Header Ads



முஹம்மது நபியை கற்றுக்கொள்ளும், அமெரிக்கா இராணுவம்


முஸ்லிம்களாகிய நாம் எமது உயிரிலும் மேலான நபிகள் நாயகத்தை ஒரு மார்க்கப் போதகராக மட்டுமே பார்க்கிறோம். ஆனால் அமேரிக்க இராணுவ வரலாற்றாசிரியர்கள் அல்லாஹ்வின் தூதரை ஒரு இராணுவ தளபதியாக அவருடைய வரலாற்றை எழுத ஆரம்பித்துள்ளது என்பதை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

அமேரிக்க இராணுவத்துறையின் முக்கியஸ்தளமான பென்டகனில் உள்ள இராணுவ வரலாற்றாசிரியர்கள், கடந்த கால போர்முறைகளை, அவைகளில் உள்ள யுத்த தந்திரங்கள், போர் தளபதிகளின் வாழ்க்கை போன்றவற்றை தொகுத்து, அமேரிக்க இராணுவ வீரர்களுக்கு வழிகாட்டக்கூடிய வகையில் அவைகளை நூல்களாக அல்லது சஞ்சிகைகளாக வெளியிடுவார்கள்.

அப்படியான ஒரு சஞ்சிகையே எம்.எச்.கியு என அழைக்கப்படும் “இராணுவ வரலாறு” என்பதாகும். இது இராணுவ வரலாற்று ஆய்வுகளுக்கான சஞ்சிகை. இச்சஞ்சிகையின் வாசகர்கள் பிரதானமாக அமெரிக்கப் படைப்பிரிவினர்களாவர். 22,000 பிரதிகள் விற்பனையாகும் இச்சஞ்சிகையில் அமெரிக்காவைச் சேர்ந்த இராணுவ வரலாற்றாய்வாளர்களே எழுதுவர். அப்பத்திரிகையில் அண்மையில் வெளிவந்த ஆய்வுத் தலைப்பு எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

“முஹம்மத் - ஒரு தனித்துவ மிக்க இராணுவ அறிவு ஆளுமை” இதுவே அந்த தலைப்பு

இந்த ஆய்வை ரிட்ஷட் கப்ரீல் என்ற வரலாற்றாசிரியர் எழுதியுள்ளார். கப்ரீல் அமெரிக்க மத்திய உளவு ஸ்தாபனத்தில் பணி புரிந்தார். அவர் நான்கு நூல்களின் ஆசிரியர். இப்போது கனடாவில் அரச இராணுவக் கல்லூரியில் “வரலாறும் அரசியலும்” என்ற துறையில் விரிவுரையாளராக உள்ளார்.

இதில் பல நபிகள் நாயகத்தை பற்றி தவறான கருத்துகள் உள்ளன. இருந்தாலும் அமேரிக்க இராணுவம் முஸ்லிம்களை கொள்வதற்கு பயன்படுத்தும் யுத்த தந்திரங்கள் இஸ்லாத்தில் இருந்தே பிரதி செய்யப்படுகின்றன என்பது உண்மையாகும்.

அதில் குறித்த ஆய்வாளர் “இறை தூதர் (ஸல்) அவர்களின் தனித்துவமான இராணுவ நோக்கும், சாணக்கியமும் இல்லாதிருந்தால் இஸ்லாம் நிலைத்திருப்பதோ, எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி கொண்டிருப்பதோ, பரவியிருப்பதோ சாத்தியமற்றுப் போயிருக்கும்.”

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இராணுவத் தளபதி என்றவகையில் வெற்றிகரமானவராக இருந்திராவிட்டால் அவர்களது மரணத்தின் பின்னர் பாரசீக, ரோம் என்ற இரு பெரும் சாம்ராஜ்யங்களை வெற்றி கொண்டிருப்பது சாத்தியமில்லை.”

“இறை தூதர் (ஸல்) ஒரு முதல் தரமான இராணுவத் தளபதி. அவர்கள் ஒரு தசாப்த காலத்திற்குள் யுத்தங்களுக்குத் தலைமை தாங்கினார்கள். 18 படையெடுப்புக்கள் நடாத்தினார்கள். வரையறுத்த 38 இராணுவ நடவடிக்ககைகளுக்குத் திட்டம் வரைந்தார்கள்.

'இறைத் தூதர் அவர்கள் வெறும் சாணக்கியம் மிக்க இராணுவத் தளபதியாக மட்டுமன்றி, இராணுவக் கொள்கை வகுப்பாளராகவும், புரட்சிப் போராளியாகவும், நீண்டகால திட்டவரைவு(Strategy) சிந்தனையாளராகவும் இருந்தார்கள். இறைத் தூதர் (ஸல்) உருவாக்கிய உளவுப் பிரிவை விவரிக்கும் ஆய்வு அது அக்காலப் பிரிவில் காணப்பட்ட ரோம, பாரசீக சாம்ராஜ்யங்களின் உளவுப் பிரிவையும் விட மேம்பட்டுக் காணப்பட்டதாகக் குறிப்பிடுகிறது.

