புதிய அரசியலமைப்பினை, நிறைவேற்றிக் காட்டுமாறு சவால்
நல்லாட்சி அரசாங்கத்தின் புதிய அரசியல் அமைப்பினை தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இத்தேகந்தே ஞானீஸ்ர தேரர் தெரிவித்துள்ளார்.
கண்டி தலதா மாளிகையில் நடைபெற்ற பூஜை வழிப்பாடுகளின் போது அவர் இதனைத் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
நல்லாட்சி அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பினை சமர்பிக்க முயற்சிகின்றது.
முடிந்தால் புதிய அரசியல் அமைப்பினை நிறைவேற்றிக் காட்டுமாறு நாம் அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் சவால் விடுக்கின்றோம்.
இனவாத மதவாத சூழ்ச்சித் திட்டங்கள் அனைத்தும் தோற்கடிக்கப்பட வேண்டியது அவசியமானது.
சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வாழக்கூடிய ஓர் பின்னணி உருவாக்கப்பட வேண்டும்.
மேலும் தற்போதைய நாடாளுமன்றம் தொடர்பில் நம்பிக்கை கொள்ள முடியாது என இத்தேகந்தே ஞானீஸ்ர தேரர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசியல் சந்தர்ப்பவாதம் கலந்தது. காலனித்துவ காலத்தில் ஓரினம் அதிக சலுகைகளை அனுபவித்து வந்தது. இதன் ரசம்ருசிதான் சுதந்திர இலங்கையில் 50க்கு50என்றதிட்டத்தை சேர் பட்டம் பெற்ற பொன்னர் இருவர் கொண்டுவந்தனர்.
ReplyDeleteஇதனை அன்றைய சிங்கள தலைவர்கள் முஸ்லிம் தலைவர்களது அனுசரணையுடன் வெற்றி கொண்டனர். பின்னர் வந்த கட்சி அரசியலும் தமது இருப்புக்களை உறுதி செய்வதற்காக பெரும்பான்மையினரை திருப்திப்படுத்துவதற்காகவே செயற்பட்டனர். இதன் போது தமிழர்களைப் புறந்தள்ளியதுடன் தேசியத்தை ஆதரித்துவந்த முஸ்லிம்களையும் புறக்கணித்தனர்.
இலங்கையின் இரு யாப்புக்கள் கூட பௌத்த தேசியத்தை மட்டுமே கருத்திற்கொண்டன. 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இப்பேரினவாதம் இடம்தரவில்லை. இந்நிலையில் இதைவிடவும் கூடிய அதிகாரங்களைக் கொண்ட அரசியலமைப்பொன்றை நல்லாட்சி எனப்படும் பேரின அரசுகொண்டுவரும் என்று நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. தேரபிக்குகளையும் பேரினவாதிகளையும் பின்னாலிருந்து இயக்குகின்ற பொம்மலாட்டத்தையும் இவ்வரசும் அரங்கேற்றும் என்பதைக் கூட புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு நாங்கள் ஏமாளிகளுமல்ல. ஆட்சிக்காலம் முடியும் வரை இது தொடர்ந்துகொண்டேயிருக்கும்.
இந்த தேரர்கள் உண்மையில் கண்ணியமிக்க புத்தர் அவர்களின் போதனைகளை படித்துள்ளார்களா? ஏனைய மக்களின் உருமைகளை பற்றி அவர் எவ்வளவு தெளிவாக எடுத்து கூறியுள்ளார் இந்த தேரைகள் மஞ்சள் ஆடைகளை அணிந்துகொண்டும் மதுவில் மூழ்கிகொண்டும் ஏனைய பித்தலாட்டங்களை செய்துகொண்டு நாங்கள் சட்டவிதிகள் அனைதிற்கும் மேலென்று ரவுடிதனம் செய்கின்றார்கள்,கேவலம் இவர்களையும் மங்காத மடையர்கள் வணங்குகின்றார்கள்,மக்களே இந்த தேரர்கள் அனைத்மதிலும் ஆசைவுள்ள மனித இயற்கை சுபாவத்தை தாண்டியவர்கள் அல்ல எந்த மத்த்திலும் அல்லாஹுவை என்நேரத்திலும் அஞ்சுபவன் மட்டும்தான் கண்ணியமானவன் மனிதர்களின் உருமைகளில் அத்துமீறும் இந்த தேரர்களை நாம் எப்படி நோக்கவேண்டும் நீங்கள் முடிவு எடுங்கள்!!!
ReplyDelete