Header Ads



நீதியமைச்சரின் மடியில், இனவாத இயக்கங்கள்

கடந்த ஆட்சியில் பொதுபல சேனாவின் காரியாலயத்தை ஹாமதுருமார்கள் அழைப்பை ஏற்று பௌத்தர் என்ற வகையில் அதனை கோத்தாபய திறந்து வைத்ததை கடுமையாக குற்றம் சாட்டிய முஸ்லிம் சமூகம் இப்போது ஐக்கிய தேசிய கட்சியின் நீதி அமைச்சர், பொதுபல சேனா, சிங்ஹ லே, ராவண பலய என அனைத்து இனவாத இயக்கங்களையும் தனது மடியில் வைத்துக்கொண்டு திரிவதை  முஸ்லிம் சமூகம் பாராட்டுகின்றதா? என உலமா கட்சித்தலைவர் கேள்வி எழுப்பினார்.

கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

பொதுபல சேனா நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து விட்டது என்பதே உண்மை. நீதி அமைச்சர் மற்றும் ஜனாதிபதியின் அணுக்கிரகம் ஞான சார தேரருக்கு கிடைத்திருப்பதால் இனி அவர் வீதியில் இறங்கி சத்தமிட மாட்டார் என்றும் அவரும் அரசாங்கத்துடன் இருப்பதால் முஸ்லிம்களுக்கெதிரான அனைத்து விடயங்களும் இனி அரச அணுசரணையுடன் நடக்கும் என கடந்த வாரம் நாம் கூறியிருந்தோம். நாம் சொன்னது போன்று இப்போது அரசின் அமைச்சர் நேரடியாக பொதுபல சேனாவுக்கு உதவுவதை காண்கிறோம். அந்த வகையில் அனைத்து பேரினவாதிகளும் நீதி அமைச்சரால் அரச மரியாதையுடன் மட்டக்களப்புக்கு அழைத்துச்செல்லப்பட்டு வந்துள்ளனர். மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பும் ஐ தே க மற்றும் ஹெல உறுமயவின் திட்டத்தை சிறப்பாக செய்தமைக்காக ஞானசாரவுக்குரிய இத்தகைய பரிசு கிடைத்துள்ளது. 

கடந்த ஆட்சியில் மஹிந்த ராஜபக்ஷ ஞானசாரவுக்கு நேரடியாக உதவாத நிலையிலும் அவர் அவர்களை கட்டுப்படுத்தாமைக்காக நாம் குற்றம் சொன்னோம். ஆனால் முஸ்லிம்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற இந்த அரசாங்கம் ஞானசாரவை பங்காளியாக வைத்துக்கொண்டு செயற்படுகிறது. அரசுடன் அவர்கள் இணைய வேண்டுமென்பதற்காக டயஸ் போராவின் தரகராக செயற்படும் கொழும்பு முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் ஜம்இய்யத்துல் உலமாவையும் அழைத்துக்கொண்டு நீதி அமைச்சருடன் பேச்சு வார்த்தைக்கு போனதை சந்தர்ப்பமாக பாவித்து ஞானசாரவுடனும் பேச வேண்டுமென கூறி அவரோடும் பேசி அவரை அரச ஒத்துழைப்பில் இயங்க வைத்துள்ளனர். இத்தகைய சதிக்கு துணை போன கொழும்பு முஸ்லிம் அரசியல்வாதி பற்றி சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். 

ஆகவே முஸ்லிம் சமூகம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். நமது உரிமைகள், வாழ்விடங்கள் ஒவ்வொன்றாக பறிபோவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகவே உள்ளன. இந்த நிலையில் முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்குரலாக செயற்படும் எம்மை பலப்படுத்த முன்வருவதன் மூலம் ஓரளவாவது நமது எதிர்பப்பை காட்ட முடியும் என முபாறக் மௌலவி தெரிவித்தார்.

2 comments:

  1. நல்ல பதிவு.. இவர் எந்த கட்சியை பிரதிநிதித்துவம் செய்கிறார்.? அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இவருக்கு பதவி ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் மகிந்தைக்கு சார்பாக தொடர்ந்து அறிக்கை விடுகிறார். அவரையும் பலப்படுத்துமாறு கேட்கிறார்... குழப்பமாக இருக்கிறது...

    ReplyDelete
  2. stop your topic. you supporting to mahinda?

    ReplyDelete

Powered by Blogger.