Header Ads



பர்தா அணிந்து, பரீட்சை எழுத பிரச்சினையா..? உடனே தொடர்பு கொள்ளுங்கள்..!

-ரிம்சி ஜலீல்-

குளியாப்பிட்டிய கல்வி வலயத்திற்குற்பட்ட பண்டாரகொஸ்வத்த மற்றும் மடிகே மிதியால மத்திய கல்லூரி மாணவர்கள் பண்டாரகொஸ்வத்த சிங்கள
மகாவித்தியாளயத்தில் சாதாரன தரப்பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர் அங்கு
அந்த முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்துகொண்டு பரீட்சை எழுதுவதற்கு
தடைவிதிக்கப்பட்டுள்ளமை பெற்றோர்கள் மத்தியில் கடும் விசனத்தை
ஏற்படுத்தியுள்ளது.

பரீட்சையின் முதல் நாள் பண்டாரகொஸ்வத்த சிங்கள மகாவித்தியாளயத்தின் முதலாம் இலக்க அறையில் இருந்த முஸ்லிம் மாணவிகளை மாத்திரம் தமது பர்தாவை களைந்து விட்டுப் பரீட்சை எழுதுமாறு வற்புறுத்தினர் எனவே அந்த மாணவிகள் அனைவரும் தமது பர்தாக்களை களைந்துவிட்டு முதல் நாள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்

இந்த நிலையில் சம்பவம் பற்றி அறிந்துகொண்ட பண்டாரகொஸ்வத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னால் பிரதேச சபை உறுப்பினர் பைசல் மந்திரிதுமா மற்றும் பெற்றோர்கள் இது தொடர்பில் வடமேல் மாகாணசபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரனி ரிஸ்வி ஜவஹர்ஷாவைத் தொடர்பு கொண்டு நிலைமையை கூறியுள்ளனர்.

இதனையடுத்து அந்த விடையம் தொடர்பில் வடமேல் மாகாணசபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரனி ரிஸ்வி ஜவஹர்ஷா பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் வலயக் கல்வி அலுவலக பதில் கல்விப் பணிப்பாளர் போன்றோரின் கவனத்திற்க்குக் கொண்டுவரப்பட்டு பிரச்சினை சுமூகமான முறையில் தீர்த்து வைக்கப்பட்டது.

மேலும் குருநாகல் மாவட்டத்தில் இது போன்ற பிரச்சினைகள் முஸ்லிம் மாணவர்களுக்கு ஏற்பட்டால் 0777259707 / 0756682323 என்ற இலக்கத்திற்க்கு
உடனடியாகத் தொடர்பு கொண்டு அதனை அறிவிக்குமாறு வடமேல் மாகாணசபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரனி ரிஸ்வி ஜவஹர்ஷா கேட்டுக் கொண்டார்..

No comments

Powered by Blogger.