Header Ads



முடிச்சுக்களை அவிழ்த்த, மு.கா. தலைவர்

முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஹஸனலி மற்றும் தலைவர் ரவூஃப் ஹகீம் ஆகியோருக்கு இடையில் இருந்த முறுகல் நிலை தேசியப் பட்டியல் உத்தரவாதத்துடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

basheer“தான் கட்சியை நீதிமன்றம் வரை கொண்டு செல்வதில்லை, கட்சிக்கு எதிரான தரப்புகளுடன் இணைந்து கட்சியை பிளவு படுத்துவதற்கும் துணை போவதில்லை, தலைவருடன் பேசி சுமுகமான முடிவுக்கு வருவதையே விரும்புகின்றேன், தேசியப்பட்டியல் உறுப்புரிமைக்காக நான் கட்சியுடன் முரண் படவில்லை, சூழ்ச்சிகரமான முறையில் தன்னிடமிருந்து பொதுச் செயலாளர் பதவி அல்லது அதற்குரிய அதிகாரங்கள் பறிக்கப் பட்டமையை மாத்திரமே ஆட்சேபிக்கின்றேன்” என தனது நிலைப்பாடுகளை மீண்டும் மீண்டும் சகோதரர் ஹஸனலி வலியுறுத்தி வந்தார்.

இரு தேசியப்பட்டியல் உறுப்புரிமைகளை வைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் அவற்றை தவிசாளருக்கும், பொதுச் செயலாளருக்கும் கொடுக்காமல் வேறு பல பிரதேசங்களுக்கு கொடுப்பதற்கு தலைவர் எடுத்த முடிவு மற்றும் அளித்த வாக்குறுதிகள் கட்சிக்குள் இன்னொரு பிளவு ஏற்படுமா என்ற அச்ச நிலையை ஏற்படுத்தியிருந்தது.

குறிப்பாக கட்சியின் தவிசாளர் தலைமையில் மற்றுமொரு அதிருப்தியாளர் குழு சகோ ஹஸனலி விவகாரத்தை மிகவும் சூட்சுமமாக கையாண்டு கையெழுத்து வேட்டைகள் நடத்தி தலைவருக்கு நெருக்கடி நிலைமையை தோற்றுவித்தமை நாம் அறிந்த விடயமாகும், பலர் கட்சியை விட்டு இடை நிறுத்தப் பட்டமை குறிப்பிடத்தக்கது, என்றாலும் முதற்கட்டமாக ஒரு புரிந்துணர்வு உடன்பாடு மூலம் எல்லோரையும் உள்வாங்கி ஹாஸனலி அவர்களை துரும்பாக வைத்து காய் நகர்த்தும் தவிசாளரை தனிமைப் படுத்தும் அடுத்த கட்ட நகர்வுகளை தலைவர் ஹகீம் மேற்கொண்டார்.

அந்த வகையில் சகோ ஹசனலியுடன் பேசி முடிவுக்கு வரும் அதிகாரத்தை உயர்பீடத்திடமிருந்து பெற்று தற்பொழுது இருவருமாக பேசி ஒரு உடன்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிகின்றது. அதன்படி ஏற்கனவே முறைகேடாக நியமிக்கப் பட்டுள்ளார் எனக் கருத்தப்பட்ட ஊதியம் பெறும் உயர்பீட செயலாளர் காதர் அவர்களை அதிகார பூர்வமான செயலாளர் ஆக 2017 ஜனவரி 7 திகதி நடக்கவுள்ள பேராளர் மாநாட்டில் ஸ்திரப்படுத்திக் கொள்ளவும் பகரமாக தேசியப்பட்டியல் உறுப்புரிமைய மீண்டும் ஒருமுறை சகோ ஹஸனலிக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

