Header Ads



முஸ்லிம் சமூ­கத்தின் மீது, மயக்க மருந்தை விசிற ஐ.தே.க.வுக்­கு தெரி­யும்

ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு முஸ்லிம் சமூ­கத்தின் மீது மயக்க மருந்தை விசிறத் தெரியும் என முன்னாள் அமைச்­சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரசின் தவி­சா­ள­ரு­மான பசீர் ­சே­கு­தாவூத் தெரி­வித்­துள்ளார். அவர் விடுத்­துள்ள ஊடக அறிக்­கை­யொன்­றி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்ளார். அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, 

தமி­ழர்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு என்­பது வட ­கிழக்கு இணைந்த மாகாணம் மாத்­தி­ரம்தான் என்ற நிலைக்கு கீழி­றங்கி உள்­ளது. அர­சுக்கு (ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு) வட­ கி­ழக்கை இணைத்து வழங்­கு­வதில் சில சிக்­கல்கள் உள்­ளன. கூட்டு எதி­ரணி, சிங்­கள மக்­களின் உணர்­வு­களை உலுக்­கி­விட்டு அர­சியல் இலா­ப­ம­டை­யவும், இணக்க அரசை அசைத்து ஆட்­டங்­காணச் செய்­யவும் முயற்­சிக்கும். பௌத்த சிங்­கள தீவி­ர­வாதம் கடு­மை­யான எதிர் நிலைப்­பா­டு­களை மேற்­கொண்டால் நாட்டில் அமைதிக் குலைவு ஏற்­படும். முஸ்லிம் மக்கள் தங்­க­ளுக்கு தீர்வு ஒன்று இல்­லாமல் இணை­வுக்கு சம்­மதம் தெரி­விக்­க­மாட்­டார்கள். அரசில் கூட்­டா­ளி­யாக இருக்­கும் ­ஜா­திக ஹெல உறு­மய ஆத­ர­வ­ளிக்­க­மாட்­டாது.

அர­சாங்­கத்தின் பெரிய பங்­காளிக் கட்­சி­களில் ஒன்­றான ஜனா­தி­பதி தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் 40 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைக் கொண்ட கிளை தடு­மாறும். இவர்கள் இணைப்­புக்­கு­ ஆ­த­ர­வாக நாடா­ளு­மன்றில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையை வழங்­கினால், ஜனா­தி­பதி அவ­ரது கட்­சியை முழு­மை­யாக கைப்­பற்றும் வேலைத் திட்­டத்தை கைவிட நேரும். இது அவர்­க­ளுக்கு பெரும் அர­சியல் கைசே­தத்தை விளை­விக்கும்.இவை போன்ற சிக்­கல்­களே அவை­யாகும். 

இந்த ஐந்து முக்­கிய தரப்­பு­களில் இருந்து கிளம்பும் எதிர்ப்­பு­களை சமா­ளிக்கும் உத்­தி­களை ஐ.தே.கட்சி வெளி நாட்டு உபாய வகுப்­பா­ளர்­களின் உத­வி­யுடன் பெற்­றி­ருக்­கலாம். இந்­திய இலங்கை ஒப்­பந்­தத்­தி­னூ­டாக வடக்கும் கிழக்கும் இணைக்­கப்­பட்ட போது இந்­தி­யாவின் உபாய வகுப்­பா­ளர்­களே உத­வி­னார்கள் என்­பது இர­க­சி­ய­மல்ல.

எனவே இவ்­வி­ட­யத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு தேர்ந்த அனு­ப­வமும் அறிவும் உண்டு.இக்­கட்­சியே வட­கி­ழக்கை இணத்த கட்­சி­யாகும்.இவ்­வி­ணைப்பை 21வரு­டங்கள் எவ­ராலும் அசைக்க முடி­ய­வில்லை. அன்­றைய காலத்தில் ஐ.தே.கட்­சியின் உறு­தி­யான முடி­வினால் பேரின சக்­திகள் இணைப்பை தடுக்க வக்­கற்­றி­ருந்­தனர், ஆயினும் வீதிகள் எங்கும் டயர்­களை எரித்தும், பல பஸ்­களை எரித்தும், அரச உட­மை­களை சேதம் செய்தும் இந்­திய இலங்கை ஒப்­பந்­தத்தை எதிர்த்து மாபெரும் ஆர்ப்­பாட்­டங்­களை செய்­தி­ருந்­தனர். இவ்­வார்ப்­பாட்­டங்கள் அன்­றைய அர­சினால் ஈவி­ரக்­க­மின்றி அடக்கி ஒடுக்­கப்­பட்­டன.

