'முஸ்லிம் இளைஞர்களை சந்தேகிக்காதீர்' (விஜேதாஸ ராஜபக்ஷ சொன்ன, பொய்யின் விபரீதம் இது)
வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும் பல்வேறு தேவைகளுக்காகவும் துருக்கி விமானம் மூலம் துருக்கியூடாக பயணிக்கும் முஸ்லிம் இளைஞர்களை ஐ.எஸ். ஆதரவாளர்கள் என்றோ ஐ.எஸ்.ஸில் இணைந்து கொள்ள சென்றிருக்கிறார்கள் என்றோ சந்தேகக் கண்கொண்டு நோக்க வேண்டாமெனவும் விசாரணைகளை நடத்த வேண்டாமெனவும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் நகரத் திட்டமிடல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரேஸிலில் இவ்வாண்டு நடைபெற்ற (RIO) 2016 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில் தொண்டராகக் கடமையாற்றச் சென்ற முஸ்லிம் இளைஞர் ஒருவர் ஐ.எஸ். அமைப்பில் இணைந்து கொள்ளச் சென்றுள்ளதாகக் கூறி பொலிஸ் உளவுப் பிரிவினர் அவரது வீட்டுக்குச் சென்று பெற்றோரை விசாரணைக்குட்படுத்துவதால் தாம் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருவதாக இளைஞரின் தந்தை எம்.ஐ.எம். ஹசன் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் நேரிலும் கடிதம் மூலமும் புகார் செய்துள்ளமை தொடர்பில் வினவியபோதே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறினார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
இன்று பெரும்பாலான இளைஞர்கள் இவ்வாறு சென்று திரும்ப வருவதில்லை. அவர்கள் அவுஸ்திரேலியா, அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளில் தங்கி விடுகிறார்கள். இவ்வாறு தங்கி விடுவது தவறுதான் என்றாலும் அவர்கள் அந்நாடுகளில் தொழில் செய்கிறார்கள்.
குறிப்பிட்ட இளைஞர் துருக்கி விமான சேவையிலேயே குறைந்த கட்டணத்தில் பயணிக்க முடிகிறது என்பதால் அவ்விமான சேவையைத் தெரிவு செய்து தனது பயணத்தை ஆரம்பித்திருக்கிறார். துருக்கி விமான நிலையத்தில் பிரயாண மாற்றத்துக்காக (Transit) ஒரு மணித்தியாலம் 45 நிமிடங்களே தங்கியிருந்திருக்கிறார். பின்பு அங்கிருந்து நிவ்யோர்க் சென்றடைந்திருக்கிறார். இதற்கான அனைத்து ஆவணங்களும் அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடம் காண்பிக்கப்பட்டன.
பொலிஸ் உளவுப் பிரிவினர் குறிப்பிட்ட இளைஞர் ஐ.எஸ். உடன் தொடர்பு பட்டிருக்கின்றார் என்று அவரது தந்தையை விசாரித்து வருகின்றனர். ஐ.எஸ். உடன் எந்தவித தொடர்புமற்ற ஒருவரின் தந்தையிடம் உளவுப் பிரிவினர் விசாரணைகளை நடத்துகின்றனர். இது தொடர்பில் உளவுப் பிரிவினரை அறிவுறுத்துங்கள் என்று வேண்டியுள்ளேன். இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் சாகல ரத்நாயக்க உறுதியளித்துள்ளார் என்றார்.
ரியோ 2016 ஒலிம்பிக் போட்டியில் தொண்டராக கடமையாற்றுவதற்கான அழைப்பிதழ் கிடைக்கப் பெற்றே பலப்பிட்டியவைச் சேர்ந்த மொஹமட் ஹசன் ஹிஸ்னி மொஹமட் துருக்கி விமானத்தில் கடந்த 2016.07.31 ஆம் திகதி பயணமானார். அவர் நாடு திரும்பாது நிவ்யோர்க்கில் தங்கிவிட்டமை குறிப்பிடத்தக்கது.
நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷ 2016.11.18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஐ.எஸ். அமைப்பில் இலங்கையைச் சேர்ந்த 32 பேர் இணைந்துள்ளதாகக் கூறியதையடுத்து மூன்று தினங்களின் பின்பு அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உளவுப் பிரிவினர் குறிப்பிட்ட இளைஞர் தொடர்பான விபரங்களை அவரது தந்தையிடம் விசாரணை செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறு வேலைவாய்ப்புகளுக்காகவும் பல்வேறு தேவைகளுக்காகவும் இலங்கையிலிருந்து பயணிக்கும் முஸ்லிம் இளைஞர்கள் ஐ.எஸ். உடன் தொடர்புபடுத்தப்படுகிறார்கள். அவர்கள் தீவிரவாதிகளாக சந்தேகிக்கப்படுகிறார்கள் என்பதை முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உரைகளின் போது தெளிவுபடுத்த வேண்டும் என எம்.ஐ.எம். ஹஸன் விடி வெள்ளிக்குத் தெரிவித்தார்.
ARA.Fareel
நல்லாட்சி நம்மை கடுமையாக கஷ்டப்படுத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றது.உண்மையிலேயே இது ஒரு நன்றி கேட்ட கேவலமான வேலை.வெற்றியின் பின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்த ஜனாதிபதி மைத்திரி மிகவும் சந்தோசத்தோடு முஸ்லிம்களின் வாக்குப் பலத்தை கண் கலங்கும் அளவுக்கு பேசியதை எல்லாம் மறந்து விட்டார். ஆனால் காலம் இவருக்கு பதில் சொல்லும்.ஏற்க்கனவே ஒருவர் பன்சல பள்ளிகள் கோயில்கள் படி எரித்திரியும் காட்சி கண் முன்னே கண்டவர்கள் இவ்வாறு செய்வது அவர்களுக்கு நல்லதல்ல.
ReplyDeleteMY3 and Ranil You both have simply cheated the Muslims.
ReplyDeleteYou forget you past January 8th and the promises you made with the honest people who trusted and supported against to a government who failed to control the violence against to us.
I urge my Muslim brothers to INCREASE our TRUST on the CREATOR of THEM and US.. Who will give us peace and prosperity if obeyed him fully.
Leave the cunning foxes who only wanted their victory and use us as curry leaves.
IF MY3 and Ranil DO not ACT on promises, Do not waste your VOTES.