hasanaliகட்சியின் ஆரம்பகாலப் போராளி ஹஸனலி மதிக்கப் பட வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இல்லையென்று கூறும் போராளிகள் தேசியப்பட்டியல் கேட்டு மன்றாடாத, மண்டியிடாத சகோ ஹஸனலி மற்றும் நிந்தவூர் மக்களுக்கு அதனை திணித்து அவர்களது நியாய தர்மத்திற்கான போராட்டத்திற்கு களங்கம் ஏற்படுத்தாது அதனை அட்டாலசசேனைக்கோ அல்லது பிரதிநிதித் துவம் ஒன்றை வேண்டி நிற்கும் பொருத்தமான வேறு ஒரு பிரதேசத்திற்கோ வழங்குமாறு போராளிகள் வேண்டி நிற்கின்றனர்.

சகோ ஹஸனலி அவர்களது மகனார் அங்கம் வகிக்கும் கிழக்கின் எழுச்சி முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு இது குறித்து அச்சுறுத்தல் விடுத்திருந்தமையும் அது குறித்து உயர் பீடத்தில் பலர் பேசியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இனி தவிசாளர் தரப்பினர் மற்றும் கிழக்கின் எழுச்சி குழுவினரின் நிலைப்பாடுகளை அறிந்து கொள்ள பலரும் ஆவலாயுள்ளதாக முகநூல் வட்டாரங்களில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

முடிச்சுக்களை போட்டுக் கொள்வதிலும் சேதாரமில்லாமல் விட்டு கொடுப்புக்கள் செய்து அவற்றை அவிழ்பதிலும் தலைவர் சாணக்கியன் என போராளிகள் பேசிக் கொள்(கொல்)கிறார்கள்.

நீர் வழங்கல் அமைச்சர் அல்லவா..!

-Inamullah.net-

6 comments:

  1. Reality of the people NOT to serve the people.. BUT for chairs it seems. Every body is silent once they achieve chair in this world.

    BUT A TRUE MUSLIM will not fight for chair.. BUT He works for the sake of Allah and he does everything to please Allah.

    We people and our so called leaders in srilanka or outside are far from the GOAL of a TRUE Muslim, who does everything to please Allah and His DEEN.

    YA Allah guide us and our leaders to do things to please you and leave things to please you and Keep us away from loving Dunya and hating the death for HUBBUD DUNYA.

    ReplyDelete
  2. This is indeed surprising news. It seems that all politicians are of the same creed. I had great RESPECT to General Secretary Hassanali, as a personal friend and a political leader, but it seems that Hassanali has lost his vision of the Muslims of the East. The Muslim Youth should group themselves into a powerful political Institution, Insha Allah, especially in the Eastern Province. The Muslim politicians have hoodwinked and betrayed the Muslim Community wholesale. We need to think with our “heads” NOT our “hearts”, Insha Allah. Politically analyzing the Muslim Community of Sri Lanka, we may be a community of around 1.97 million persons (Ummah) by population, but as a political power, WE ARE A POWER TO OURSELVES, you should realize, Insha Allah. That is the representation of our COMMUNITY and “The Muslim Voice” is a VOICE from among that Community, Alhamdulillah. We have a Muslim Vote bank of nearly 600,000 (maybe more) in the 26 districts and 9 provinces of Sri Lanka. “The Muslim Voice” wants to tell the Muslim Community that - IT IS TIME UP THAT THE MUSLIMS SHOULD CREATE THIS POLITICAL FORCE NOW. TIt is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere, to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, and safeguard the DIGNITY of our community has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future. The Muslims should create a political force now to defend our position in the “Constitution”. Insha Allah.The Muslims should harness the support of the friendly Nationalist Forces, be they Sinhalese or Tamils (North and Upcountry) in defending our political position in the “Constitution”. We should also support the MEDIA fully, Insha Allah.The rest we have to leave to God AllMighty Allah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener – “The Muslim Voice”.

    ReplyDelete
  3. கட்சியில் உள்ள அனைவருக்கும் அமைச்சர் பதவிக்கு ஆசைதான்! ரவூப் ஹகீம் அவர் எந்தனைபேருக்கு எங்கிருந்து கொடுப்பார்?

