத்தி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் திருமண வைபவங்கள் நடத்துவதற்காக அந்த மைதானம் வாடகைக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதஸ,
4200 மில்லியன் ரூபா எனது அமைச்சிற்கு கிடைத்திருந்தால் எத்தனை கிராமங்களை அமைத்திருக்கலாம்? கிராமபுறம் மற்றும் நகர் புறங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு எவ்வளவு நிவாரணம் வழங்கியிருக்க முடியும்? அது மாத்திரமின்றி நிரந்தர கடன்காரர்களாக்கிவிட்டு மத்தல சர்வதேச விமான நிலையத்தை நிர்மானித்தார்கள்.
இவை அனைத்து தோல்வி திட்டங்களாகும். தற்போது இந்த சூரியவெவ சர்வதேச மைதானத்தை நடத்தி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வாடகை அடிப்படையில் குறித்த மைதானம் திருமண வைபவங்கள் நடத்துவதற்காக வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக்கும் மஹிந்த சிந்தனையின் கீழ் இந்த மைதானம் அமைக்கப்பட்டிருந்தது. மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானம் என பெயர் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்த வந்து துறைமுகம்,விமானநிலையம்,விளையாட்டு மைதானம் இன்னும் அதிவேக பாதை என்று அபிவிருத்தி செய்தார்.இந்த அரசாங்கம் வந்து இதுவரைக்கும் என்ன செஞ்சி கிழிச்சானுங்க ஒரே குறை சொல்லி சொல்லியே இரண்டு வருடத்தை கடத்தினது தான் மிச்சம்.
ReplyDeleteஅன்றைய சிங்கபூர் ஜனாதிபதி தனது நாட்டை கொழும்பைப்போன்று அபிவிருத்தி செய்யவுள்ளதாக குறிப்பிட்டு இரண்டே தசாப்தத்தில் ஆசியாவின் ஆச்சரியமாக விருத்தியடைந்தது. ஆனால் இலங்கை தான் நின்ற இடத்திலிருந்து ஒப்பீட்டளவில் பொருளாதார விருத்தியைக்காணவில்லை. கனியங்கள் பரந்து காணப்படும் எமது நாட்டில் தேர்ச்சி பெற்ற மனிதவளமும் உண்டு. இவற்றை சிறப்பாக பயன்படுத்துவதற்கான பொருளாதார அபிவிருத்தித்திட்டங்களை எமது அரசுகள் கடைப்பிடியாது தனது பையை நிரப்புவதற்காக கிடைத்ததைப் பிடிங்குவோம் என்ற கொள்கையையே மேலோங்கிக்காணப்படுகின்றது.
ReplyDeleteகடந்த ஆட்சிக்காலத்தில் பொருத்தமற்ற திட்டங்களில் தேசிய செல்வங்களை ஈடுபடுத்தி பெருந்தொகைப்பணத்தை கபளிகரம் செய்தனர். இதற்கு சான்றாதாரமாகவே கிரிகட் மைதானமும் ஹாபறும் காணப்படுகின்றன.
நல்லாட்சி அரசிலும் பொருளாதாரத் திட்டங்கள் தொடர்பில் தெளிவற்ற தன்மையே நீடிக்கின்றது. இந்நிலையில் என்னுள் எழும் கேள்வி இதுதான்.
சிவில் சமூக பொருளாதார நிபுணர்கள் ஒன்றிணைந்து இலங்கைக்கே உரித்தான நிலையான பொருளாதாரக் கொள்கை ஒன்றை வடிவமைத்து அதனை நடைமுறைப்படுத்த அரசுக்கு அழுத்தங்கொடுக்க முடியாதா?
அவ்வாறு முடியாது போகுமெனில் மூளைசாலிகள் வெளியேறுவதையும் எமது வளங்கள் வீண்விரயமாக்கப்படுவதையும் சாதாரண பொதுமக்கள் சோமாலியர்களாக்கப்படுவதையும் தடுக்க முடியாது போகும். அள்ளாஹ் பாதுகாப்பானாக!