Header Ads



பேஸ்புக் தொடர்பில் முஸ்லிம்அரசியல்வாதி, பொலிஸில் முறைப்பாடு..!

நபரொருவரின் பேஸ்புக் மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது பற்றி அரசியல்வாதியொருவர் புகார் அளித்துள்ளதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இது விடயமான புகார் ஒன்றைத் தான் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் திங்கட்கிழமை (19) அளித்துள்ளதாக ஏறாவூர் நகர சபையின் முன்னாள் உறுப்பினரும், ஓய்வு பெற்ற ஆசியரும், முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத்தின் இணைப்பாளருமான ஜே.எம். முஸ்தபா தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து மேலும் தெரிவித்த அவர், நபரொருவர் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தனது பேஸ்புக்கில் விடயங்களைப் பதிவேற்றம் செய்துள்ளார். 

இதனால் என்னை இழிவுபடுத்தும் அபிப்பிராயங்கள் பதியப்படுகின்றன.இந்த விடயம் எனது கடந்த கால அரசியல் மற்றும் சமூகசேவைப் பணிகளைத் தரக்குறைவாக மதிப்பிடுவதாகவும் எனக்கும் எனது குடும்பத்துக்கும் அவமானத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளன.

எனவே, இது குறித்து விசாரிக்குமாறும் சம்பந்தப்பட்ட நபருக்கெதிராக நடவடிக்கை எடுக்குமாறும் எனக்கேற்பட்ட மானபங்கத்துக்கு இழப்பீடு தருமாறும் கேட்டிருக்கின்றேன் என்றார்.

இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருவதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

1 comment:

  1. அடுத்தவர்களை அவமானப்படுத்துவதற்கு இணையத்தளங்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.இவ்வாறான சந்தர்ப்பங்களில் அதற்கு சார்பாக கருத்திடுபவர்களும் சிக்கல்களுக்கு உள்ளாக நேரிடும்.ஷரிஆ ஒருவரது உயிர்,உடல்,உடமை,மார்க்கம் என்பவற்றைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பது போல் ஒருவரது மானத்தைப் பாதுகாப்பதையும் நோக்காகக் கொண்டுள்ளது.மனிதர்களின் மானத்தில் விளையாடுவதை இஸ்லாம் பாரதுாரமாகப் பார்க்கிறது.இணையத்தளங்களை, சமூக வலைத்தளங்களைப் பாவிக்கும் சகோதரர்கள் இதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும்.இனிவரும் காலங்களில் மனித சட்டங்களும் இதில் கடுமையாக கண்காணிப்பை மேற்கொள்ளும் என்ற செய்திகளும் வெளிவருகின்றன. அதற்குமப்பால் இழிவுபடுத்தப்பட்ட மனிதர்கள் மறந்தாலும் அல்லாஹ்வின் பதிவேட்டிலிருந்தும் தப்ப முடியாதென்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்வொமாக!

    ReplyDelete

Powered by Blogger.