    ReplyDelete
  4. Both of you guys for Post and perk, not for SL Muslim interest, if these guys continue to cheat Muslims, Many GANASARA will come

    ReplyDelete
  5. Inamullah அவர்களே, உங்களிடம் இருந்து இப்படியான தெருக்கூத்தை பார்த்து கதை கூறும் ஒருவராக பார்க்கவில்லை, மாறாக இந்த கட்சியின் தலைமைத்துவமும், அதன் செயலாரும், அதன் முடிவுகளும், அரசியல் பயணமும், அரசியல் தீர்மானங்களும், எவ்வாறு அமைய வேண்டும் என்ற கருத்துக்களையே எதிர்பார்க்கிறோம்.

    ஒரு கொள்ளைக் கூட்டம் கொள்ளையடியடிக்கப்பட்ட பொருளை பங்கிடும் போது வரும் பிரச்சினையாகவே இதை பார்க்கிறோம். ஹஸனலியின் போராட்டத்தை ஒரு தர்மத்துக்கான போராட்டமாகவே நாம் பார்த்தோம். ஆனால் அவர் இப்படி அட்பத்தனமாக எம்பி பதவிக்கும் , அமைச்சு பதவிக்கும் போராடுகிறார் என்று நாங்கள் எதிர் பார்க்கவில்லை.

    தலைமைத்துவத்தின் பித்தலாட்டத்தையெல்லாம் சாணாக்கியம் என்று கூறும் கூட்டம் போராளிகள் அல்ல, கிள்ளி போடுவதை அள்ளிப்போக இருக்கும் பேமாரிகள்.

    மறைந்த தலைவர் கேட்ட துவா (யா அல்லாஹ், இந்த கட்சி தனது இலக்கை நோக்கி பயணிக்காது போகுமானால். என்னையும் இந்த கட்சியையும் அழித்து விடுவாயாக..) கபூலாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதட்கான அடையாளங்களே இவை. ஒரு தேர்தல் வரட்டும் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

    ReplyDelete
  6. Inamullah அவர்களே, உங்களிடம் இருந்து இப்படியான தெருக்கூத்தை பார்த்து கதை கூறும் ஒருவராக பார்க்கவில்லை, மாறாக இந்த கட்சியின் தலைமைத்துவமும், அதன் செயலாரும், அதன் முடிவுகளும், அரசியல் பயணமும், அரசியல் தீர்மானங்களும், எவ்வாறு அமைய வேண்டும் என்ற கருத்துக்களையே எதிர்பார்க்கிறோம்.

    ஒரு கொள்ளைக் கூட்டம் கொள்ளையடியடிக்கப்பட்ட பொருளை பங்கிடும் போது வரும் பிரச்சினையாகவே இதை பார்க்கிறோம். ஹஸனலியின் போராட்டத்தை ஒரு தர்மத்துக்கான போராட்டமாகவே நாம் பார்த்தோம். ஆனால் அவர் இப்படி அட்பத்தனமாக எம்பி பதவிக்கும் , அமைச்சு பதவிக்கும் போராடுகிறார் என்று நாங்கள் எதிர் பார்க்கவில்லை.

    தலைமைத்துவத்தின் பித்தலாட்டத்தையெல்லாம் சாணாக்கியம் என்று கூறும் கூட்டம் போராளிகள் அல்ல, கிள்ளி போடுவதை அள்ளிப்போக இருக்கும் பேமாரிகள்.

    மறைந்த தலைவர் கேட்ட துவா (யா அல்லாஹ், இந்த கட்சி தனது இலக்கை நோக்கி பயணிக்காது போகுமானால். என்னையும் இந்த கட்சியையும் அழித்து விடுவாயாக..) கபூலாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதட்கான அடையாளங்களே இவை. ஒரு தேர்தல் வரட்டும் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.