Header Ads



இணை­ய­த­ளங்­களில் வரு­கின்ற தக­வல்­களை, வெளி­நா­டு­களில் உள்­ள­வர்கள் நம்­பி­வி­டு­கின்­றனர் - மைத்­திரி­பால


மீண்டும் நாட்டில் யுத்தம் ஒன்று ஏற்­ப­டாமல் நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக நாங்கள் பாடு­பட்டுக் கொண்டி­ருக்­கும்­போது நாங்கள் நாட்டை பிரிக்­கப்­போ­வ­தா­கவும் இரா­ணு­வத்தைப் பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தா­கவும் பொய்யான பிர­சா­ரங்­களை சிலர் மேற்­கொண்­டு­ வ­ரு­கின்­றனர் என்று  ஜனா­தி­பதி மைத்­ திரி­பால சிறி­சேன தெரி­வித்தார். 

அவ்­வாறு இணை­ய­த­ளங்­களில் வரு­கின்ற தக­வல்­களை வெளி­நா­டு­களில் உள்­ள­வர்கள் நம்­பி­வி­டு­கின்­றனர். ஆனால் அவை  பொய்­யான தக­வல்­க­ளாகும் என்றும் ஜனா­தி­பதி  சுட்­டிக்­காட்­டினார். 

மலே­ஷி­யா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜயம்  ஒன்றை மேற்­கொண்­டி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  கோலா­லம்­பூரில்  பிரிக்பீல்ட் என்ற இடத்தில் அமைந்­துள்ள  பௌத்த மகா விஹா­ரையின் மலே­ஷிய பிர­தான சங்க தேரர் கிரிந்தே தம்­ம­ரத்­னவை நேற்றுக் காலை சந்­தித்து  உரை­யா­டி­ய­போதே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் கிரிந்தே தம்­ம­ரத்ன தேரரும்  சிறிது நேரம் சுமு­க­மான கலந்­து­ரை­யாடல்  ஒன்றை நடத்­தினர். 

இதன்­போது ஜனா­தி­பதி மேலும் குறிப்­பி­டு­கையில்  

வெளி­நா­டு­களில் உள்­ள­வர்கள்  இணை­ய­த­ளங்கள் ஊடா­கவே  அனைத்து விட­யங்­க­ளையும் பார்க்­கின்­றனர். அவற்றில் இலங்கை தொடர்பில் வரு­கின்ற அனைத்து விட­யங்­க­ளையும்  உண்மை என்றும்  வெளி­நா­டு­களில் உள்ள மக்கள் நம்­பு­கின்­றனர். 

வேறு வழியி;ல் தக­வல்கள் வரு­வ­தில்லை.  இணை­ய­த­ளங்கள் ஊடா­கவே தக­வல்கள் வரு­கின்­றன.  உடனே அதில் உள்­ள­வற்றை உண்மை என நம்­பு­கின்­றனர். அதுதான் நடந்­து­கொண்­டி­ருக்­கின்­றது. 

நாங்கள் நாட்டைப் பிரிக்­கப்­போ­வ­தா­கவும்  இரா­ணுவ முகாம்­களை அகற்­றப்­போ­வ­தா­கவும்  தவ­றான தக­வல்க  ளை பரப்­பிக்­கொண்­டி­ருக்­கின்­றனர். இரா­ணு­வத்தை பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தா­கவும்  கூறி­வ­ரு­கின்­றனர்.  இவைதான் இணை­ய­த­ளங்­களில் தற்­போது பதி­வேற்­றப்­ப­டும்­வி­ட­யங்­க­ளாக உள்­ளன. 

இவை பாரிய பொய்­யான  பிர­சா­ரங்­க­ளாகும். நாங்கள் எவ்­வாறு நாட்டை முன்­னேற்­று­வது என்­பது குறித்து பாடு­பட்­டு­வ­ரு­கின்றோம். மீண்டும்  யுத்தம்  ஒன்று ஏற்­ப­டாமல்  நாட்டை கட்­டி­யெ­ழுப்ப பாரிய செயற்­பாட்டில் ஈடு­பட்­டுள்ளோம்.  

இங்கும் சிலர் ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­து­கின்­றனர்.  எவ்­வ­ள­வா­வது பணத்­தைத்­தே­டிக்­கொள்­ளவே இவ்­வாறு  கூச்­ச­லி­டு­கின்­றனர்.  ஒரு­சிலர் ஒன்­றி­ணைந்து சத்­தம்­போட்­டு­விட்டு  அதனைப் புகைப்­படம் எடுத்து  டொலர்­களை பெற்­றுக்­கொள்­வதே இவர்­களின் நோக்­க­மாகும் என்றார்.   

இதன்­போது மலே­ஷிய பிர­தான சங்க தேரர் கிரிந்தே தம்­ம­ரத்ன கருத்து வெளி­யி­டு­கையில், நாங்கள் இங்கு என்ன செய்­ய­வேண்டும் என்று கூறுங்கள்.  எங்­களால் முடிந்­ததை நாங்கள் செய்­கின்றோம்.  இப்­போ­தைய காலத்தில் இணை­ய­த­ளங்­களில் நல்­ல­தைப்­போன்று  தீமை­யான விட­யங்­களும் இடம்­பெ­று­கின்­றன என்றார். 

கிரிந்தே தம்­ம­ரத்­தன தேர­ருடன் கலந்­து­ரை­யா­டிய பின்னர்  ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன  விஹா­ரையில் நடை­பெற்ற  மத வழி­பாட்டு நிகழ்­விலும் கலந்­து­கொண்டார்.

1 comment:

  1. Mr. President

    Vinai vithaithavan vinai aruppan, thinai vithaithavan thinai aruppan

    Do good, beget good; Do bad, beget bad

    Mr Ranil had gone to America to learn how to topple the MR government through social media. (Don't you remember)

    In your election campaign lot of news were spread to public through social media, Such as

    • Lamborghini Car
    • Helicopter for MR’s son
    • Gold horse
    • Five star hotels in Dubai
    • Gold containers
    • Private flight

    Even one of those not proven yet. (Shame on your government)

    You know very well that Sri Lankans only interested in fake news.


    ReplyDelete

Powered by Blogger.