Header Ads



அஷ்ரபும், ஹிஸ்புல்லாவும்...!!

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் பெருருந்தலைவர் அஷ்ரப்புக்கு பின்னர்  பாராளுமன்றத்தில் முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்குரலாக எந்தவொரு முஸ்லிம் அரசியல் தலைமைகளும் பேசவில்லை. ஆனால் அஷ்ரப் சாதித்த சாதனை போன்றதொரு ஒரு சாதனையை இராஜாங்க அமைச்சர் எம்..எல்..ஏ.ஏம். ஹிஸ்புல்லாஹ் அண்மையில் முஸ்லிம் சமூகம் பற்றி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை மூலம்  திகழ்த்தியதோடு மட்டுமன்றி முஸ்லிம்கள் மத்தியில் பெரும் வரவேற்றும் கிடைத்துள்ளதாக தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறை தலைவரும், அரசியல் விமர்சகருமான பேராசிரியர் றமீஸ் அப்துல்லா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை 2017 ஆம் ஆண்டின் வரவு-செலவுத்திட்டத்தின் புத்தசாசன அமைச்சு, தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சு, சுற்றுலா அபிவிருத்தி, கிறிஸ்துவ சமய அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் செலவுத் தலைப்புக்களில்  மீதான குழுநிலை விவாதத்தின் போது  இராஜாங்க அமைச்சர் எம்..எல்..ஏ.ஏம். ஹிஸ்புல்லாஹ் முஸ்லிம் சமூகம் இந்த நாட்டிலே எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆற்றிய உரை சம்பந்தமாக பேராசிரியர் றமீஸ் அப்துல்லா இன்று  (12) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையிலே – 

இஸ்லாம் மதமும், குர்ஆனும் தொடர்ச்சியாக நிந்திக்கப்பட்டு வருகின்றன. இதனால் முஸ்லிம் இளைஞர்கள் ஆத்திரமுற்றிருக்கின்றார்கள். இதனால் அவர்கள் ஆயுதமேந்த நேரிடும். முஸ்லிம் இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் அவர்கள் தமது ஆத்திரத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். எனவே, உயிர் மூச்சான இஸ்லாம் மதமும், குர்ஆனும் தொடர்ந்தும் நிந்திக்கப்பட்டால் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதைத் தடுக்க முடியாமல் போகும். அத்தகைய நிலைமை ஏற்பட்டால் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியதனால் ஏற்பட்ட பின்னடைவைப் போன்று முஸ்லிம் இளைஞர்கள் அயுதம் ஏந்தினால்  நாடு மேலும் 60 ஆண்டுகள் பின்னடைச் சந்திக்க நேரிடும் என இராஜாங்க அமைச்சர் எம்..எல்..ஏ.ஏம். ஹிஸ்புல்லாஹ் உயரிய சபையான பாராளுமன்றத்தில் எச்சரிக்கை செய்திருக்கின்றார்.

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஒரு அரசியல் கட்சியின் பிரதிநிதியாக இருந்து கொண்டு ஆற்றிய உரையானது ஒரு தேசிய கட்சியின் பிரதிநிதியாக இருந்து கொண்டு சொல்வதற்கும் இடையில் நிறைய வித்தியாசங்களை உணர வேண்டியிருக்கின்றது.

உண்மையில் ஹிஸ்புல்லாஹ் இவ்வாறு இஸ்லாமும், அல்-குர்ஆனும் நிந்திக்கப்பட்டால் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதை தடுக்க முடியாது. சபையில் ஆக்ரோசமாக எச்சரிக்கை விடுத்திருப்பதானது அவர் முஸ்லிம் தனிக்கட்சியிலான பாதையும் இருக்குமாக இருந்தால் அது ஒரு காத்திரமானதொன்றாக இருக்கும் என்ற அபிப்பிரயாயத்தை ஏற்படுத்தும்.
அதேநேரம் இதனை இன்னொருவகையில் பார்க்க வேண்டியிருக்கின்றது. அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தேசிய கட்சியின் பிரதிநிதியாக இருந்து கொண்டு அற்றியானது  ஜனாதிபதியும், பிரதமரும் மற்றும் அமைச்சர்களின் உள்ளங்களையும் ஈர்த்துள்ளது.

