Header Ads



மௌத்தாகும் கல்புகள்..!


மனிதனுடைய உடல் சம்பந்தமாக என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றதோ, கல்புக்கும் இதயத்துக்கும் உரியதாக அல்லாஹ் ஆக்கி வைத்திருக்கிறான். உடலைப் பேணுவது போன்று உள்ளத்தைப் பேண வேண்டும். உடல் கெட்டால் பெரிய நஷ்டம் வருவதில்லை. உள்ளம் கெட்டால் மிகப்பெரிய நஷ்டத்திற்குள்ளாவோம்.

உடலுக்கு இறப்பு இருப்பதுபோல் உள்ளத்துக்கும் இறப்பு உண்டு. கல்பு வாழ்ந்து உடல் இறந்தால் பராவாயில்லை. உடல் மட்டும் வாழ்ந்து கல்பு மரணித்திருந்தால் பாவச் செயல். இதயத்தில் உயிர் இல்லாமல் வாழக்கூடிய சூழல் நிலவுகிறது.

கல்பு உயிருடன் இயங்க அல்லாஹ்வின் நேர்வழி இதயத்தில் பதிந்திருந்தல் அவசியம். ‘‘நீங்கள் இரகசியப்படுத்துவதையும், பகிரங்க படுத்துவதையும் அல்லாஹ் அறிந்திருக்கிறான்.’’ திக்ர் எந்தளவுக்கு உயிரோட்டத்துடன் செயல்படுகிறதோ அதற்குத்தக்க உயிர்ப்புடன் இயங்கும். ‘வன்’ நிலையுள்ள கல்பு எதைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளாது. வெளியே தள்ளும். மூமீன்களிடம் இறந்த கல்பு இருக்கக்கூடாது. இருக்க முடியாது.

இயங்கும் உயிரோட்டச் சக்தி சிலருக்கு அதிகமாகவும் பலருக்கு குறைவாகவும் வேறுபட்டிருக்கலாம். அல்லாஹ்வுடைய திக்ர் சார்ந்து இயங்கும் உயிரோட்டமுடைய கல்பு, உயிரற்ற கல்பு. திக்ர் ஏற்கப்பட்டு நிரம்பியிருத்தல், குறைவாக விருத்தல் செயல்பாடுகள் மூலம் கண்டுபிடிக்கலாம். தன்னை விளங்கும் அறிவு தனக்கு மட்டுமே தெரியும். எவர் தன்னை விளங்குகிறாரோ அவர் ‘ரப்’பை விளங்கிக் கொண்டிருக்கிறார். தன்னை விளங்க கல்பை விளங்க வேண்டும்.

உடலுக்கு நோய், சுகம் இரண்டும் உண்டு. கல்புக்கும் அது போன்ற நிலைதான். மனக்கலக்கமற்று தெளிவான நிலையில் கல்பு இருந்தால் அது நோயற்ற கல்பு. கோபம், தாபம், தீமை, கேடு, தீயகுணம் கல்பில் குடி கொண்டிருந்தால் நோய்வாய்ப்பட்ட கல்பு. மருந்து, அல்லாஹ் எதைச் சொன்னானே ரசூல் எதைச் செய்யச் சொன்னார்களோ, கடைப்பிடிக்கப்பட்டால் கல்பு நோய் நீங்கும்.

உடல் விழிப்புடன் இயங்குவது போல் கல்பு விழிப்புக்கு மருந்து குர்ஆன். மனித உடலுக்கு இதயம் பிரதானம். 1 நிமிடத்துக்கு 6 லிட்டர் ரத்தத்தை சுத்திகரிக்கிறது. மனிதனைப் படைத்த எஜமானன் அல்லாஹ் இதயத்தை இயக்கிக் கொண்டிருக்கிறான். கல்புக்குள்ளிருக்கும் மானசீகமான செய்தி? கல்பு, இருதயம் சதைத்துண்டுக்குள் சக்தி யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கு படிப்பினையிருக்கிறது என்கிறான் அல்லாஹ்.

நாம் காணக்கூடிய வெளித்தோற்றமுடைய இதயம் அல்ல கல்பு. அது மறைபொருள். இதயக்காதுகள் மூடப்பட்டால் உடலின் செவிக்காது உள்வாங்காது. அகக்காது தாழ்த்தி கேட்கும் போது புறக்காது உள்வாங்கும். ஒன்று மூடப்பட்டாலும் எதுவும் ஏறாது.

கல்பை சுத்தமாக வைத்திருக்கவும், உயிரோட்டத்துடன் இயங்க வைக்கவும் பல ஆயத்துகள், ஹதீஸ்கள் இருக்கின்றன. நடப்பு ரமளான் அற்புத மாதம். உள்ளத்தையும், உடலையும் பாதுகாக்கவும், மௌத்திற்குப்பின் எனக்கு பரக்கத் செய்வாயாகவும் என்று வரும் நாட்களில் துஆ கேட்கணும். மறுமைக்காக இவ்வுலக வாழ்வை விற்பவர்களாகவும் ஆகவேண்டும். உங்கள் கல்பிலிருந்து அசுத்தத்தை நீக்கி பரிசுத்தப் படுத்தவே அல்லாஹ் நாடுகிறான். (சென்னை புரசைவாக்கம் பொன்னப்பதெரு ‘‘ஜும்ஆ மஸ்ஜித்’’ ஜும்ஆ உரை.)

மௌலவி, கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பயீ

No comments

Powered by Blogger.