பேஸ்புக் + இணையத்தளத்தினால் பாதிப்படையும் பெண்களின் தொகை அதிகரிப்பு
சமூக வலைத்தள மோசடிகளின் ஊடாக இலங்கையில் பாதிப்படையும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் அறிவித்துள்ளது
இதன்படி குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சைபர் கிறைம் தொடர்பில் மாதாந்தம் சுமார் 500 முறைப்பாடுகள் கிடைப்பாதாகவும் இதில் அனேகமாக பாதிப்புக்குள்ளாவது பெண்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
முகநுல் மற்றும் இணையத்தளத்தின் ஆழம் அறியாமல் புதிய முயற்சியில் ஈடுபட முனைவதன் விளைவாகவே ஆனேகமான பெண்கள் பாதிப்புக்களுக்கு முகம் கொடுக்க நேடிடுவதாக அவர் கூறியுள்ளார்.
கிடைக்கப்பெறும் முiறப்பாடுகளில் பாரதுரமானவை உடன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்ற போதிலும் பாதிப்புக்குள்ளாகும் பெண்களின் புகைப்படம் அல்லது வீடியோ காட்சிகள் இணையத்திலிருந்து அகற்றப்படுவதற்கு முன்பாக அவை குறிப்பிட்ட செக்கன்களுக்குள் பல்வேறு தரப்pனர்கள் இடையிலும் துரிதமாக பகிரப்படுவதன் காரணமாக இது குறித்து பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி அதிகம் என்றும் அவ் அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இதுவரை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் பாரதுரமானவை முறையான விசாரணைகளுக்குப் பின்னர் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுளளளனர் இருப்பினும் இதற்கு குறிப்பிட்ட காலப்பகுதி அவசியமாகின்றது இந்த காலப்பகுதிக்குள் சந்தேக நபரின் திட்டம் நிறைவேற்றப்பட்டு விடுகின்றது என்பதனால் இவ்விடயம் தொடர்பில் பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டியது அவசியம் என்றும் குற்றப்புலனாய்வு திணைக்களம் கேட்டுக்கொள்கின்றது
பாதிப்புக்குள்ளாகி முறைப்பாடு செய்ய வரும் பெண்களில் 25 தொடக்கம் 40 வயதிற்கு இடைப்பட்ட பெண்களே அதிகம் என்றும் அவ்வதிகாரி குறிப்பிட்டள்ளார். இவர்களைத் தவீர, பாடசாலை மாணவிகளும் சைபர் கிறைம் காரணமாக பல்வித பாதிப்புக்களுக்கு உள்ளான சம்பவங்கள் குற்றப்புலனபய்வு திணைக்களத்தில் பரிவாகியிருப்பதாக அவ்வதிகாரி தெரிவித்தார்.
மாணவிகளை பொருத்தவரை பொழுது போக்கு அல்லது கண்முடித்தனமான காதல் காரணமாகவே இவ்வாறான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கநேடிடுவதால் பெற்றோர்கள் தமது பெண் பிள்ளளைகளின் நடவடிக்கை மற்றும் தொழினுட்ப பாவனை குறித்து அவதானத்துடன் இருத்தல் அவசியம் என்றும் குற்றப்புலனாய்வு திணைக்களம் வலியுறுத்தியுள்ளது
இதேவேளை ஏனைய பெண்களை பொறுத்தவரை திருமணமாகாதவர்கள் , திருமணமாகியும் தனிமையிலிருப்போர் அல்லது விவாகரத்து ஆனேரே முகநுல் அல்லது இணையத்தில் முன்பின் தெரியாதவர்களுடன் புகைப்படங்களை பரிமாறி உரையாட்லை தொடர்வதன் முலம் நாளடைவில் சிக்கலை சந்திப்பதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் வலியுறுத்தியுள்ளது
புpரச்சனை தீவிரமடைந்ததும் பெண்கள் குற்றப்புலihய்வு திணைக்களாத்திற்கு வந்து கதறியழுகின்றார்கள் இனையத்தில் பகிரப்பட்டுள்ள படத்தை பார்ப்பதற்கு விசாரனைகளை முன்னேடுக்கும் அதிகாரிகளுக்கே கூச்சம் ஏற்படுகின்றது இதனால் உங்களக்கு மிகவு;ம் நெருக்கமான , உண்மையுள்ளவர் என்ற நம்பி;க்கையை உறுதி செய்யாத எவரிடமும் அந்தரங்க தகவலையோ படங்களை பரிமாறுவதையோ உடன் நிறுத்துவதே பாதுகாப்பானது ஆகும்
முகநுலில் நுழைவதற்கு முன்பதாக பல விதி முறைகள் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் இவற்றிற்கு இணங்கிய பின்னரே நாம் அதில் செயற்பட முடியும் எனினும் அவை குறித்து பூரண விளக்கம் இல்லாதவர்கள் முன்பின் தெரியாதவர்களிடம் நட்பினை ஏற்படுத்துதல் பாதிப்பைக் கொண்டுவரும் மேலும் முகநுலை பயன்படுத்தும் ஒவ்வொரு நபரும் தாம் பகிரும் விடயங்கள் நண்பர்களுடனோ அல்லது பொதுவாகவோ பகிரப்படுகின்றது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
சைபர் கிறைம் காரணமாக பல பெண்கள் தமது உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலை கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ளது இநி நிலையை தவிர்ப்பதற்காக, இச் சம்பவம் தொடர்பில் இயலுமான வரையில் மிக வரைவில் குற்றப்புலனாய்வு தினைக்களத்திற்கு முறைப்பாடு செய்யமாறும் கேட்டுக்கொண்டார்.
Post a Comment