பள்ளிவாசல்களுக்கு கமராக்களை பொருத்துங்கள் - ஹலீமிடம் ரிஷாத் வேண்டுகோள்
நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் கண்காணிப்புக் கமராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தபால் தொலைத்தொடர்பு முஸ்லிம் கலாச்சார அமைச்சர் ஹலீம் இஷாக்கிடம் மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவசரக் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
பள்ளிவாசல்கள் மீது ஆங்காங்கே அடிக்கடி மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களின் த்திரதாரிகளை அடையாளம் காணுவதற்கு கண்காணிப்பு கமராக்கள் உதவும் எனவும், இதன் மூலம் சட்டத்தையும் ஒழுங்கையும் நடை முறைப்படுத்துவதற்கு நம்மாலும் உதவ முடியும் எனவும் அவர் அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இரவு வேளைகளிலேயே இந்த சம்பவங்கள் இடம்பெறுவதனால் கண்காணிப்புக் கமராக்களில் நடந்த உண்மைச் சம்பவங்களை அறிந்து கொள்வதற்கு பொலிசாருக்கும் இது உதவும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முஸ்லிம்களையும், சகோதர சிங்கள மக்களையும் முட்டி மோத வைத்து அதன் மூலம் ஆதாயம்பெற சில சக்திகள் தற்போது முயற்சித்துவருவதாகவும் இது தொடர்பில் முஸ்லிம்கள் அவதானமாக செயற்பட வேண்டியதன் அவசியத்தை, உலமாக்கள் மூலம் வலியுறுத்துவதற்கு முஸ்லிம் சமைய விவகார அமைச்சு சில செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர் அமைச்சர் ஹலீமிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
முஸ்லிம்களுக்காக பேசுவது முஸ்லிம்களின் வாக்குகளை வாங்கிய எல்லோரினதும் கடமை.
ReplyDeleteஅப்போ மிஸ்டர் ரிசாத் அவர்களே நீங்கள் செய்திகள் பார்பதில்லையோ இந்த முடிவை அமைச்சர் ஹலீம் அவர்கள் பள்ளிவாயல் நிர்வாகிகளுக்கு பல மாதங்களுக்குமுன் கட்டளையிட்டுள்ளார் ஏதோ நீங்கள் புதிதாக கோரிக்கை வைப்பதாக காட்டுகின்றீர் இந்த விடயத்தின் அடுத்த வீட்டு கோழியால் உம்மா பெயரில் கத்தமா? ஏன் அரபிகளிடம் இருந்து பெரும்ப்பணங்களில் இந்த கெமராக்களை பள்ளிகளுக்கு வேண்டிகொடுக்கவும்.மேலும் பள்ளிகளுக்கு கெமராபூட்டம் திட்டத்தை எப்பவோ அமைச்சர் ஹலீம் கொண்டுவந்து விட்டார் அத்திட்டத்தில் நீங்கள் பெயர்போட முனையவேண்டாம்.
ReplyDelete