Header Ads



விக்னேஸ்வரனுக்கு யாழ்ப்பாண முஸ்லிம்கள், அனுப்பியுள்ள கடிதம்..!

சீ . வீ. விக்னேஸ்வரன் 
முதலமைச்சர் 
வட மாகாண சபை 
கண்டி வீதி 
கைதடி , இலங்கை 

28/12/2016

வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் சம்பந்தமாக 

ஐயா !
  
கடந்த இரண்டு வருடங்களிற்கு மேலாக வட மாகாண முதலமைச்சவராக தாங்கள் பதவி வகித்து வருகின்றீர்கள் , அது போன்று வட மாகாண முஸ்லிம்களை அரவணைத்தே செல்வதாகவும் அவர்களுக்கு அநீதி இழைக்கவில்லை என்றும் இதுவரை மூவாயிரம் முஸ்லீம் மக்களுக்கு காணிகள் வழங்கியிருப்பதென்றும் வட மாகாண உயர் சபையிலே கருத்து வெளியிட்டிருந்தீர்கள் . 

மேற்படி தாங்கள் கூறிய கருத்தின் அடிப்படையில் உண்மைத்தன்மையினை தெளிவுப்படுத்துவதோடு , வட மாகாணத்தில் பகிர்ந்தளிக்கப்பட்ட காணி விபரங்களை தெளிவுப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் வட மாகாணத்தில் முஸ்லிம்களுக்காக 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடந்த அரசாங்கத்தினால் ஒரு சில மீள் குடியேற்றங்கள் வழங்கப்பட்டதுடன், தாங்கள் பதவியேற்ற பின் இதுவரை எத்தணையாயிரம் மீள்குடியேற்றங்கள் முஸ்லீம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு பாசிச புலிகளினால் விரட்டியடிக்கப்பட்டு மீண்டும்  தமது சொந்த பூர்வீக மண்ணில் வாழ்வதற்காக  சென்ற போதும் அதற்கான அடிப்படை வசதிகள் இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை. 

மேலும் முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் வட மாகாண சபை அசமந்த போக்கினை கையாள்கிறது என்ற குற்றச்சாட்டினை தமிழ் அரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரன் கூறியுள்ளார். தாங்கள் அண்மையில் கூறிய 3000 முஸ்லிம்களின்  காணி பகிர்ந்தளிக்கப்பட்ட விடயங்களை மாவட்ட ரீதியாக தெளிவுப்படுத்த வேண்டும் என்பதுடன் , இன்னும் 50000 யிரத்திற்கு அதிகமான முஸ்லிம்களை மீள் குடியேற்ற வேண்டிய தேவை இருக்கின்றது அதனை விரைவில் மேற்கொள்வீன்றீர்கள் நாங்கள் நம்புகின்றோம்.நல்லாட்சி அரசாங்கத்தில் சிறுபான்மைக்குள்ளேயே பிரச்சினைகளையே தீர்க்கத்தாத சமயம் நாட்டின் சுபீட்ச்சத்தை அடைய முடியாது. 

அதை விடுத்து இனவாதத்தைதூன்டி அப்பாவிமக்க்ளை பொய்யான வார்த்தைகளையும்  கூறி உசுப்பேத்தி அரசியல் லாபம் தேட முயற்சிக்காதீர்கள்.

மேற்கூறிய விடயங்களுக்கான தங்களுடைய பதில்களை வெகுவிரைவில் தருவின்றீர்கள் என்று எதிர்ப்பார்க்கின்றோம்

JMC INTERNATIONAL

No comments

Powered by Blogger.