Header Ads



'அமெரிக்கா உண்மையாக எதிரிகளோடு சண்டையிட வேண்டும், தானாக எதிரிகளை உருவாக்கி சண்டையிடகூடாது'

அமெரிக்காவுடனான உறவை சகஜ நிலைப்படுத்த வேண்டும் ஆனால் அது இருதரப்பும் சமாந்திரமான நிலையில் நடைபெற வேண்டும் என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டிற்கான தேசிய உரையை நிகழ்த்திய புதின், அமெரிக்காவில் வரவிருக்கும் டொனால்ட் டிரம்பின் அரசுடன் ஒத்துழைக்க தான் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ரஷியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளும் ஒன்றுபட்டு சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பது ஒட்டு மொத்த உலக நாடுகளின் நலன்களுக்கு நல்லது தரும் என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா உண்மையாக எதிரிகளோடு சண்டையிட வேண்டும் என்றும் தானாக எதிரிகளை உருவாக்கி சண்டையிட கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது போன்ற உண்மையான எதிரிகளோடுதான் அதாவது, உலகளாவிய பயங்கரவாதத்தோடுதான், சிரியாவில் ரஷ்யா மோதிக்கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.