Header Ads



தரச்சான்றிதழ் இல்லாத, தலைக்கவசங்களுக்கு முற்றிலும் தடை

ஜனவரி முதலாம் திகதி முதல் தரச்சான்றிதழ் இல்லாத தலைக்கவசங்களை சந்தைக்கு விநியோகிக்கும் முறை முற்றிலும் தடை செய்யப்படவுள்ளது.

வீதி பாதுகாப்பு சம்பந்தமான தேசிய சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கோதாகொட இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

உரிய வகையில் தரச்சான்றிதழைப் பெற்றுக் கொண்டு தலைக்கவசங்களை தயாரிக்கும் காலப்பகுதி டிசம்பர் 31 என வரையறுக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஜனவரி 01ஆம் திகதி முதல் தரச் சான்றிதழ் அற்ற தலைக்கவசங்களை சந்தைக்கு விநியோகிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கையில் தலைக்கவசங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் 06 காணப்படுகின்றன.

இவற்றுள் 02 நிறுவனங்கள் தரச்சான்றிதழை பெற்றுக் கொண்டுள்ளது. இந்த மாதம் இறுதியில் ஏனைய நிறுவனங்களுக்கும் தரச்சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கை நிறைவடையவுள்ளது.

வருடந்தோறும் வீதி விபத்துக்களில் மரணிப்போரின் தொகை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அதனை தடுப்பதற்கான முதற் கட்ட அம்சமாகவே புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. எனவும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.