'வடமாகாண சபையின் தீர்மானங்கள், குப்பைக்குள்ளேயே செல்லும்'
வடக்கில் பெளத்த விகாரைகள் அமைக்க முடியாது என தீர்மானம் நிறைவேற்றுவதற்கு வடமாகாண சபைக்கு அதிகாரம் இல்லை. அவை குப்பை கூடைக்குள்ளேயே செல்லும் என நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஒரு எழுத்து கூட எழுதப்படாத, புதிய அரசியலமைப்பை விமர்சிக்க வேண்டாம். ஒற்றையாட்சிக்குள் தீர்வை பெற்று கொள்வதற்கும் பெளத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கும் தமிழ் மக்களின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்ப்பு வெளியிடவில்லை என நீதி அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
குறுகிய அரசியல் நோக்கம் உடைய அரசியல்வாதிகளுக்கு இனவாதமே ஒட்சிசன் அழிக்கின்றது. ஞானசாரதேரர் உள்ளிட்டோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். எனினும் பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினைகளுக்கு தீர்வினை எட்ட விரும்புகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் வடமாகாண முதலமைச்சர் முன்னால் நீதியரசர் என்ற வகையில் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென கோரிக்கை விடுத்த நீதி அமைச்சர், ஆளுநரின் அதிகாரம் குறைக்கப்படுதல் உள்ளிட்ட விடயங்கள் யோசனை மட்டத்திலேயே உள்ளன எனவும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் புத்தசாசன செலவின தலைப்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். நாம் மீளவும் பின்நோக்கி செல்வதற்கு தயாரில்லை. அடிப்படைவாதிகளின் நடவடிக்கைகளுக்கு எம்மால் இடமளிக்க முடியாது. நாட்டு மக்கள் மத்தியில் இன நல்லிணக்கம் உள்ளது. ஆனாலும், அரசியல்வாதிகளின் குறுகிய அரசியல் நோக்கத்திற்காக இனவாதத்தை தூண்டி வருகின்றனர். இனவாதத்தை முழுமையாக நாம் இல்லாமல் செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாவிடின் இலங்கையின் அழிவை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
இனவாதமே சில குறுகிய நோக்கம் கொண்ட அரசியல்வாதிகளின் ஒட்சிசனாக உள்ளது. ஒட்சிசன் இல்லாது போனால் வாழ்வில்லாமல் போகும். அது போலவே இனவாதத்தை தூண்டும் அரசியல்வாதிகளின் செயற்பாடு உள்ளது. இனவாதத்தை நாம் முழுமையாக நிறுத்த வேண்டும்.
இதேவேளை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வடக்கில் விகாரைகள் அமைக்க முடியாது என மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். சி.வி.விக்னேஸ்வரன் ஒரு நீதியரசர். இவ்வாறான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவதற்கு என்ன அதிகாரம் உள்ளது? சட்ட பிரகாரம் மாகாண சபைகளுக்கு இவ்வாறான அதிகாரம் கிடையாது. எந்த சட்டத்தின் கீழ் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. சட்டத்தின் அடிப்படையில் இது குப்பை கூடைக்கே செல்லும்?
இதன்போது குறுக்கிட்ட சிறிதரன் எம்.பி.கேள்வி எழுப்புகையில்
வடக்கு மாகாணசபை தீர்மானத்தில் விகாரை எதுவும் அகற்றப்பட வேண்டும் என குறிப்பிடவில்லை. மாறாக 100 வீதம் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் புதிய விகாரைகள் அமைக்க கூடாது என்றே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தவறான கருத்தை முன்வைக்க வேண்டாம் என்றார்.
இதற்கு பதிலளித்த கெஹலிய எம்.பி. வடக்கு 100 வீதம் தமிழர் வாழும் இடம் என கூற முடியாது. வடக்கில் 90,000 முஸ்லிம்கள் வாழ்ந்தனர். சிங்களவர்கள் 15,000 பேர் வாழ்ந்தனர். அவர்களை மீள்குடியேற்றம் செய்ய இடம் வழங்குவதில்லை. இப்படி இருக்கும்போது எப்படி வடக்கில் 100 வீதம் தமிழர்கள் என கூற முடியும் என்றார்.
இ.தற்கு பதிலளித்த சிறிதரன் எம்.பி.
முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்வதில் எமக்கு பிரச்சினை இல்லை. எனினும் கோல்பேஸ் சிங்களவர்கள் வாழும் பகுதிகளுக்கு சென்று பலவந்தமாக கோயில் நிர்மாணிக்க முடியுமா-? என்றார்.
