சமய சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது - ஜனாதிபதி
நல்ல ஒழுக்கப் பண்பாடுடைய மனிதர்களை உருவாக்குவதற்கு ஆன்மீக தத்துவங்கள் பெரிதும் உதவுவதாகவும் விரும்பிய சமயத்தைப் பின்பற்றும் சுதந்திரம் இன்று இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
தெம்பல, ரத்தொளுகம மெதடிஸ்த தேவாலயத்தின் 200வது ஆண்டுநிறைவு விழாவில் இன்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாதைகளை அமைத்தல், கட்டிடங்களை அமைத்தல் போன்ற பௌதீக அபிவிருத்திகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் மனிதனது ஆன்மீக பண்பாடுகள் வீழ்ச்சியடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மக்களின் நல்லொழுக்கம் அபிவிருத்தியின் ஒரு முக்கிய அளவுகோலாகும் என்றும் குறிப்பிட்டார்.
கிறிஸ்தவர்களின் பிள்ளைகளை பாடசாலைகளில் அனுமதிக்கும் போது ஏற்படும் பிரச்சினைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்திய ஜனாதிபதி, அவ்வாறு பிரச்சினைகள் இருக்குமானால் கல்வி அமைச்சுடன் கலந்துரையாடி தீர்வுகளைப் பெற்றுத் தருவதாக குறிப்பிட்டார்.
இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் ஆயர் ஆசிறி பெரேரா மற்றும் சீதுவை பிரதேசத்திற்குப் பொறுப்பான பணிப்பாளர் திருத்தந்தை நதீர பெர்னாந்து ஆகியோர்களுக்கான விருதுகளையும் ஜனாதிபதி வழங்கிவைத்தார்.
Post a Comment