அறபிகளுக்கு மத்தியில் பிரதான நகர்களுக்கு வெளியே சிறு சிறு பாலைவனச்
சோலைகளை அண்டி வாழ்ந்தோரும், நகர்களில் வாழ்ந்தோரும் காணப்பட்டனர். முதற் பிரிவினர் சாதாரண போராளிகளைக் கொண்டிருந்தனர். அடுத்த பிரிவினர் திறமைமிக்க போராளிகளைக் கொண்டிருந்தனர். இறைத்தூதர் அவர்கள் முதற் பிரிவினரை சிறந்த காலாற் படையினராகவும், இரண்டாம் பிரிவினரை தலைசிறந்த குதிரைப் படையினராகவும் அமைப்பதில் வெற்றி கண்டார்கள்.

இஸ்லாத்திற்கு முன்னர் அரபிகள் தம் நேரடி குறுகிய நலன்களில் கவனம் செலுத்துபவர்களாகவே காணப்பட்டனர். எனவே மிகச் சிறு படையெடுப்புகளே
காணப்பட்டன. பொருட்களை சூறையாடிச் செல்லும் சிறு தாக்குதல் நடவடிக்கைகளே காணப்பட்டன. இறைத்தூதர் அவர்களே முதலில் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டுப்பாடான இராணுவமாக அமைத்தார்கள்.

கோத்திரம் என்ற குறுகிய எல்லையினுள் அந்த நலன்களுக்காகப் போராடி வந்த அரபிகளை 'உம்மா என்ற கொள்கைவாத விரிந்த எல்லையுள் போராடும் இராணுவமாக இறைத்தூதர் மாற்றினார்கள். இந்த வகையில் அரபிகளின் போர் முறையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை இறைதூதர் அவர்கள் ஏற்படுத்துவதில் வெற்றி கண்டார்கள்.

“இறைத்தூதர் அவர்கள் எட்டு இராணுவ சீர்திருத்தக் கொள்கைகளை முன்வைத்தார்கள். அவை அரபிகளின் இராணுவப் படையணியின் அமைப்பிலும் கொள்கையிலும் பாரிய மாற்றங்களை உருவாக்குவதில் பாரிய
செல்வாக்கு செலுத்தின"

என அந்த எட்டு இராணுவ சீர்திருத்தங்களையும் அழகாக விளக்கி, இராணுவ வீரர்களுக்கு பாடம் நடத்துகிறார் ரிட்ஷட் கப்ரீல்.

முஹம்மது (ஸல்) அவர்களின் வரலாறு எமது எதிரிக்கு இராணுவ பாடம் நடத்துகிறது. ஆனால் நாம் இன்னும் கையில் தஸ்பீஹ் மணியை உருட்டிக்கொண்டும், நபிகள் நாயகத்துக்கு பிறந்த நாள் கொண்டாடிக்கொண்டும் இருக்கிறோம்.

நபிகள் நாயகத்தை, போர் உபாயங்களை அறிந்து கொள்ளும் ஓர் இராணுவ பயிற்சியாளராகவும் முஸ்லிம் சமூகம் பார்ப்பது காலத்தின் தேவை

-இப்னு அப்துல் லத்தீப்-

4 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ்
    இதுபோன்ற ஆக்கங்கள் எப்போதும் முஸ்லிம்களால் பார்க்க(வாசிக்க)ப்படவேண்டும், தமிழில் தரும் அதே வேளை ஆங்கிலத்திலும் எழுதுவது இன்றைய(அநேகமானவர்கள் ஆங்கிலத்தை அறிவாக பார்த்து தமது பிள்ளைகளை ஆங்கில மொழி பாடசாலையில் சேர்த்துள்ளார்) காலத்தின் தேவை

    ReplyDelete
  2. Brother Ibnu Abdul Latheef May Allah Bless you for your above article.

    ReplyDelete
  3. This article have some contradictions.
    Dear author! Read carefully what is the conclusion of this article.
    The American books clearly trying to expose a message that Islam was grown by war. You also translated and posted it as an article without thinking what was the conclusion of their books.

    Our prophet (pbuh) is a best commander in the world. he didn't create war but he fought with whome came to destroy the Muslims.

    So, this article exposed some wrong conclusions. It's better to revise this article without harming the conclusion.

    ReplyDelete
  4. நபி நாயகத்துக்கு பிறந்தநால் கொன்டாடுவதை கூடாதென்று அந்த நபி வந்து சொன்னாலும் இந்தக்கூட்டம் ஏற்றுக்கொல்லமாட்டார்கல்

    ReplyDelete

Powered by Blogger.