அதிகரித்த சம்பளம் வேண்டாம் - ரஞ்சன் ராமநாயக்கா
நாடாளுமன்ற உறுப்பினர்களின் நாளாந்த வருகைக்காக அதிகரிப்பட்டுள்ள 2 ஆயிரத்து 500 ரூபா கொடுப்பனவை பெற்றுக்கொள்ளப்போவதில்லை என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த கொடுப்பனவு அதிகரிக்கப்படுவதை நிராகரிக்கும் தனது தீர்மானத்தை சபாநயகர் கரு ஜயசூரியவுக்கு இன்று கடிதம் மூலம் அவர் அறிவித்துள்ளார்.
அத்துடன், இந்தக் கடிதத்தின் பிரதியை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கும் அனுப்பிவைத்துள்ளார். அந்தக் கடிதத்தல் அவர்,
பாரியளவு அரச படுகடன் இருக்கின்ற நிலையில், நாட்டு மக்கள் அரசாங்கத்துக்கு பெரும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், மக்கள் பிரதிநிதி என்ற வகையில், அதற்கு ஈடாக என்னால் அர்ப்பணிப்பு செய்யப்பட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட எண்ணமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற வருகைக்கான கொடுப்பனவு 500 ரூபாவிலிருந்து 2 ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தக் காரணத்தை அடிப்படையாகக் கொண்டு அதிகரிக்கப்பட்ட கொடுப்பனை நான் நிராகரிக்கின்றேன் என்பதை தாழ்மையுடன் அறியத் தருகின்றேன்.
அத்துடன், குறித்த பணத்தை எனக்கு வழங்காதிருக்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எனத் தெரிவித்துள்ளார் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க.
Great example...
ReplyDeleteHon.Ranjan is a great example in this government. Others can follow him
ReplyDelete