இதன்போது தனது உரையை தொடர்ந்த அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ,
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இதற்கு எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றது. இது பாராட்டத்தக்கது. ஆனாலும், மாகாண சபைகளுக்கு தீர்மானம் நிறைவேற்றும் அதிகாரம் கிடையாது.
முன்னாள் நீதியரசர் என்ற வகையில் சி.வி. விக்னேஸ்வரன் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அத்துடன் தற்போது சிங்களவர்கள், தமிழர்கள் வணங்காத தெய்வம் இல்லை. கோயிலுக்கு சென்று விஷ்ணு, முருகன், சிவன், புத்தர் என அனைவரையும் வணங்குகின்றார்கள். நயினாதீவு விகாரைகளில் அதிகளவு இருப்பது தமிழர்களாகும். எனினும் கோயில் விகாரைகளுக்கு அனைத்து தெய்வங்களையும் வணங்கி விட்டு வெளியே வந்து இந்து, பௌத்தம் என சண்டையிட்டு கொள்கின்றனர். இதனை பார்த்தால் தெய்வம் கூட வியந்து போவார். இவர்கள் எம்மை வணங்குவதனை நினைத்து தெய்வமே இழிவாக சிரிக்கும் நிலைமை ஏற்படும்.
இதன்போது கேள்வி எழுப்பிய வியாழேந்திரன் எம்.பி.
மட்டக்களப்பில் பொதுபலசேனா செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் நீதிமன்ற அறிவிப்பை கிழித்தெரிந்தபோதும் கைது செய்யப்படவில்லை என்றார்.
இதன்போது அமைச்சர் தொடர்ந்து உரையாற்றும்போது
உண்மையில் அந்த சம்பவம் மிகவும் தவறானது. இதற்கு எதிராக சட்டத்தை நிலைநாட்ட முடியாமல் இல்லை. எனினும் நாம் சிறிய, சிறிய பிரச்சினைகளைத் தோற்றுவித்து செயற்படுவதனை விட பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டும். இதற்காக ஜனாதிபதி தலைமையில் சர்வமத கலந்துரையாடலை நடத்தி தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். பேச்சுவார்த்தை மூலம் அவநம்பிக்கையை இல்லாமல் செய்ய வேண்டும். எமக்கும் வேதனை உள்ளது. இதனை தீர்க்கவே நாம் முனைகிறோம் .
புதிய அரசியலமைப்பு
புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படாது என கூறுகின்றனர். ஒரு எழுத்தேனும் எழுதப்படாத அரசியலமைப்பு தொடர்பில் தேவையற்ற பொய் பிரசாரம் செய்ய வேண்டாம்.
இதன்போது கேள்வி எழுப்பிய கெஹலிய எம்.பி.
உபகுழு யோசனை பிரகாரம் ஆளுநரின் அதிகாரம் குறைக்க போவதாக கூறுகின்றனர் என்றார்.
இதன்போது உரையை தொடர்ந்த அமைச்சர்;
புதிய அரசியலமைப்பு இன்னும் தயாரிக்கப்படவில்லை. உப குழுவின் யோசனை மட்டுமே கிடைக்க பெற்றுள்ளது. புதிய அரசியலமைப்பு இந்த உயரிய பாராளுமன்றமே நிறைவேற்றும். நாமே தயாரிக்க போகிறோம். அவ்வாறான யோசனையை நாம் நிறைவேற்ற மாட்டோம். பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் கூட உடன்பட்டுள்ளார். அத்துடன் கர்தினால்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
ஆகவே புதிய அரசியலமைப்பு தொடர்பில் அச்சம் கொள்ள தேவையில்லை. அனைவருக்கும் சமமான உரிமை வழங்கப்படும் இரா.சம்பந்தன் கூட சமஷ்டி அல்லாமல் ஒற்றையாட்சி மூலமே தீர்வுகாண வேண்டும் என கூறியுள்ளார். எனவே ஒற்றையாட்சியே தீர்வு என்றார்.
பேச்சு வார்த்தை நடத்துங்கள், அதே நேரம் சட்டத்திற்கு எதிராகப் போவோரை சட்டத்தின்
ReplyDeleteபிடிக்குள் கொண்டு வாருங்கள்! இந்த ஞானசாரவை ஏன் விட்டு வைத்துள்ளீர்கள்? MR
பெற்ற குழந்தையை M3 வளர்க்கிறார்.
That is right Mr, Wijedosa(injustice minister) our thought we will put you in hell.
ReplyDelete