யாழ்ப்பாணத்தில் மூடிக்கிடக்கும் பள்ளிவாசல், தொழமுடியாமல் மக்கள் திணறல்
-பாறுக் ஷிஹான்-
யாழ் மாவட்டத்தில் வரலாற்று முக்கியத்துவமுள்ள ஒல்லாந்தர் கோட்டைக்கு அருகில் உள்ள பள்ளிவாசல் தினமும் அடிக்கடி முடிக்கிடப்பதை காண முடிகின்றது.
இதனால் தினமும் குறித்த கோட்டை பகுதியை பார்வையிட வரும் முஸ்லீம் உல்லாச பிரயாணிகள் தொழுகையை நிறைவேற்ற திணறுவதை அவதானிக்க முடிகின்றது.
கடந்த காலங்களின் யாழ் முஸ்லீம்கள் சிலரினால் பராமரிக்கப்பட்ட நிலையில் திடிரென கைவிடப்பட்டுள்ளது.
எனினும் தற்போது இப்பள்ளிவாசல் மூடிக்கிடப்பதுடன் இப்பள்ளிவாசலுக்கு நிரந்திர மௌலவியோ அல்லது ஒரு பொறுப்பு வாய்ந்தவர்களோ இல்லாமையினால் பிற மதத்தவர்கள் பயன்படுத்தும் நிலையில் உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
தற்போது சில முஸ்லீம் முக்கியஸ்தர்களின் சுயநலத்தினால் தினமும் இப்பள்ளிவாசலின் நிர்வாகம் முடங்கி காணப்படுவதாக அறிய முடிகின்றது.
எனவே இப்பள்ளிவாசல் மீளவும் இயங்க ஆவண செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக யாழ்-கிளிநொச்சி ஜம்மியதுல் உலமா சபை புதிய தலைவர் மௌலவி சுபியான் நடவடிக்கை மெற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.
இப்பள்ளிவாசல் கடந்த கால யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள தனவந்தரினால் புனரமைக்கப்பட்டு இயங்கி வந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
this why I can't understand, Sri Lankan overseas organisations hold meetings. But unfortunately they don't know what actually there locality needs.
ReplyDelete