ஞானசாரரை பிரச்சாரப்படுத்தும் ஜனாதிபதி செயலகம் - முஜீபுர் ரஹ்மான் கடும் தாக்கு
ஜனாதிபதி ஊடகப்பிரிவு இனவாதிகளின் கருத்துக்களை பிரசாரம் செய்வதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் குறறம் சாட்டியுள்ளார்.
கடந்த வாரம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற ஒரு கலந்துரையாடலின் போது பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசாரதேரர் முஸ்லிம்கள் தொடர்பாக ஒரு மோசமான இனவாதக் கருத்தை கருத்தை வெளியிட்டுள்ளார்.
நல்லிணக்கத்தைத் தகர்க்கும் இந்த மோசமான கருத்து அடங்கிய வீடியோவை ஜனாதிபதி ஊடகப்பிரிவு சகல ஊடகங்களுக்கும் வழங்கியிருந்தது. ஒரு சிறுபான்மை இனத்தின் மீது அபாண்டமாக வெளியிடப்பட்ட கருத்தை ஜனாதிபதி ஊடகப் பிரிவு மக்கள் மயப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முஜீபுர் றஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
முஜீபுர் றஹ்மான் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் கீழே தரப்பட்டுள்ளது.
29.12.2016
திரு. மைத்திரிபால சிரிசேன
அதிமேதகு ஜனாதிபதி,
இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசு
கொழும்பு 01.
அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு,
இனவாதிகளின் கருத்துக்களை பிரசாரம் செய்யும் தாங்களின் ஜனாதிபதி ஊடக பிரிவு தொடர்பாக
கடந்த 22.12.2016 அன்று, தொல்பொருள் பெருமதிவாய்ந்த வரலாற்றுத் தளங்களைப் பாதுகாப்பது தொடர்பாக தாங்களின்; உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் முஸ்லிம்கள் தொடர்பாகவும் மற்றும் இஸ்லாமிய போதனைகள் தொடர்பாகவும் உண்மைக்கு புறம்பான இனவாதக் கருத்துக்களை உங்கள் முன்னிலையில் வெளியிட்டிருந்தார்.
இந்நாட்டில் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக மோசமான நச்சுக்கருத்துக்களை பரப்பி வரும் ஞானசார தேரர் தொல்பொருள் பெருமதிவாய்ந்த வரலாற்றுத் தளங்களை அழிப்பதற்கு முஸ்லிம்களுக்கு இஸ்லாம் போதனை செய்வதாக அபாண்டமான இனவாத ரீதியிலான கருத்தை வெளியிட்டிருந்தார்.
இந்த நாட்டில் வாழும் ஒரு சிறுபான்மை இனத்திற்கெதிராக ஞானசார தேரரினால் தாங்களின் முன்னிலையில் முன்வைக்கப்பட்ட இந்த நச்சுக் கருத்து அடங்கிய வீடியோ பதிவை தாங்களது ஜனாதிபதி ஊடகப் பிரிவு சகல ஊடகங்களுக்கும் வெளியிட்டும் இருக்கிறது. தாங்கள் இந்நாட்டில் நல்லிணக்கம் கொண்ட நல்லாட்சியை உருவாக்க செயலாற்றும் இத்தருணத்தில் தாங்களது ஊடகப் பிரிவு நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் ஞானசார தேரரின் இனவாதக் கருத்தை நல்லாட்சியின் அரசாங்க வளங்களைப் பயன்படுத்தி அரச அங்கீகாரத்தோடு மக்கள் மயப்படுத்திக்கொண்டிருக்கிறது.
தாங்களது ஊடகப் பிரிவு வெளியிட்டிருக்கும் இந்த வீடியோ இனவாதிகளுக்கு உறுதுணையாய் அமையப்போகிறது என்பது மட்டும் தெளிவாகிறது. நல்லாட்சிக்கும் நல்லிணக்கத்திற்கும் பொருத்தமில்லாத இந்த செயற்பாடு தொடர்பாக உங்கள் ஊடகப் பிரிவு மீது விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறும் தயவாய் வேண்டுகிறேன்.
இவ்வண்ணம்
முஜீபுர் றஹ்மான்
கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்,
கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவர்
இந்த அரசு முஸ்லிகளின் பெரும் வாக்கு வங்கியால் ஆட்சி பீடம் ஏறியதில் இருந்து பலவகையிலும் முஸ்லிம்களுக்கு எதிராகவே தனது காய் நகர்த்தல்களை இட்டுச் செல்கின்றது.யாரை முஸ்லிம்கள் ஆட்சியில் இருந்து இறக்கினார்களோ அந்த ஆட்சியாளர்களிடம் பல சுற்று பேச்சு வார்த்தை இரகசியமாக நடந்துகொண்டு இருக்கிறது.எந்த இனவாதிக்கு எதிராக முஸ்லிம்கள் எதிர்த்து இந்த அரசை ஆதரித்தார்களோ அதே இனவாதியை தனது மாளிகையில் வெண் கம்பளம் விரித்து இருப்பாட்டி காலில் விழுந்து பாலூட்டி இரசிய பேச்சு வார்த்தை நடத்துகிறது.முஸ்லிம்களின் மீள் குடியேற்றம்.முஸ்லிம்களின் பள்ளிகள் உடைப்பு,இனவாத ஆர்ப்பாட்டங்கள்,கூட்டங்கள் மையவாடி நிலங்கள் போன்ற பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றன.எந்த அரசு வந்தாலும் வழங்கப்படும் அமைச்சு பதவிகள் வழமைபோல் நமது மௌனம் காக்கும் தலைவர்களுக்கு கிடைக்கிறது,அதைத்தவிர இந்த சமூதாயத்துக்கு இந்த அரசால் எந்தப் பிரயோசனமும் இல்லை,மாறாக தூர நோக்கோடு சதித்திட்டங்கள் தீட்டப்பட்டுக் கொண்டு இருக்கிறது,கடுமையான சதிகார வேலையில் இந்த அரசு இறங்கியுள்ளது ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் மனதில் பயம் தோன்றுகிறது,எது எப்படி நடந்தாலும் நமது தலைகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்கள்,கண் விழித்தால் கட்சி சீர் திருத்தப்பணியை செய்வார்கள்.
ReplyDeleteThis is called "Yahapalanaya Alwa" to Muslims.
ReplyDeleteA national govt should be able to solve almost all difficult
ReplyDeleteissues without any trouble and by getting majority consent.
But this doesn't seem happening with YAHAPALANAYA as far as
Muslim's issues are concerned.Muslim's top most issue
currently is, living without fear of Extremist Buddhist
threat led by BBS and their associates. The present rulers
are well aware of it and just trying to pass time with the issue without taking the ride on it. Clear signs are that
both My3 and Ranil are playing politics with the issue
allowing Gnanasara to carry on without much intensity !Is
that what we wanted ? WARNING ! MUSLIMS WILL NEVER BE
ALLOWED BY ANY OF THE SINHALESE LEADER TO WIN OVER THEIR
CLERGY AND IF THAT HAPPENS ,THAT IS THE END OF THAT RULE
AND THE RULERS !In the meantime our MUSLIM LEADERS ,
WHOEVER THEY ARE , will try to keep in shape by jumping
the queue and issuing emotional statements to show that
they are on your side for their politics .