Header Ads



'இஸ்லாமியர்கள் முகத்திரை அணிய தடை, இது ஜேர்மன் கலாச்சாரத்திற்கு உகந்ததல்ல'

ஜேர்மனியில் இஸ்லாமியர்கள் முழு முகத்திரை அணிய தடை விதிக்கப்படும் எனவும் அது தமது நாட்டு கலாச்சாரத்திற்கு உகந்தது அல்ல எனவும் சான்சலர் மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் தமது கட்சி கூட்டத்தினிடையே பேசும்போது குறித்த கருத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு பார்வையாளர்களிடையே பெருத்த வரவேற்பு காணப்பட்டது.

முழு முகத்திரை அணிவது என்பது ஜேர்மனியின் கலாச்சாரத்திற்கு உகந்ததல்ல என கூறிய அவர், சட்டப்பூர்வமாக இதை தடை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

குறித்த வலியுறுத்தலை Christian Democratic Union கட்சியின் தலைவர்கள் வெளியிட்டு வருவது இது முதன்முறை அல்ல. கடந்த ஆகஸ்ட் மாதம் இதே கருத்தை உள்விவகாரத்துறை அமைச்சர் Thomas de Maiziere ஒரு பொதுகூட்டத்தின் போது வலியுறுத்தியிருந்தார்.

நமது சமூகத்திற்கு இந்த முழு முகத்திரை ஒத்துப்போவதாக இல்லை எனவும், முகம் பார்த்து பேசுவதே நமது வழக்கம், அதனாலே உங்கள் முகத்தை வெளிக்காட்ட கேட்கிறோம் என்றார் அவர்.

நான்காவது முறையாக சான்சலர் பதவிக்கு போட்டியிட இருப்பதாக மெர்க்கல் அறிவித்த சில வாரங்களிலேயே குறித்த தடை கோரும் கோரிக்கையும் அவர் முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

62 வயதாகும் ஏஞ்சலா மெர்க்கலுக்கு அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தல் சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

முழு முகத்திரைக்கு தடை கோரும் ஜேர்மனியின் இந்த வலியுறுத்தலை இதற்கு முன்னர் பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் சுவிஸ் நாடுகளில் கோரப்பட்டிருந்தது நினைவுகூறத்தக்கது.

2 comments:

  1. தேர்தலுக்கு முன், முஸ்லிம்களின் நடை, உடை பாவனைகளைப்பற்றி பேசி காலத்தை வீணடிப்பது, மேற்கத்தியர்களுக்குப் பொழுது போக்காக ஆகிவிட்டது.

    தேர்தலின்பின், மீண்டும் சலசலப்பு. பிறகு மயான அமைதி.

    ReplyDelete
  2. தேர்தலுக்கு முன், முஸ்லிம்களின் நடை, உடை பாவனைகளைப்பற்றி பேசி காலத்தை வீணடிப்பது, மேற்கத்தியர்களுக்குப் பொழுது போக்காக ஆகிவிட்டது.

    தேர்தலின்பின், மீண்டும் சலசலப்பு. பிறகு மயான அமைதி.

    ReplyDelete

Powered by Blogger.