காலம் கனியும் வரை காத்­தி­ருந்த சிங்­கள பெருந்­தே­சி­ய­வாத சக்­திகள் நீதி மன்­றத்தின் மூலம் மீண்டும் வடக்­கையும் கிழக்­கையும் பிரித்­தனர். இதற்கு அன்­றைய அரசின் ஊமைச் சம்­ம­தமும் இருந்­தது. தற்­போது ஐ.தே.கட்சி, இணைப்­புக்கு எதிர்­கொள்ளும் சவால்­களை எவ்­வாறு முறி­ய­டிக்க முயற்­சிக்கும் என நோக்­குவோம். எதிர்­கொள்­ளப்­படும் சவால்­களை சிங்­களத் தரப்­பி­லி­ருந்து வரு­வன என்றும், முஸ்லிம் தரப்­பி­லி­ருந்து வரு­வன எனவும் இரட்­டை­யாக சுருக்கிப் பார்க்­கலாம்.

சிங்­களத் தரப்பை சமா­ளிக்க இது வட­கி­ழக்கு இணைப்­பல்ல. வடக்­கையும் கிழக்­கையும் மீள் எல்லை நிர்­ணயம் செய்து இரண்டு மாகா­ணங்­க­ளாக பிரிப்­ப­துதான் என்று கூறி அம்­பா­றையில் உள்ள சிங்­கள பெரும்­பான்மை நிர்­வாகப் பிரி­வு­களை வெட்டி எடுத்தும் மொன­ரா­கலை மாவட்­டத்­திலும், பதுளை மாவட்­டத்­திலும் இருந்து ஓரிரு கிரா­மங்­களை வெட்டி எடுத்தும் இவற்றை இணைத்து சிங்­க­ள­வர்­க­ளுக்கு என்று கிழக்கில் ஒரு தனி மாகா­ணத்தை உரு­வாக்கி சிங்­கள தரப்பின் எதிர்ப்பை மடக்­கலாம். மேல­தி­க­மாகத் தேவைப்­பட்டால், திரு­கோ­ண­ம­லையில் உள்ள சிங்­க­ள­வர்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்ட சேரு­விலைத் தொகு­தியை பொலன்­ன­றுவை மாவட்­டத்­துடன் இணைத்தும் விடலாம்.

இப்­படி நடந்தால் தமிழ்­பேசும் ஒரு மாகா­ணமும், சிங்­கள மாகாணம் ஒன்­று­மாக இரண்டு மாகா­ணங்­களே இருக்கும். ஆயின் சிங்­க­ள­வர்­க­ளுக்கு என்ன பிரச்­சினை?

தமிழர் தலை­மை­களும் யதார்த்­தத்தின் அடிப்­ப­டையில் இணைந்த வட­கி­ழக்கு எனக் கரு­து­வது தமிழ் பேசும் நிலம் என்­ப­து­தானே! (கிழக்கில் நிகழ்ந்த சிங்­களக் குடி­யேற்­றங்­களின் ஆபத்து பற்றி 70 களில் அம்­பாறை தமிழ், முஸ்லிம் மக்­களின் மத்­தியில் பிரச்­சாரம் செய்­த­த­னால்தான் தியாகி சிவ­கு­மாரன் தலை மறைவு வாழ்க்­கையை மேற்­கொண்டார். மட்­டு­மல்­லாது இலங்கை பாது­காப்பு தரப்­பி­னரால் படு­கொ­லையும் செய்­யப்­பட்டார்.

தமிழ்­பேசும் மக்­களின் விடு­த­லைக்­காக கொடுக்­கப்­பட்ட முதல் உயிர்க் கொடை இவ­ரு­டை­ய­துதான். இவர் போல் சிந்­தித்த பலர் இன்று உயி­ரோடு இருந்­தி­ருந்தால் வர­லாற்றில் தமிழ் முஸ்லிம் பிரி­வி­னையே நிகழ்ந்­தி­ராது. இவரும் இவர் போல அக்­கா­லத்தில் செயற்­பட்டு உயிர் நீத்த பலரும் நிகழ்­கால தமிழ் பேசும் தலை­வர்­க­ளையும், பரம்­ப­ரை­யையும் மன்­னிக்க வேண்டும்.)

