Header Ads



பொய் சொல்லும் விக்னேஸ்வரன் - யாழ்ப்பாண முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு

-Jan Mohamed-

வடமாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன்  நேற்று (27) வடக்கில் 83% சதவிகிதமான முஸ்லிம்கள் மீளக் குடியேற்றி விட்டதாகவும் யாழ்ப்பாணத்தில் ஏறக் குறைய 550 குடும்பங்களை வடமாகாண சபை குடியேற்றிவிட்டதாகவும் பொய்யான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றத்துக்கு விண்ணப்பித்த 3200 குடும்பங்களில் இதுவரை 137 குடும்பஙகளுக்கே வீடமைப்பு உதவி வழங்கப் பட்டுள்ளது. அதிலும் 60 குடும்பங்களுக்கு கொடுப்பனவுகள் இன்னும் நிலுவையில் உள்ளது. எனவே யாழ்ப்பாணத்தில் 4% சதவிகிதம் தான் முஸ்லிம்கள் மீளக் குடியேற்றப் பட்டுள்ளனர்.

எனவே இவ்வாறான பொய்களுக்கு எதிராக வருகின்ற வெள்ளிக் கிழமை 30.12.2016 அன்று புத்தளம் ரத்மல்யாயவில் ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.
இந்த ஓ 74 குரூப் அங்கத்தவர்கள் சமூகத்துக்காக ஒரு அரை மணி நேரத்தை செலவழித்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவார்களா? 

அவ்வாறாயின் மலீக் மௌலவி, ரிபாஸ், பைரூஸ், மற்றும் தையூப் ஆகியோரைத் தொடர்பு கொள்ளவும்.

ஏனைய சமுதாய நலன் விரும்பிகளையும் இதில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.


1 comment:

  1. மேற்கூறப்பட்டவர்களின் கையடக்கத் தொலைபேசி இலக்கங்களை தெரிந்தவர்கள் இப்பகுதியில் பதிவிட்டால் ஏனையோருக்கு உதவியாய் அமையுமே.

    ReplyDelete

Powered by Blogger.