Header Ads



கட்டாரில், இலங்கையர்கள் அடிமைகளா..?

கட்டாரில் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுப் பணியாளர்கள் அடிமைகளாக நடத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபையினால் இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

கட்டாரில் உலக கிண்ண காற்பந்தாட்டத் தொடருக்கான மைதான நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டுப் பணியாளர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

உரிய சம்பளம் வழங்கப்படாமல், நேரக் கட்டுப்பாடு இன்றி இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடுமையாக அங்கு வேலை வாங்கப்படுவதாக முன்னரே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலை தொடர்ந்தால் 2022ம் ஆண்டு அங்கு உலக கிண்ண தொடர் நடத்துவது தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தொழிலாளர்களின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான புதிய சட்டத்திருத்தங்களை கட்டார் அரசாங்கம் இன்று முதல் அமுலாக்குகிறது.

எனினும் இவ்வாறான சட்ட அமுலாக்கத்தின் பின்னரும் தொழிலாளர்கள் கடுமையாக நடத்தப்படக்கூடிய அபாயம் இருப்பதாக மன்னிப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது.

1 comment:

  1. தலைப்பும் விளக்கத்துக்கும் சம்பந்தம் இல்லையே.

    ReplyDelete

Powered by Blogger.