Header Ads



இத்தாலியில் உள்ள, இலங்கையர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி

இலங்கை மோட்டார் போக்­கு­வ­ரத்து திணைக்­க­ளத்­தினால் வழங்­கப்­படும் செல்­லு­ப­டி­யாகும் சாரதி அனு­ம­திப்­பத்­தி­ரத்தின் மூலம் எதிர்­வரும் ஜன­வரி முதலாம் திகதி முதல் இத்­தா­லியில் வாக­னங்­களைச் செலுத்­து­வ­தற்கு அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக  இத்­தாலி தலை­நகர் ரோமில் அமைந்­துள்ள இலங்கை தூத­ரகம் தெரி­வித்­துள்­ளது.

இத்­தா­லியில்  வசிக்கும் இலங்­கை­யர்­க­ளிடம் காணப்­படும் சாரதி அனு­ம­திப்­பத்­தி­ரத்தின் செல்­லு­ப­டி­யாகும் தன்மை தொடர்பில் இலங்கை அர­சுக்கும் இத்­தாலி அர­சுக்­கு­மி­டையே புதிய உடன்­ப­டிக்கை  கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளதால் இந்த வரப்­பி­சாதம் கிடைக்­கப்­பெற்­றுள்­ள­தாக அந்­நாட்­டி­லுள்ள இலங்­கைக்­கான தூத­ரகம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யொன்றில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதற்­க­மைய இத்­தா­லியில் வசித்­து­வரும் 11 ஆயி­ரத்­துக்கும்  அதிகமான இலங்கையர்களுக்கு வரப்பிரசாதம் அளிக்கப்பட்டுள்ளதாக ரோமிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

(ரெ.கிறிஷ்­ணகாந்)


No comments

Powered by Blogger.