புதிய அர­சி­ய­ல­மைப்பில் நாட்டின் அந்­தஸ்து ஒற்­றை­யாட்சி என்ற பதமா அல்­லது சமஷ்டி என்ற வடி­வமா என்­கிற நெருக்­க­டிக்கு, அரசும், அதில் அங்கம் வகிக்கும் இரு பெரும் கட்­சி­களும், அர­சியல் சாசன விற்­பன்­னர்­களும் அப்­ப­டி­யொரு பதத்­தினை யாப்பில் சேர்க்கத் தேவை­யில்லை என்று தந்­தி­ர­மாக உடன்­பட்­டுள்­ளனர். இதனை நாட்டு மக்­க­ளுக்கு நாசூக்­காக விளக்­கியும் வரு­கின்­றனர். தமிழ்­தே­சியக் கூட்­ட­மைப்பும் இவ்­வி­ட­யத்தில் விட்டுக் கொடுப்­புக்கு தயா­ராக இருப்­பது போலவே தென்­ப­டு­கி­றது. 

இதே உத்­தியை பாவித்து, வடக்கு கிழக்கு இணைப்பு என்று எவரும் கரு­தத்­தே­வை­யில்லை இது எல்லை நிர்­ணயம் மட்­டும்தான், வட­கி­ழக்கு மாகாணம் என்ற பெயரைப் பாவிக்கத் தேவை­யில்லை என்று சொல்லி சிங்­க­ள­வர்­களை திருப்­திப்­ப­டுத்த முடியும். முஸ்லிம் தரப்பை சமா­ளிக்க, இது நிரந்­தர இணைப்பல்ல தற்­கா­லி­க­மா­ன-­ நி­பந்­த­னை­யுடன் கூடிய இணைப்­பாகும் எனக் கூறு­வார்கள்.சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு ஒன்றின் மூலம் முஸ்­லிம்­க­ளுக்கு நியாயம் கிடைக்கும் எனவும் உத்­த­ர­வாதம் தரப்­படும்.

முஸ்­லிம்கள் ஆர்ப்­பாட்டம் செய்­ய­மாட்­டார்கள், செய்­தாலும் இல­கு­வாக அடக்­கலாம், இலங்கை முஸ்­லிம்கள் உத்­த­ர­வா­தங்­களை உறு­தி­யாக நம்பி தொடர்ந்தும் ஏமாறத் தயா­ரான அர­சியல் பிரா­ணிகள், முஸ்லிம் தலை­வர்கள் ரொக்­கங்­களின் நாய­கர்கள் ஆகையால் வாங்­கி­வி­டலாம், செயற்­கை­யாக மார்க்கம் சார்ந்த நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தினால் அர­சியல் விவ­கா­ரங்­களில் இருந்து முஸ்லிம் சமூ­கத்தை திசை­மாறச் செய்­யலாம்.  இந்த இடை­வெ­ளியில் உரி­மையின் கழுத்தை அறுத்­தாலும் அந்த சமூகம் உணர்ந்து கொள்­ளாது. கண்ணை மூடிக் கொண்டு தற்­கா­லிக இணைப்பை பத்து வருடம் ஓட்­டினால் முஸ்­லிம்­களின் அடுத்த பரம்­பரை அஷ்­ரஃபை மறந்­ததைப் போல இதையும் மறந்­து­விடும்.எனவே தற்­கா­லிகம் நிரந்­த­ர­மா­கி­விடும்.

ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு முஸ்லிம் சமூ­கத்தின் மீது மயக்க மருந்தை விசிறத் தெரியும், இதில் இக்­கட்­சிக்கு எழு­பது வருட அனு­பவம் உள்­ளது. அக்­கா­லத்தில் பச்சை நிறத்தை வைத்து ஏமாற்­றினர். அது இஸ்­லாத்தின் நிற­மல்­லவா, பள்­ளி­வா­யில்­களில் ஏற்­றப்­படும் கொடி­களும், அவு­லி­யாக்­களின் அங்­கி­களும் பச்­சை­யல்­லவா, ஐ.தே.கட்சி முஸ்­லிம்­களின் நிறத்தைக் கொண்ட கட்சி, எனவே அதற்கே நமது ஆத­ரவு என அரை நூற்­றாண்­டு­க­ளாக செயற்­பட்ட சமூ­கத்தின் மூன்றில் ஒரு பங்கை அஷ்ரஃப் விழிப்­பு­ணர்­வூட்டி அர­சி­யலில் வெற்றி பெற வைத்தார்.