இன்றைய அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் மிக நிதானமாக தமது கருத்துக்களை சொல்ல வேண்டிய நிலைக்கு உட்பட்டிருக்கின்றோம். முஸ்லிம் 23 பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொண்டு ஒரு பெரும் சக்தியாக நாம் இயங்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனை நாம் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைமைகளான ரவுப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், அதாவுல்லா மற்றும் இன்றும் ஒரு தேசிய கட்சியின் பிரதிநிதியாக இருக்கின்ற ஹிஸ்புல்லாஹ் உட்பட அனைவரையும் ஒன்றுசேர்த்து பேச வருகின்ற போது இதற்கான சந்தர்ப்பம் கிடைக்கின்ற பொழுது இது இன்னும் அதிக அழுத்தத்தினை கொடுக்கும்.

இவ்வாறான சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்த முஸ்லிம் அரசியல் தலைமைகள் தவறவிடக் கூடாது. இதனை ஒரு அடியாகக்கொண்டு முஸ்லிம்களின் அரசியலில் பாரிய மாற்றங்களை கொண்ட வருவதற்கான முயற்சிகளிலும்நாங்கள் ஈடுபடலாம். அரசியல்வாதிகள் இவ்வாறான கருத்துக்களை தெரிவிக்க முடியும். அதனை அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சாதித்துக் காட்டியுள்ளார். அவர் ஒரு தேசிய கட்சியின்  பிரதிநிதியாக இருந்து கொண்டு அதனை சாதித்தக் காட்டி இருக்கின்றார். தேசிய கட்சியின் தலைவர்கள் தன்னுடைய குரலின் பக்கம் திருப்பியிருக்கின்றார். இது முக்கியமான சகுணம். இந்த சகுணத்தை பயன்படுத்திக் கொள்வதற்கு முஸ்லிம் அரசியல் தலைவர்கள்  தவறிவிடக் கூடாது.

தமிழர் உடைய அரசியல் வரலாற்றிலே இதுதான் நிகழ்ந்து இருக்கின்றது அவர்கள் தேசிய கட்சிகளை தமது குரல்களைக் கேட்குமாறு அழுத்தம் கொடுத்திருன்றார்கள்.  பலதரப்பட்ட போராட்டங்களுக்கு பின்னர் இன்று தமிழ் மக்களுடைய குரலையும் மற்றும் தமிழ் அரசியல் தலைவர்களுடைய குரலைக் கேட்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது. அதேநேரம் ஒரு முஸ்லிம் பிரதிநிதி தேசிய கட்சியில் இருந்து கொண்டு அந்த அரசாங்கத்தை தன்னுடைய குரலைக் கேட்குமாறு செய்திருக்கின்ற ஒரு சந்தர்ப்பத்தினை ஹிஸ்புல்லாஹ் ஏற்படுத்தியுள்ளார்.

எனவே, எதிர்காலத்திலே முஸ்லிம் அரசியல் தொடர்பாக நாங்கள் நிறைய விடங்கள் பற்றி மீள வாசிக்க வேண்டியிருப்பதுடன், ஒரு சரியான அரசியல் பாதையை வகுப்பதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்த அனைத்து முஸ்லிம் அரசியல் தலைமைகளும் கட்சி வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டும்.

(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

6 comments:

  1. எச்சரிக்கை விடுவதைவிட்டு முஸ்லிம்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள பிரச்சினைகளையாவது எடுத்துக்கூறுவதற்கு கூட முதுகெலும்பு இல்லாத ஹக்கீம் போன்றவர்கள் இதன்பிறகு சாரி உடுத்தி பாராளுமன்றம் செல்வதுதான் நல்லது .

    ReplyDelete
  2. முஸ்லிம்களுக்காக முதலில் குரல் கொடுப்பரவர் ரிஷாத் பதுர்தீன் அவர்ஹல்த்தான். நாம் அவரை மறக்கக்கூடாது. அப்படி மறந்தால் நாங்கள் நன்றிகெட்டவர்களாகி விடுவோம்.

    ReplyDelete
  3. அமைச்சர் ஹக்கீமுக்கு பட்டு சாரி வேணுமா? பாவாடை சட்டை வேணுமா?

    ReplyDelete
  4. LET us WORK to gather to achieve the PEACE and Do not make stage to Blame others or Advertise own self.

    It is the duty of EVERY MUSLIM Leaders and individuals to focus on solving the problem. Please Please do not waste time in creating more divisions by blaming others for their past mistakes.. Rather join them also to march toward achieving the peace that is needed for this land and its people.

    ReplyDelete
  5. Mp Hisbullah revield the true fact about ISS, which some intelligent can't even have a the knowledge to understand.
    You spotk at the time we need the voice in Parliament. We say excellent.

    ReplyDelete
  6. இப்ப எல்லாரும் தலைவர்கள்தான். ஆனால் தலமையின் கீழ் இல்லை??????

    ReplyDelete

Powered by Blogger.