மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு கீழ் இஸ்ரேல் சுரங்கம் அகழ்வது, தலதா மாளிகைக்குகீழ் சுரங்கம் அகழ்வதற்கு சமம்
மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலுக்கு கீழ் இஸ்ரேல் சுரங்கம் அகழ்வது தலதா மாளிகைக்கு கீழ் சுரங்கம் அகழ்வதற்கு சமம். உலகில் பிரபல நாடுகள் வாக்களிக்கும் போது ஏன் இலங்கை வாக்களிக்கவில்லை என கேள்வி எழுப்பிய ஜே.வி.பி எம்.பி. பிமல் ரத்நாயக்க,
பலஸ்தீன் வாக்கெடுப்பில் மங்கள சமரவீர எடுத்த தீர்மானத்திற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 17 தூதுவர்களிடம் மன்னிப்பு கோரியதாக தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை வரவு – செலவுத் திட்டத்தின் வெளிவிவகார அமைச்சு செலவின தலைப்பிலான குழுநிலை விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்;
மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் தொடர்பாக சர்வதேச மட்டத்தில் நடத்தப்படும் முதல் வாக்கெடுப்பே யுனெஸ்கோ வாக்கெடுப்பாகும். இந்த வாக்கெடுப்பிற்கு ஜி 7, சார்க் உள்ளிட்ட நாடுகள் அனைத்தும் வாக்களித்துள்ளன.
குறிப்பாக அமெரிக்கா, இந்தியா தவிர பிரபல பலம் வாய்ந்த நாடுகள் வாக்களித்துள்ளன. ஆனால் இலங்கை ஏன் வாக்களிக்கவில்லை.
மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலின் கீழ் இஸ்ரேல் சுரங்கப் பாதை அகழ்வில் ஈடுபட்டு வருகிறது.
இதற்கு எதிராகவே சர்வதேச நாடுகள் இந்த வாக்கெடுப்பை கோரியது. இந்நிலையில் சார்க் நாடுகளுக்கோ, ஜி 7 நாடுகளுக்கோ சாராமல் எப்படி தனி தீர்மானம் எடுக்க முடியும். இது தலதா மாளிகையின் கீழே சுரங்கம் அகழ்வதற்கு சமமாகும்.
வெளிநாட்டு கொள்கையை மங்கள சமரவீரவினால் தீர்மானிக்க முடியாது. அமைச்சரின் மோசமான தீர்மானத்தின் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 17 தூதுவர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.
இது பிழையான தீர்மானம், பாலஸ்தீன் மீதான இலங்கை கொள்கை மாறியுள்ளதா? இதன்போது எழுந்து பேசிய வெளிவிவகார பிரதி அமைச்சர் ஆர்.டி.சில்வா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்தவொரு தூதுவரிடமும் மன்னிப்புக் கோரவில்லை என்றார்.
இதனை தொடர்ந்து பேசிய பிமல் ரத்நாயக்க, அது உங்களுடைய கருத்தாகும். ஆனாலும் மன்னிப்புக் கோரியதாக எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. ஆகவே இலங்கையின் அணிசேராக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றார். விடிவெள்ளி
Thanks MP V Rathnayaka.
ReplyDeleteYou spoke at the time of our Muslim MP's don't even open there mouth to voice against the world dissaster by occupied Palastin.