அவர் தனது கட்­சியின் கொடியில் பச்­சையில் மஞ்­சளைக் கலந்தும், பச்சை நிற மரத்தை சின்­ன­மாகக் கொண்டும் முஸ்­லிம்கள் அன்று சென்று கொண்­டி­ருந்த பாதை­யி­லேயே புகுந்து அடை­யா­ளத்தை நிறுவி முஸ்­லிம்­களை கவர்ந்­தி­ழுத்தார்.

தனித்­துவ அர­சி­யலில் நீலமும், பச்­சையும் நமக்கு ஒரு பொருட்­டல்ல, நமது அர­சியல் இலக்கு ஆகக்­கு­றைந்­தது இனப்­பி­ரச்­சினைத் தீர்வில் நமக்­கென்று ஒரு பங்­குதான் என்­பதை அஷ்ரஃப் தெளி­வாகக் குறிப்­பிட்டுச் சென்­றுள்ளார்.இக்­க­ருத்­தையே நாம் பின்­பற்­ற­வேண்டும். நல்லாட்சி அரசின் தமிழர்களுக்கான ஆகக்குறைந்த நியாயம் வழங்கும் நிகழ்ச்சி நிரலில் கிழக்கு சிங்களவர்களுக்கும் திருப்தி தரும் தீர்வு உள்ளது. கிழக்கு முஸ்லிம்களுக்கு என்று உத்தரவாதம் மட்டுமே உண்டு. முஸ்லிம்கள் ஏமாந்தால் வட கிழக்கு இணைப்பு சாத்தியம்தான்.

ஐக்கிய தேசியக் கட்சியினால் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட பூச்சாண்டித் தீர்வுகளான மாவட்ட சபை, மாகாண சபை போன்றவற்றை ஏற்றுக் கொள்வது போல் நடித்து அவற்றை படிக்கட்டுகளாக பாவித்து அடுத்த கட்டத்துக்கு காய் நகர்த்தியதைப் போல், சிங்களவர் வாழும் இடங்களை தவிர்த்து இணையும் வட கிழக்கை ஏற்றுக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு காய் நகர்த்த தமிழ்த்தேசிய ஜனநாயக சக்திகளால் முடியும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-விடிவெள்ளி- 

1 comment:

  1. இதுதாண்டா அரசியல். ராஜபக்ச அன் கோ களுக்கு வால் ( வால் பிடித்த ) பிடிக்கும் நீர். எந்த முகாந்திரத்தில் முஸ்லிம்களை ஏமாளிகள் மாதிரி எடை போடுவீர். றிசாத்தையும், ஹக்கீமையும் பிச்ச வேணாம் நாயை பிடி என ஓடோடி வர வைத்தவர்கள் ( நீர், ஹிஸ்புல்லாஹ், அதாவுல்லா போன்றவர்களை தவிர) இந்த முஸ்லிம்கள். இலங்கையில் முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றை சீர் தூக்கி பார்த்தால், அதன் தலைவர்கள் ( அறிஞர் சித்திலெப்பை, டாகடர் டி பி ஜாயா, பதியுதீன் மஹ்மூத், எ சி எஸ் ஹமீது, எம் எச் எம் அஸ்ரப் ) மிகவும் சாதுரியமாக அரசியல் வழிகாட்டிகளாக இருந்துள்ளார்கள். இலங்கை இந்திய ஒப்பந்தம் எப்படி நடந்தேறியது, 13 வது திருத்தச்சட்டம் எந்த சூழ்நிலையில் உருவானது என்பதை சிறிதளவும் புரியாதவர் போல் தனது வகுத்தெரிச்சலை கொட்டியுள்ளீர். வடகிழக்கு இணைப்பை தலைவர் அஸ்ரப் அவர்கள் நிபந்தனைகளுடன் ஏற்றுக் கொண்டுள்ளார் என்பதை சந்திரிகா அம்மையாரின் தீர்வுத்திட்டத்தை பாரும் உமக்கு புரியும். இப்போது அதட்கும் நாம் தயார் இல்லை என்பது வேறுவிடயம். அது புலிகள் ( இவர்கள் காலத்தில் ஒரு கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டோம்) இருக்கும் போது, இப்போது நிலைமை வேறு. ஆக தயவு செய்து முஸ்லிம்களையும் அதன் புத்தி ஜீவிகளையும், படித்த இளைஞர்களையும் கேனப்பயல்கள் என்று கணக்கு போடாதே வஸீர் அவர்களே.

    ReplyDelete

Powered by Blogger.