Header Ads



கணிதப்பாட பரீட்சையை விரும்பாத, மாணவன் போட்ட கடத்தல் நாடகம்

கபொத சாதாதரண தர பரீட்சையில் கணித பாடத்திற்கான பரீட்சை இன்று நடைபெற்ற போது, அதனை எழுத விரும்பாத மாணவன் போட்ட கடத்தல் நாடகம் அம்பலமாகியுள்ளது.

விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போது வேனில் வந்த குழுவொன்று தன்னை கடத்தி சென்றதாக கூறிய 17 வயதுடைய மாணவன் இன்று மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் இன்று காலை கைவிடப்பட்ட நிலையில் தங்கொட்டுவ பிரதேசத்தில் எண்ணெய் ஆலையில் இருந்து கண்டுபிடித்துள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடத்தி சென்றவர்கள் தன்னை விடுவிக்க வேண்டும் என்றால் 8 கோடி ரூபா பணம் வழங்குமாறு பாடசாலை மாணவர் தொலைப்பேசி அழைப்பின் ஊடாக தனது தந்தைக்கு அறிவித்துள்ளார்.

அதன் பின்னர் தந்தையினால் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் பின்னர் தொலைப்பேசி அழைப்பு வந்த இலக்கத்தை கொண்டு விசாரணை மேற்கொண்ட பொலிஸார் மாணவனை கண்டுபிடித்துள்ளனர்.

கல்வி பொதுத்தர சாதாரண தர பரீட்சை எழுதும் குறித்த மாணவர் இன்றைய தினம் உள்ள கணித பரீட்சை எழுத விரும்பாதமையினால் இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

பணம் கோருவதற்காக தனது தந்தைக்கு அழைப்பேற்படுத்திய தொலைப்பேசி இலக்கம் குறித்த மாணவரின் நண்பர் ஒருவருடையது எனவும் பொலிஸ் விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுகின்ற இந்த மாணவரின் நண்பர்கள் இருவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.